உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கொலிஜியம் அமைப்பில் வெளிப்படைத்தன்மை இல்லை என்பது சரியல்ல: சந்திர சூட் பேட்டி

கொலிஜியம் அமைப்பில் வெளிப்படைத்தன்மை இல்லை என்பது சரியல்ல: சந்திர சூட் பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கொலிஜியம் முறையிலான நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என கூறுவது சரியல்ல, இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தெரிவித்தார்.உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில், 'கொலிஜியம்' முறை, பின்பற்றப்பட்டு அதனடிப்படையில்உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மூத்த நீதிபதிகள் அடங்கிய குழு, நீதிபதிகள் நியமனங்களை மேற்கொண்டு வரும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.இதில் வெளிப்படைத்தன்மை இல்லை என புகார்கள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.இது தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பி.டி.ஐ., செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி,கொலிஜியம் அமைப்பில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று கூறுவது சரியல்ல. உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமன விவகாரத்தில், ஒரு நீதிபதியை நியமிக்கும் முன் தகுந்த ஆலோசனை பெற்று சரியான செயல்முறையை பின்பற்றி. அதில் அதிக வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு, அதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

அப்புசாமி
ஜன 02, 2024 11:29

பி.எம் கேர் லிஸ்ட் மாதிரி அவ்வளவு வெளிப்படைத் தன்மை இருக்கு.


Sathyam
ஜன 02, 2024 10:21

மிகவும் திறமையற்ற ஊழல் நிறைந்த காவல்துறை/நீதித்துறை அமைப்புகள் சீர்திருத்தப்பட்டு சுத்தம் செய்யப்படாமல் இருக்கும் வரை, பல கரும்புலிகள், விஷக் கரையான்கள் போன்ற எந்த மாநிலத்தையும் சேதப்படுத்த உள்ளுக்குள் துரோகிகள். மிக மோசமான பரிதாப நிலை


Sathyam
ஜன 02, 2024 10:19

உச்ச நீதிமன்றத்தின் மிக மோசமான சாபம் என்ன, அவர்கள் ஏன் தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்கவில்லை?


Dharmavaan
ஜன 02, 2024 07:56

கொலீஜியும் முறை நீக்கப்பட வேண்டும் இது பாராளுமன்றத்துக்கு அவமானம் காரணம் மக்கள் பாராளுமன்றத்துக்கே அதிகாரம் கொடுத்துள்ளனர் நீதி துறைக்கு அல்ல.பாரபட்சமானது இந்த முறை ரகசியமானது .இது உயர் உச்ச நீதி மன்றத்துக்கு மட்டுமே கீழ் நீதிமன்றங்கள் மாநில கட்டுப்பாட்டில் என்பதே பாரபட்சம். இதனால் திமுக அமைச்சர்களுக்கு சாதகமான தீர்ப்புகள் மத்திய அரசை கேவலப்படுத்துவதே இது. ஒழிக்கப்பட வேண்டும்


Dharmavaan
ஜன 02, 2024 07:51

ithu


NicoleThomson
ஜன 02, 2024 06:54

கொலிஜியம் என்பது மக்களின் வரிப்பணத்தில் நடைபெறுவது , அதில் வெளிப்படைத்தன்மை என்பது மிக முக்கியம் , சர்வாதிகாரிகள் போல நடந்து கொள்வது தவறு தமிழகத்தில் பொன்முடி , கர்நாடகத்தில் டிகே சிவகுமாரின் கேஸ்கள் முடிக்கப்பட்ட விதம் காணும்போது நீதிமன்றங்களின் மீதே நம்பிக்கை இல்லாமல் போகிறது , இதற்க்கு பதில் சொல்வாரா ?


Rpalnivelu
ஜன 02, 2024 06:52

நீதிபதிகள் தேர்வுக்கு மிகக் கடுமையான தேர்வு முறை கண்டிப்பாக வேணும். நீதிபதிகள் தங்களை தாங்களே தேர்வு செய்து கொள்வது /நியமனம் செய்வது சரியல்ல. கொலிஜியம் முறை வரையறுக்கப் படணும்


sankaranarayanan
ஜன 02, 2024 05:50

நீதிமன்றங்கம் நீதித்துறைகளில் முன்னேற்றம் கானவேண்டும் தேவையில்லாதவற்றை அரசியலாக்குவது நாட்டிர்க்கே உகந்தது அல்ல. அமெரிக்க போன்ற பெரிய நாடுகளில் செனட்டு அனுமதிக்க கொடுத்தால்தான் அவர் நீதிபதி ஆகமுடியும் நீதிபதிகளை தேர்ந்தெடுப்பது இடத்திற்கு இடம் மாற்றுவது உயர் பதவி கொடுப்பது எல்லாமே எக்சிகியூடிவ் வேலை உச்ச நீதி மன்றத்தை கலந்து ஆலோசிக்கலாம் ஆனால் அவர்களை தேர்ந்தெடுப்பது அதாவது ஆளும் அரசாங்கதின் வேலைகள் இதை உச்ச நீதிமன்றம் தானே எடுத்துக்கொண்டு அமல்படுத்துவது நிதிமன்றத்திற்கே அழகே இல்லை இலை இல்லை. தேவையில்லாமல் மூக்கை நுழைப்பது போலத்தான் ஆகும்


NicoleThomson
ஜன 02, 2024 07:55

சரியாக சொன்னீர்கள்


GMM
ஜன 01, 2024 21:54

நீதிமன்ற கொலீஜியம் (தங்களை தாங்களே தேர்வு செய்யும் முறை) வெளிப்படையாக இருந்தாலும் சிறந்த தேர்வு முறை அல்ல. வழக்கறிஞர்கள் வக்காலத்து முதல் தீர்ப்பு வரை எந்த நிர்வாக நடைமுறையும் பின் பற்றுவது இல்லை? நீதிமன்றத்தில் முறையிட வாய்ப்பு இல்லை. பாதிக்கப்பட்ட மக்கள் படும் துயர் அதிகம். நீதிமன்ற சுயாட்சி மூலம் வழக்கறிஞர்கள் அதிகம் பலன். மற்றும் ஊழல் அரசியல்வாதிகள் அரசு நிர்வாகத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்து விட்டனர். நாட்டின் பொருளாதார, பாதுகாப்பிற்கு அதிகம் பொறுப்பு இல்லாத நீதிமன்றம் மற்றும் மாநில அரசுகள் தேவையில்லாத அதிகாரத்தை எடுத்து கொண்டு வருகின்றனர். (தமிழக முதல்வர் புதிய பாதுகாப்பு வாகனங்கள் இன்றய சாட்சி) எதற்கும் சட்ட விதிகள் மற்றும் மரபு தேவை. எல்லாவற்றிக்கும் வெளிப்படை கூடாது. (கவர்னர் முடிவு)


Dharmavaan
ஜன 02, 2024 07:59

பாதிக்கப்பட்டவனுக்கு பொது மக்களுக்கு பதில் சொல்லாத ஒன்று நீதி மன்றம் இது ஒரு சூப்பர் அரசோ இணை அரசோ அல்ல பாராளுமன்றத்துக்கு கட்டுப்பட்டதே


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை