உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயங்கரவாத சதி வழக்கு: ருவாண்டாவில் இருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்ட லஷ்கர் பயங்கரவாதி

பயங்கரவாத சதி வழக்கு: ருவாண்டாவில் இருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்ட லஷ்கர் பயங்கரவாதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: பெங்களூரு சிறையில் இருந்தபடி பயங்கரவாத செயல்களுக்கு ஆட்களை திரட்டிய வழக்கில், லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதியை ருவாண்டா அரசு, இந்தியாவுக்கு நாடு கடத்தியுள்ளது.சல்மான் ரெஹ்மான் கானி என்பவன், போக்சோ வழக்கில் கைதாகி 2018 முதல் 2022ம் ஆண்டு வரை பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தான். அப்போது, சிறையில் இருந்த மற்றொரு பயங்கரவாதி நசீர் என்பவன் தொடர்பு கிடைத்தது. அப்போது சல்மானை பயங்கரவாதியாக மாற்றிய நசீர், சிறையில் இருந்தே, பயங்கரவாத திட்டங்களுக்கு இருவரும் சதி திட்டம் தீட்டினர். இதனுடன் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட சல்மான், ஆயுதங்கள், வெடிபொருட்கள் திரட்டியதுடன், ஆட்களை திரட்டினான். நீதிமன்றத்தில் ஆஜராக வந்த நசீர் அங்கிருந்து தப்பிச் சென்றான். இதற்கு சல்மான் உதவி செய்தான்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=y0x0tu7s&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதனைத் தொடர்ந்து பயங்கரவாத சதி அம்பலமானது. என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை நடத்த துவங்கினர். அதற்குள் சல்மான் இந்தியாவில் இருந்து தப்பிச் சென்றான். இதனையடுத்து 2023 அக்., 25 பெங்களூருவில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். சல்மானை தப்பிச்சென்றவனாக அறிவித்த அதிகாரிகள் அவன் மீது யுஏபிஏ, ஆயுதங்கள் சட்டம், வெடிமருந்துகள் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.மேலும் கடந்த ஆக.,2 ம் தேதி அவனுக்கு எதிராக இண்டர்போல் போலீசார் மூலம் ரெட்கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து என்.ஐ.ஏ., அதிகாரிகள், ஆப்பிரிக்க நாடான ருவாண்டா தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சேர்ந்து கிகாலி நகரில் இருந்த சல்மானை கைது செய்தனர். இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட அவனை இன்று என்.ஐ.ஏ., அதிகாரிகள் காவலில் எடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Kasimani Baskaran
நவ 29, 2024 06:45

பயங்கரவாதியென்றாலும் எங்கள் கலாச்சாரத்தின் படி பிரியாணி கொடுத்து அன்பாக பல மாமாங்கங்கள் விசாரித்து அதன் பின் தான் தண்டனை வழங்குவோம் - இந்திய நீதித்துறை.


ராமகிருஷ்ணன்
நவ 29, 2024 04:44

விரைவில் ராகுல்காந்தி இவனை சந்தித்து நலம் விசாரிப்பார். விடுதலை ஆவதற்கான உதவிகள் செய்வார்.


sankaran
நவ 28, 2024 22:48

ஏம்ப்பா ஜோக் அடிக்கிற ... ஏது நல்லது ...உள்ளதை செஞ்சு காட்டுறான் ...


Ramesh Sargam
நவ 28, 2024 20:13

அந்த பயங்கரவாதியை இந்தியாவுக்கு கொண்டுவருவதெல்லாம் வேஸ்ட். வரும் வழியில் ஒரே புல்லட் ஒரே என்கவுண்டர். ஆட்டம் குளோஸ். இந்தியாவுக்கு வந்தால், நமது சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி நமது வழக்கறிஞர்கள் அவனை தண்டனையிலிருந்து காப்பாற்றிவிடுவார்கள். இது தேவையா?


Rasheel
நவ 28, 2024 19:43

மர்ம நபர் அமைதி வழிப்படி தனது நடவடிக்கையை நடத்தி இருக்கிறான். பிரியாணி சாப்பிட்டு விட்டு குண்டு வைத்து விளையாடுகிறான் இப்படிக்கு செகுலர் கூட்டணி..


M Ramachandran
நவ 28, 2024 19:19

இவங்கள் எனக்கென இருந்தாலும் பிரச்சனைகள் தான். மற்றவர்கள் வாழ பொறுக்க மாட்டார்கள் இப்போது இந்தியா தேசத்திற்கு பிரச்னை. எல்லா நாடும் தீவிரவாதிகளை ஊக்குவிக்கும் நாடுகளை தனிமை படுத்த வேண்டும். இவங்க ரத்தத்திலே ஊறிபோயிடிச்சி. இவர்களை நடுங்க வைக்கும் நாடு இஸ்ரேல் தான். இஸ்ரேல் பெயரை கேட்டாலே நடுங்குவார்கள்


Rajamani K
நவ 28, 2024 19:06

எதற்காக இனி விசாரணை. இவனை சுட்டுக் கொல்ல வேண்டும்.


Anand
நவ 28, 2024 18:36

அப்புறம் என்ன, உடனே என்கவுண்டர் செய்யவேண்டியதுதானே? இவனையெல்லாம் இவ்வளவு நாட்கள் விட்டு வைத்ததே தவறு.


S Srinivasan
நவ 28, 2024 17:04

இவர்களுக்கு வேற வேலையே கிடையாது எப்ப பாரு குண்டு வைக்கிறது மனுஷனை கொலை பண்றது இதே வேலைதான் மதத்தில் இருக்கும் நல்லதை எடுத்து நல்லதை எடுத்துக் கொள்ளாமல் எதை எதையோ எடுத்துக் கொண்டு ஜிகாத் செய்ய வேண்டியது. கவர்மெண்ட் நம்ம வரிப்பணத்தை எடுத்து இதற்காக செலவழிக்க வேண்டியது எல்லாம் இந்தியா கவர்மெண்டின் தலையெழுத்து


என்றும் இந்தியன்
நவ 28, 2024 17:01

நாடு கெட்டு போனதுக்கு இந்த முஸ்லிம் வர்க்கம் தான் காரணம் என்று சொல்வது போல இருக்கின்றது


pm.krr
நவ 28, 2024 18:08

மூர்க்ஸ் வர்க்கம் மட்டும் தான் காரணம். உனக்கு என்ன சந்தேகம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை