உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கசியும் விசாரணை அறிக்கை பா.ஜ., - எம்.பி., குற்றச்சாட்டு

கசியும் விசாரணை அறிக்கை பா.ஜ., - எம்.பி., குற்றச்சாட்டு

சிக்கபல்லாப்பூர்: ''கொரோனா முறைகேடு தொடர்பாக நீதிபதி மைக்கேல் குன்ஹா தாக்கல் செய்த, இடைக்கால அறிக்கையின் முக்கிய அம்சங்கள், முதல்வர் அலுவலகத்தில் இருந்து, ஊடகத்தினருக்கு கசிகிறது,'' என, சிக்கபல்லாப்பூர் பா.ஜ., - எம்.பி., சுதாகர் குற்றம்சாட்டி உள்ளார்.சிக்கபல்லாப்பூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:எங்கள் ஆட்சியில் நடந்ததாக கூறப்படும், கொரோனா முறைகேடு குறித்து நீதிபதி மைக்கேல் குன்ஹா, அரசிடம் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அந்த அறிக்கையை அமைச்சரவை முன்பு வைத்து விவாதிக்க வேண்டும். ஆனால் அறிக்கையில் என்ன இருக்கிறது என்பது ஊடகத்தினருக்கு எப்படி தெரிகிறது? முதல்வர் அலுவலகத்தில் இருந்து, அறிக்கையில் உள்ள தகவல்கள் கசிகிறது. இதன் பின்னணியில் யார் உள்ளனர் என்று எங்களுக்கு தெரியும். இவர்கள் ஆட்சிக் காலத்தில் கொரோனா பரவல் ஏற்பட்டு இருந்தால், மக்களின் நிலைமை என்ன என்பதை யோசித்துப் பார்க்கவே பயமாக உள்ளது.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை