உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குறைவான விண்ணப்பம்!

குறைவான விண்ணப்பம்!

சி.ஏ.ஏ.,வின் கீழ் இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்க மத்திய உள்துறை அமைச்சகம் துவங்கியுள்ள இணையதளத்தில், அசாமில் இருந்து குறைவான மக்களே விண்ணப்பித்துள்ளனர். இதனால், அசாமில் பா.ஜ., வெற்றிக்கு பாதிப்பு ஏற்படாது. மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்பார். ஹிமந்த பிஸ்வ சர்மா, அசாம் முதல்வர், பா.ஜ.,

தாக்கம் ஏற்படுத்தாது!

வரும் லோக்சபா தேர்தலை மனதில் வைத்து சமீபத்தில் அயோத்தியில் ராமர் கோவில் திறந்திருக்கின்றனர். பா.ஜ., இதை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்த விரும்புகிறது. மக்கள் இதை புரிந்து வைத்துள்ளதால், வரும் தேர்தலில் ராமர் கோவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.ராஜா, தேசிய செயலர், இந்திய கம்யூ.,

அரசியல் வேண்டாம்!

காவிரி தண்ணீரை தமிழகத்துக்கு ரகசியமாக திறந்து விட்டதாக பா.ஜ., கூறுவது பொய். காவிரி நீர் விவகாரத்தில் பா.ஜ., அரசியல் செய்கிறது. அவர்களுக்கு அவ்வளவு அக்கறை இருந்தால், காவிரியில் மேகதாது அணை கட்ட அனுமதி வாங்கி தரட்டும்.சிவக்குமார், கர்நாடக துணை முதல்வர், காங்.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை