உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குமாரசாமியை கைது செய்வோம்: கர்நாடக முதல்வர் மிரட்டல்

குமாரசாமியை கைது செய்வோம்: கர்நாடக முதல்வர் மிரட்டல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு : ''குமாரசாமியை கைது செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால், தயவு தாட்சண்யம் இன்றி கைது செய்வோம்,'' என முதல்வர் சித்தராமையா பகிரங்க மிரட்டல் விடுத்தார்.'மூடா' முறைகேடு வழக்கில், கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் லஞ்ச ஒழிப்பு பிரிவு விசாரணை நடத்த, கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட் கடந்த 17ம் அனுமதி அளித்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=d0iv9fso&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதையடுத்து, மத்திய அமைச்சர் குமாரசாமி மீதான சுரங்க முறைகேடு வழக்கில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அனுமதி வழங்கும்படி, கவர்னரிடம், மாநில அரசின் சிறப்பு புலனாய்வு குழு, கடிதம் வாயிலாக நேற்று முன்தினம் கோரிக்கை வைத்துள்ளது. இது, காங்., அரசின் பழிவாங்கும் செயலாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கொப்பாலில் முதல்வர் சித்தராமையா நேற்று கூறியதாவது:

குமாரசாமியை கைது செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால், தயவு தாட்சண்யம் இன்றி கைது செய்வோம். தற்போதைக்கு கைது செய்வதற்கான சூழ்நிலை ஏற்படவில்லை. ஆனாலும், அவர் இப்போதே பயந்து போயுள்ளார். தன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கவர்னர் அனுமதி அளிப்பார் என்ற பயம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.இதற்கு பதிலடியாக பெங்களூரில் குமாரசாமி கூறுகையில், ''என்னை கைது செய்ய ஒரு சித்தராமையா அல்ல, 100 சித்தராமையாக்கள் வர வேண்டும். எனக்கு எந்த பயமும் இல்லை. கடந்த ஓராண்டு காங்கிரஸ் ஆட்சியில் என்னென்ன முறைகேடுகள் நடந்தன என்று மக்களுக்கு நன்றாக தெரியும்,'' என்றார்.இது குறித்து சித்தராமையா கூறுகையில், ''குமாரசாமியை கைது செய்ய, 100 சித்தராமையா தேவையில்லை; ஒரே ஒரு ஏட்டு போதும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
ஆக 22, 2024 14:25

நல்லது இருவரும் சிறையில் சந்தித்து ஒன்று கூடி புதிய திட்டம் வகுக்கலாம். சில திருடர்கள் சமூக விரோதிகள் இது போல் சிறையில் சந்தித்து நண்பர்களாகி வெளியே வந்து பல கிரிமினல் தனங்கள் செய்கிறார்கள். நீங்களும் அது போல....


Sampath Kumar
ஆக 22, 2024 09:47

உங்க ஆட்சில் கதைக்கு பேரு என்ன ?உள்நுக்கு நடவடிக்கையை ? பிஜேபி காரன் பணிகள் அதுக்கு ஒரு பேரு பிஜேபி அல்லாதவன் பண்ணினாள் அதுக்கு பேரு மிரட்டலா போவியா


Kasimani Baskaran
ஆக 22, 2024 05:08

மண்ணள்ளினால் தண்டனையை நிறுத்தி வைக்க முடியும். ஆனால் கண்டமேனிக்கு 14 வீட்டு மனைகள் என்று அமுக்கினால் எப்படி சாத்தியம்? கூடுதலாக சிவக்குமார் இன்னும் பல சுவாரஸ்யமான விஷயங்களை கூட சொல்வார்.


A Viswanathan
ஆக 22, 2024 08:37

அடுத்து இவரும் கைது செய்யப்படலாம் என்பதை நினைவில் கொண்டால் சரி.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை