உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போர்க்களத்துக்கு போகலாம் ஜாலி டூர்: செயலி வெளியிட்டு அழைக்கிறது அரசு

போர்க்களத்துக்கு போகலாம் ஜாலி டூர்: செயலி வெளியிட்டு அழைக்கிறது அரசு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சியாச்சின், கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட நாட்டின் மிக முக்கிய போர்க்களங்களுக்கு சுற்றுலா வரும்படி மத்திய அரசு அழைக்கிறது. இதற்கான பிரத்யேக செயலியை நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டு உள்ளார்.மலை பிரதேசங்கள், கடற்கரை நகரங்கள், பழமையான கோவில்கள் அடங்கிய ஊர்களுக்கு மட்டும் தான் சுற்றுலா செல்ல வேண்டுமா என்ன? நம் நாட்டின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போர்கள் நடந்த யுத்த பூமிக்கு சுற்றுலா வாருங்கள் என்று அழைக்கிறது மத்திய அரசு. இதற்காகவே, 'பாரத் ரன்பூமி தர்ஷன்' என்ற 'மொபைல் போன்' செயலியை, நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிமுகப்படுத்தினார். எந்தெந்த மாநிலங்களில் உள்ள போர்க்களங்களுக்கு சுற்றுலா செல்லலாம்; அதன் வரலாற்று சிறப்பு என்ன; எப்படி செல்வது? எவ்வாறு அனுமதி பெறுவது என்பது போன்ற விபரங்கள் அதில் அடங்கியுள்ளன.நாட்டின் உயரிய போர்க்களமான சியாச்சின் சிகரம், 2020ல் இந்திய - சீன படையினர் மோதிக்கொண்ட கல்வான் பள்ளத்தாக்கு, 1971ல் இந்தியா - பாகிஸ்தான் போர் நடந்த லாங்கேவாலா, கார்கில் உள்ளிட்ட யுத்த பூமிகளுக்கு இனி சுற்றுலாச் சென்று பார்த்து வர முடியும். இது தவிர அருணாச்சல பிரதேசத்தில் உள்ள கிபிதுா மற்றும் பம்லா, லடாக்கில் உள்ள ரேஸங்லா மற்றும் பாங்காங் ஸோ, சிக்கிமில் உள்ள சோ லா உள்ளிட்ட போர்க்களங்கள் குறித்த தகவல்களும் செயலியில் உள்ளன.'உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்துவது, மக்களிடம் தேச பக்தியை வளர்ப்பது, நம் ராணுவத்தின் உண்மையான வரலாற்றை மக்களிடம் எடுத்து செல்வதே இந்த முயற்சியின் நோக்கம்' என, அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

V வைகுண்டேஸ்வரன்
ஜன 17, 2025 12:34

இங்கே எந்த செய்தி வந்தாலும் எப்போதும், திமுக, ஸ்டாலின், உதயநிதி, திராவிடம், விடியல் - இதைத் தாண்டி சிந்திக்கவே முடியாத வாசகர்கள் பலர் இருப்பது பரிதாபகரம். பரிகாரம் என்ன என்று தெரியவில்லை.


Bye Pass
ஜன 18, 2025 02:55

உங்களமாதிரி 200 உபிஸாக இருக்கறதுல நிறைய சங்கடம் இருக்கே ..


visu
ஜன 17, 2025 11:08

தயவு செய்து திராவிட கோஷ்டிகள் அங்கே ஏதாவது சிலை வைக்க அனுமதி கேட்டால் அளித்து விடாதீர்கள்


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 17, 2025 08:31

நாடு துண்டு துண்டா போகணும் னு நினைச்சுக்கிட்டே நாட்டில் வாழ்பவர்களுக்கு ??


Kasimani Baskaran
ஜன 17, 2025 06:39

பாராட்டப்பட வேண்டிய நல்ல முயற்சி. காசு கொடுக்காமல் ஓடிவந்த இடங்களில் சிலை வைத்தால் தமிழகத்தில் நிறைய இடங்களில் பெருசின் சிலை வைக்க வேண்டியிருக்கும்...


Amar Akbar Antony
ஜன 17, 2025 06:07

நல்ல முயற்சி கட்டுப்பாடுகள் அதிகம் வேண்டும் ஏனெனில் அங்கும் குடி கும்மாளமிட்டு பெண்கள் பாதுகாப்புக்கும் கேள்விக்குறியாக்கும் கயவரகூட்டங்களுண்டு


Bye Pass
ஜன 17, 2025 05:20

பேனா நட்டுவைத்து திராவிட புகழை அந்த இடங்களில் பரப்ப வாய்ப்பிருக்கா ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை