உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இத்தோடு நிறுத்திக்குவோம்... ரணகளமாக்கிய பன்-கிரீம் விவகாரம்; என்டு கார்டு போட்டது அன்னபூர்ணா!

இத்தோடு நிறுத்திக்குவோம்... ரணகளமாக்கிய பன்-கிரீம் விவகாரம்; என்டு கார்டு போட்டது அன்னபூர்ணா!

கோவை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்ற கூட்டத்தில் ஹோட்டல் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சீனிவாசன் பேசிய பேச்சு பூதாகரமான நிலையில், அன்னபூர்ணா ஹோட்டல் தரப்பில், பிரச்னையை முடித்துக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

சர்ச்சை

கடந்த 3 தினங்களுக்கு முன் கோவை கொடிசியாவில் தொழில்முனைவோர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துரையாடினார். இந்த கூட்டத்தில் ஜி.எஸ்.டி., வரி விகிதத்தில் உள்ள பிரச்னைகளை, பன், ஜாம், க்ரீம் என்று கலந்து ஜனரஞ்சகமாக அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் பேசினார்.

மன்னிப்பு

அவரது இந்தப் பேச்சை எதிர்க்கட்சியினர் சமூக வலைதளங்களில் டிரெண்டாக்கினர். விவகாரம் பெரிதாவதை உணர்ந்த அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து மன்னிப்பு கோரினார். இது தொடர்பான வீடியோவை, பா.ஜ.,வினர் வெளியிட்டதால், இந்த விவகாரம் தேசிய அளவில் சர்ச்சையானது. இதையடுத்து, பா.ஜ., தரப்பில் மன்னிப்பும், விளக்கமும் கொடுக்கப்பட்டது.

முற்றுப்புள்ளி

இந்த நிலையில், அன்னபூர்ணா ஹோட்டல் தரப்பில் இருந்து அறிக்கை இன்று வெளியாகியுள்ளது. அதில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடனான கலந்தாலோசனைக் கூட்டத்தில் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சீனிவாசன் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக்கப்பட்டு வருகிறது. அவரது பேச்சில் எந்த உள்நோக்கமும் இல்லை என்பதை விளக்குவதற்காகவே, சொந்த விருப்பத்தின் பேரில், சீனிவாசன் அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். இது சம்பந்தமான வீடியோவை கட்சியினர் வெளியிட்டதற்காக, பா.ஜ., தரப்பில் மன்னிப்பு கேட்கப்பட்டதோடு, வீடியோவை வெளியிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொழில் அமைப்பினரின் ஜி.எஸ்.டி., தொடர்பான குறைகேட்பு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்த நிதியமைச்சர், எம்.எல்.ஏ., வானதி சீனிவாசனுக்கு நன்றி. இத்துடன் தேவையற்ற யூகங்களுக்கும், தவறான அரசியல் புரிதலுக்கும் முடிவு கட்ட விரும்புகிறோம், எனக் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

Indian
செப் 16, 2024 13:45

இருந்த நாலு ஓட்டும் போய்டும் போல ..


Indian
செப் 16, 2024 13:43

பெரு தான் சுதந்திர நாடு , பேச்சு , கருத்து சுதந்திரம் இல்லை ..


Velan Iyengaar
செப் 15, 2024 09:28

ரொம்போ எரிஞ்சா வூட்ஒர்டஸ் கிரேப் வாட்டர் குடிக்கவும்


Rajamani Ksheeravarneswaran
செப் 14, 2024 23:45

ஓட்டல் நடத்துபவர்கள் , அரசு உயர் அதிகாரிகள் , காவல்துறை , டிராபிக் போலிஸ், கார்பரேசன் , மின்துறை , வாட்டர் போர்டு , அரசியல்வாதிகள் அவர்களது அல்லக்கைகள் , ஏரியா தாதாக்கள் எல்லோருக்கும் இலவச சாப்பாடு , பணம் , தேர்தல் நிதி என்று பலவகையில் தண்டம் கட்டவேண்டிய நிலை .இதை தவிர்த்து அரசியல் பெரியதலைகள் , எம் எல் ஏ , எம் பி அவர்களின் அடியாள்கள் அனைவருக்கும் இலவச உணவு , மாமூல் கொடுத்து அதை சாதாரண மக்களின் தலையில் கட்டுகிறார்கள் .இவர்களில் யாரை பகைத்துக்கொண்டாலும் அவர்கள் தொழில் பண்ண முடியாது


Rajamani Ksheeravarneswaran
செப் 14, 2024 23:38

என்னப்பா பத்து கிலோ ஜிலேபி பார்சல் னு சிலிப் வந்திருக்கு .பில எங்கேப்பா ? சத்தமா பேசாதே அது நம்ம எம் எல் ஏ வீட்டிற்கு ?


Ms Mahadevan Mahadevan
செப் 14, 2024 22:44

அன்னபூர்ணா உரிமையாளர் ஜி.எஸ்.டி.,கஷ்டத்தை நகைச்சுவையுடன் சொன்னார்.அதை புரிந்து கொண்டு ஆவண செய்வதாக சொல்லி எண்டு கார்டு போடாமல் விட்டது அம்மையார் தப்பு.


Sudha
செப் 14, 2024 22:37

பேர வேலையில்லா ஐயங்கார் னு மாத்திகிட்டா சரியாக இருக்கும்


மாயவரத்தான்
செப் 14, 2024 22:27

ஹோட்டல் உரிமையாளர் அன்னபூர்ணா சீனிவாசனின் பேச்சு முற்றிலும் திமுகவுடன் திட்டமிட்ட பேச்சாகத்தான் தெரிகிறது. ஏனென்றால் வானதி சீனிவாசன் ஹோட்டலுக்கு வந்து சாப்பிடும் பொழுது ஜிஎஸ்டியை பற்றி குறை சொல்லி பேசுவதாக அவர் சொல்லுகிறார். மத்திய அரசை நடத்தக்கூடிய ஒரு கட்சியின் தேசிய அளவில் பொறுப்பில் இருக்கக் கூடியவர் ஜி எஸ் டி ஐ பற்றி தவறாக எப்படி ஹோட்டல் உரிமையாளரிடம் பேசுவார் ? ஹோட்டல் உரிமையாளர் வேண்டுமானால் வானதி சீனிவாசரிடம் ஜிஎஸ்டியை பற்றி புகார் தெரிவித்திருக்கலாம் ஆனால் உரிமையாளரிடம் வானதி புகார் தெரிவித்தது போல அவர் பேசுவது நம்பும்படியாக இல்லை. வானதி நாகரீகம் கருதி அமைதியாக இருந்து விட்டதாகக் கூறியுள்ளார் அதற்கு பதில் மேடையிலேயே நான் அப்படி ஒரு பொழுதும் கேட்டதில்லை என்று வானதி உண்மையை சொல்லி இருந்தால் இது இந்த அளவுக்கு போயிருக்காது. சரியாக இவர் பேசி முடித்தவுடன் அந்த வீடியோ வைரல் ஆகிறது உடனே அதற்கு அகில இந்திய அளவில் பலரும் கருத்து தெரிவிக்கிறார்கள், பின் ஹோட்டல் உரிமையாளர் மன்னிப்பு கேட்கிறார் உடனே பாஜகவை பற்றியும் மத்திய அரசை பற்றியும் ஜோதிமணி, கார்த்தி சிதம்பரம், ராகுல் காந்தி என எல்லோரும் வரிசையாக கண்டனம் தெரிவிக்கிறார்கள் மட்டுமல்ல இதை இன்னும் பல மாதங்களுக்கு தொடர்ந்து பேசுவார்கள். இதையெல்லாம் வைத்து பார்க்கும் பொழுது அன்னபூர்ணா சீனிவாசன் பேசியது முன்பே திட்டமிடப்பட்ட ஒரு விஷயமாகத் தான் நன்கு தெரிகிறது. மத்திய நிதி அமைச்சர் கோவை பகுதியில் தொழில் முனைவோர் பயன்பெற வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய போய் அந்த நல்ல நோக்கத்தை இந்த கெட்ட அரசியல்வாதிகள் வீணடித்து விட்டார்கள். இது இவர்களுக்கு காலம் காலமாக பழக்கம் தான்.


Jysenn
செப் 14, 2024 22:06

In Poonamallee Sangeetha restaurant a 50 gram sized methuvadai is being sold for 48 Rupees.


Barakat Ali
செப் 14, 2024 21:55

ஹோட்டலுக்கு நல்ல விளம்பரம் கிடைச்சுது .......


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை