சபாரி பூங்காவில் மூன்று குட்டிகளை ஈன்ற சிங்கம்
எட்டாவா:உத்தர பிரதேச மாநிலம், எட்டாவா சபாரி பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த சிங்கம், மூன்று குட்டிகளை ஈன்றுள்ளது. உத்தர பிரதேசத்தின் எட்டாவா சபாரி பூங்காவில் சிங்கம், மான், யானை உள்ளிட்ட விலங்குகள் பராமரிக்கப்படுகின்றன. இங்குள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் வசிக்கும் இந்த விலங்குகளை பார்வையாளர்கள், வாகனங்களில் சென்று பார்க்கலாம். அதனாலேயே இது, சபாரி பூங்கா என அழைக்கப்படுகிறது. எட்டாவா சபாரி பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த ரூபா என்ற சிங்கம் மூன்று குட்டிகளை ஈன்றுள்ளது. மூன்று குட்டிகளும் தாயும் ஆரோக்கியமாக இருப்பதாக பூங்கா அதிகாரிகள் கூறினர். ரூபாவையும், அதன் குட்டிகளையும் கண்காணிப்புக் கேமரா வாயிலாக 24 மணிநேரமும் பூங்கா பணியாளர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.