| ADDED : மே 19, 2025 05:00 PM
புதுடில்லி: பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த 11 பேர் குறித்து விவரங்கள் வெளியாகி உள்ளது.இந்தியாவில் நாச வேலைகளை செய்ய, பல்வேறு வகைகளில் பாகிஸ்தான் சதித்திட்டம் தீட்டுகிறது. பயங்கரவாதிகளுக்கு பணமும் ஆயுதமும் கொடுத்து ஊடுருவச் செய்தல், பணத்துக்கு மயங்கும் உள்ளூர் ஆட்களுக்கு பணம் கொடுத்து, தகவல்களை பெறுதல் போன்ற சதி வேலைகளை பாகிஸ்தான் உளவுத்துறை செய்கிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=pjgf6w94&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இப்படி பாகிஸ்தான் கொடுக்கும் பணத்துக்கு மயங்கி, அவர்கள் கேட்கும் தகவல்கள், படங்கள், வீடியோக்களை ரகசியமாக அனுப்பி வைத்த கும்பலில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்தியாவில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் உளவாளிகள் 11 பேர் விபரம் பின்வருமாறு:1. ஜோதி மல்ஹோத்ரா'டிராவல் வித் ஜோ' என்ற யூடியூப் சேனலை நடத்தி வரும் 33 வயதான யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா, ஹரியானாவின் ஹிசாரைச் சேர்ந்தவர். இவர் இந்திய ராணுவத் தகவல்களை பாகிஸ்தானுடன் பகிர்ந்து கொண்டதற்காக கைது செய்யப்பட்டார்.2. தேவேந்திர சிங் தில்லான் பாகிஸ்தானில் இருந்து திரும்பிய பிறகு, 25 வயதான தேவேந்திரா பாட்டியாலாவில் உள்ள கல்சா கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார்பாட்டியாலா ராணுவ கன்டோன்மென்ட்டின் படங்கள் உட்பட முக்கியமான தகவல்களை பாகிஸ்தான் உளவு அதிகாரிகளுக்கு பகிர்ந்து வந்துள்ளார்.3. தாரிப்ஹனீப்பின் மகன் தாரிப், ஹரியானாவின் நுஹ் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டார். இவர் இந்திய ராணுவ தொடர்பான தகவல்களை பாகிஸ்தானுக்கு பகிர்ந்து வந்துள்ளார்.4. அர்மான்ஹரியானாவின் நுஹ் பகுதியில் 23 வயதான அர்மான் கைது செய்யப்பட்டார். இவர், பாகிஸ்தானுக்கு முக்கியமான தகவல்களை அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். 5. நௌமன் இலாஹிஹரியானாவில் பாதுகாப்பு காவலராகப் பணியாற்றிய 24 வயதான நௌமன் இலாஹி, பானிபட்டில் கைது செய்யப்பட்டார். உத்தர பிரதேசத்தின் கைரானாவில் வசிக்கும் இவர், இஸ்லாமாபாத்திற்கு தகவல்களை வழங்குவதற்காக தனது மைத்துனரின் கணக்கில் பாகிஸ்தானிலிருந்து பணம் பெற்று வந்தார். 6. ஷாஜாத்உத்தரப் பிரதேச பயங்கரவாதத் தடுப்புப் படை ஷாஜாத் என்ற நபரை கைது செய்தது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான எல்லை வழியாக அழகுசாதனப் பொருட்கள், உடைகள், மசாலாப் பொருட்கள் மற்றும் பிற பொருட்களை சட்டவிரோதமாக கடத்தி வந்துள்ளார்.7. முகமது முர்தாசா அலிபஞ்சாபின் ஜலந்தரில் குஜராத் போலீசார் நடத்திய சோதனையின் போது முகமது முர்தாசா அலி கைது செய்யப்பட்டார். பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., அமைப்புக்கு உளவு வேலை பார்த்துள்ளார்.8. கசாலாபஞ்சாபைச் சேர்ந்த கசாலா என்ற பெண் பாகிஸ்தானுக்கு நிதி அளித்துள்ளார். கசாலா பஞ்சாபின் மலேர்கோட்லாவில் வசித்து வந்த நிலையில் போலீசார் கைது செய்தனர்.9. யாமின் முகமதுபஞ்சாபைச் சேர்ந்த யாமின் முகமதுவையும் போலீசார் கைது செய்துள்ளனர். இவர் பாகிஸ்தானுக்கு முக்கிய தகவல்களை பகிர்ந்து வந்துள்ளார்.10. சுக்ப்ரீத் சிங்பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் பஞ்சாப் போலீசார் குர்தாஸ்பூரைச் சேர்ந்த சுக்ப்ரீத் சிங்கை கைது செய்தனர். இவரிடம் விரிவான விசாரணை நடந்து வருகிறது.11. கரன்பீர் சிங்பஞ்சாப் போலீசார் குர்தாஸ்பூரைச் சேர்ந்த கரண்பீர் சிங்கை கைது செய்தனர். இவர்இவர் பாகிஸ்தானுக்கு முக்கிய தகவல்களை பகிர்ந்து வந்தது விசாரணையில் அம்பலமானது.