உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராகுலின் சொத்து மதிப்பு ரூ. 20 கோடி: வேட்பு மனுவில் தகவல்

ராகுலின் சொத்து மதிப்பு ரூ. 20 கோடி: வேட்பு மனுவில் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: காங்கிரஸ் எம்.பி ராகுலிடம் ரூ.20 கோடியே 39 லட்சத்து 61 ஆயிரத்து 862 மதிப்பிலான சொத்து உள்ளது.கேரளாவில் மொத்தமுள்ள, 20 லோக்சபா தொகுதிகளுக்கு, வரும் 26ல் ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடக்கிறது. கடந்த 2019 லோக்சபா தேர்தலில், கேரளாவின் வயநாடு தொகுதியில் வெற்றி பெற்ற ராகுல், வரும் லோக்சபா தேர்தலிலும், இதே தொகுதியில் அவர் போட்டியிடுகிறார். ராகுல், நேற்று (ஏப்ரல் 03) வேட்பு மனு தாக்கல் செய்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=q2i29d8n&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ராகுல் தனது வேட்பு மனுவில் சொத்து விவரங்கள் குறித்த பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார். அதில், '' தனது கையில் ரூ.55 ஆயிரம் ரொக்கம் பணம் உள்ளது. வங்கிகளில் ரூ. 26 லட்சத்து 25 ஆயிரத்து 157 சேமிப்பு உள்ளது. இது தவிர பங்கு சந்தையில் ரூ.4 கோடியே 33 லட்சத்து 60 ஆயிரத்து 519 உள்ளது. வைப்பு நிதியாக ரூ. 3 கோடியோ 81 லட்சத்து 33 ஆயிரத்து 572 உள்ளது.தங்க பத்திரம் வழியாக ரூ.15 லட்சத்து 21 ஆயிரத்து 740 உள்ளது. சேமிப்புத் திட்டங்கள் மற்றும் இன்சூரன்ஸ் உள்ளிட்டவற்றில் ரூ.61 லட்சத்து 52 ஆயிரத்து 426 முதலீடு செய்துள்ளேன். ரூ.4 லட்சத்து 20 ஆயிரத்து 850 மதிப்பிலான நகைகள் இருக்கிறது. மொத்தமாக ரூ.9 கோடியே 24 லட்சத்து 59 ஆயிரத்து 264 மதிப்பிலான அசையும் சொத்து உள்ளது. ரூ. 11.14 கோடி அசையா சொத்துகள் உள்ளது. மொத்தம் ரூ. 20 கோடியே 39 லட்சத்து 61 ஆயிரத்து 862 மதிப்பிலான சொத்து இருக்கிறது. சொந்தமாக கார் மற்றும் வீடு இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

theruvasagan
ஏப் 04, 2024 22:06

பாஜக ஆட்சியில் இளைஞர்களுக்கு வேலை வாயப்பு இல்லைன்னு புலம்பல். ஆனால் எந்த வேலையும் செய்யாமல் 20 கோடி சொத்து. இந்த டெக்னிக்கை வேலை இல்லாத இளைஞர்களுக்கு சொல்லித் தருவாரா.


வல்லரசு
ஏப் 04, 2024 18:01

ஆட்டுகுட்டி 40 கோடி வைத்துள்ள போது இவருக்கு 20 கோடி இருக்க கூடாதா


தனா
ஏப் 04, 2024 17:49

இவன் சொல்ரான் ரயிலில் டிக்கட் எடுக்க பணம் இல்லைனு, எவ்வளவு அயோக்கியதனம்


sasikumaren
ஏப் 04, 2024 16:11

ராகுல் நன்றாக ஏமாற்றி வருகிறார்


Natarajan Ramanathan
ஏப் 04, 2024 13:46

சொந்தமாக கார் வீடு மற்றும் எதுவுமே இல்லை என்று பிரமானபத்திரம் தாக்கல்


ராமன்
ஏப் 04, 2024 13:07

அரைகுறை படிப்பு வேலை ஏதும் இல்லை. அப்புறம் எப்படி இவ்வளவு சொத்து?


GoK
ஏப் 04, 2024 12:10

இருபது கோடி சொத்து மதிப்பு


வாய்மையே வெல்லும்
ஏப் 04, 2024 11:27

ஒரு வேலையும் இல்லாம இருவது கோடி சொத்து ஹா ஹா ஹா கேட்ட்டால் பரம்பரை சொத்து என பதில் வரும் வருமானவரி கட்ட்டிட்டாரா என கேட்டால் இருக்கவே இருக்கு வரி பூகம்பம் வெங்காய வெடி வரிசுமை என கூச்சல் போடுவாரு


குமரி குருவி
ஏப் 04, 2024 11:11

நம்ப....முடிய...வில்லை அவனா..சொன்னான் இருக்காது..


ஆரூர் ரங்
ஏப் 04, 2024 10:36

இங்கிலாந்த் தாய்லாந்து நாடுகளில் உள்ள சொத்துக்களை சேர்க்கவில்லையா?


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை