உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மற்ற கட்சியின் வாக்குறுதி போல இல்லாமல் பா.ஜ., நிச்சயம் சொல்வதை செய்யும்: பிரதமர் மோடி உறுதி

மற்ற கட்சியின் வாக்குறுதி போல இல்லாமல் பா.ஜ., நிச்சயம் சொல்வதை செய்யும்: பிரதமர் மோடி உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெய்ப்பூர்: ''பா.ஜ., நிச்சயம் சொல்வதை செய்யும். மற்ற கட்சிகளை போல வெறும் தேர்தல் அறிக்கையை மட்டும் வெளியிட மாட்டோம். தீர்மான அறிக்கையாக வாக்குறுதி வழங்குவோம்,'' என பிரதமர் மோடி கூறினார்.ராஜஸ்தான் மாநிலம் சுரு பகுதியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது: ஒட்டுமொத்த ராஜஸ்தானும் 'மீண்டும் மோடி அரசு' என முழக்கமிடுகிறது. இந்தியா எப்படி இவ்வளவு வேகமாக வளர்ச்சியடைகிறது என மொத்த உலகமும் ஆச்சரியமாக பார்க்கிறது. இந்திய மண் கொஞ்சம் வித்தியாசமானது என உலக நாடுகளுக்கு தெரியாது. நம்மால் என்ன முடிவெடுத்தாலும் அதனை சாதிக்க முடியும்.

நேர்மையாக வேலை செய்தோம்

கடந்த 10 ஆண்டுகளில், நாடு மாற்றமடைவதை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். 10 வருடங்களுக்கு முன் நாட்டின் நிலை எவ்வளவு மோசமாக இருந்தது நினைவிருக்கிறதா? காங்கிரஸின் பெரிய ஊழல்கள் மற்றும் கொள்ளையினால், பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து, உலகளவில் இந்தியாவின் நற்பெயர் சரிந்தது. நாங்கள் நேர்மையாக வேலை செய்தோம். கோவிட் போன்ற ஒரு பெரிய நெருக்கடி வந்தபோது, ​​இந்தியா அழிந்துவிடும் என நினைத்தனர். ஆனால் அந்த நெருக்கடியிலும் உலகின் 5வது பொருளாதார நாடாக இந்தியாவை மாற்றினோம்.

டிரைலர்

இதுவரை நாங்கள் செய்த வளர்ச்சி பணிகள் எல்லாம் வெறும் டிரைலர் மட்டும்தான். பா.ஜ., நிச்சயம் சொல்வதை செய்யும். மற்ற கட்சிகளை போல வெறும் தேர்தல் அறிக்கையை மட்டும் வெளியிட மாட்டோம். தீர்மான அறிக்கையாக வாக்குறுதி வழங்குவோம். 2019ல் நாங்கள் அளித்த பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. முத்தலாக் தடை சட்டம் இஸ்லாமிய சகோதரிகளுக்கு உதவியாக இருக்கிறது. மோடி உங்களை மட்டும் காப்பாற்றவில்லை, ஒவ்வொரு இஸ்லாமிய குடும்பத்தையும் மோடி பாதுகாத்துள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

சிவம்
ஏப் 05, 2024 18:52

இதெல்லாம் நீங்கள் சொல்லவே வேண்டாம் தலைவரே. நாங்களே பார்க்கிறோமே.


Kasimani Baskaran
ஏப் 05, 2024 17:15

உபிஸ் புகை வருமளவுக்கு கதறுவது புரிகிறது


venugopal s
ஏப் 05, 2024 17:00

என்ன ஒரே பிரச்சினை, தேர்தல் சமயத்தில் வாக்குறுதி கொடுத்து விட்டு பிறகு நான் அப்படி சொல்லவே இல்லை என்று சாதிப்பார்கள்!


ராமன்
ஏப் 06, 2024 07:41

இவர் மோடி . பெண்கள் அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் இன்று. ரூபாய்க்கு 3 படி அரிசி மாதிரி பொய் வாக்குறுதி இல்லை


Anantharaman Srinivasan
ஏப் 05, 2024 16:15

தலைவர்கள் தேர்தல் நேரத்தில் என்ன சொன்னாலும் வாக்காளர்கள் அதை நம்புகிறார்கள் அந்தவகையில் மோடி பேச்சும் அடங்கும்


Biden
ஏப் 05, 2024 15:18

நாங்கள் வாயிலே வடை சுடுவோம்


Rajendran Kaleeswaran
ஏப் 05, 2024 15:12

அடுத்து இந்தியா விற்பனைக்கு மட்டுமே


sara
ஏப் 05, 2024 14:51

எப்புடி ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைன்னு சொன்னது மாதிரியா ?


Selvakumar Krishna
ஏப் 05, 2024 14:06

பத்து வருடமா சொன்னதை எதுவும் கிழிக்கவில்லை , இப்போது புதிதாக என்ன ?


அப்புசாமி
ஏப் 05, 2024 14:05

2047 ல ஆளுக்கு பாஞ்சி லட்சம் போடுவோம்.


Gopal
ஏப் 05, 2024 17:23

ஆசை யாரை விட்டது


மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி