உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மதுராவில் போட்டியிடும் நடிகை ஹேமமாலினிக்கு ரூ.123 கோடி சொத்து

மதுராவில் போட்டியிடும் நடிகை ஹேமமாலினிக்கு ரூ.123 கோடி சொத்து

புதுடில்லி: மதுரா தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் நடிகை ஹேமமாலினிக்கு ரூ.123 கோடி சொத்து உள்ளது அவர் தாக்கல் செய்த பிரமாண பத்திரம் மூலம் தெரியவந்துள்ளது.

3வதுமுறை

பாலிவுட் நடிகர் தர்மேந்திரா தியோலின் மனைவியும், நடிகையுமான ஹேமமாலினி உ.பி.,யின் மதுரா தொகுதியில் 2014 மற்றும் 2019ல் வெற்றி பெற்றார். 3வது முறையாக மீண்டும் அத்தொகுதியில் போட்டியிடுகிறார். நேற்று( ஏப்.04) அவர் மதுரா தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

சொத்து மதிப்பு

அத்துடன் அவர் தாக்கல் செய்த சொத்து குறித்த பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளதாவது: தனக்கு ரூ.123 கோடி மதிப்பு சொத்து உள்ளது. அத்துடன் ரூ.1.4 கோடி கடன் உள்ளது. நடிப்பு, வாடகை மற்றும் வட்டி மூலம் வருமானம் கிடைக்கிறது. தன் மீது கிரிமினல் வழக்கு ஏதும் இல்லை. ரொக்கமாக கையில் ரூ.13.5 லட்சம் வைத்துள்ளேன். மெர்சிடெஸ்- பென்ஸ், அல்காஜர் மற்றும் மாருதி கார் உள்ளன. இவற்றின் மதிப்பு ரூ.61 லட்சம்.

கணவர் சொத்து

கணவர் தர்மேந்திர தியோலுக்கு நடிப்பு, பென்சன் மற்றும் வட்டி மூலம் வருமானம் கிடைக்கிறது. அவருக்கு ரூ.6.4 கோடி கடன் உள்ளது. அவரது சொத்து மதிப்பு ரூ.20 கோடி ஆகும். கணவர் கையில் ரூ.43 லட்சம் ரொக்கமாக உள்ளது. ரேஞ்ச் ரோவர், மகேந்திரா பொலிரோ, மோட்டார் சைக்கிள் வாகனம் வைத்து உள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Easwar Kamal
ஏப் 05, 2024 23:53

எல்லா எலெக்ஷனேலேயும் இந்த அம்மணி ஜெயிக்குறாங்க இவங்களுக்கு ஏதாவது ஒரு மந்திரி பதவி கொடுங்க


Dakshinamurthy Nagarajan
ஏப் 05, 2024 20:01

What is the use


sundarsvpr
ஏப் 05, 2024 19:45

சொத்து விபரம் தேவையற்றது நேர்மையற்ற முறையில் சொத்து சேர்க்கப்பட்டது என்று கூற இயலாது அரசியல் வியாபாரம் என்று கூறமுடியாது சொத்துவிபரம் கேட்பது அறிவுசார்ந்ததாய் கருத இயலாது


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை