தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்.,19ல் ஓட்டுப்பதிவு
புதுடில்லி: தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்.,19ம் தேதி லோக்சபா தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. ஓட்டு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடக்கும் டில்லியில் நிருபர்களைச் சந்தித்த தலைமைத் தேர்தல் கமிஷனர் ராஜிவ்குமார் கூறியதாவது: லோக்சபாவுக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும்https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=q2i45o4i&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0முதற்கட்டமாக தமிழகம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், ம.பி., உத்தரகண்ட், ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களில் ஏப். 19ல் தேர்தல் நடக்கும்.இந்த மாநிலங்களில் வேட்பு மனு தாக்கல் துவக்கம்- 20.03.24 வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள்- 27.03.24 வேட்பு மனு பரிசீலனை- 28.03.24 வேட்பு மனு வாபஸ்- 30.03.24 தேர்தல் தேதி- 19.04.24 ஓட்டு எண்ணிக்கை 04.06.24இடைத்தேர்தல்
விளவங்கோடு தொகுதிக்கு இடைத்தேர்தல்- ஏப்,19ம் தேதி. இவ்வாறு தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் கூறினார்.