மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
4 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
4 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
5 hour(s) ago
பெங்களூரு : லோக்சபா தேர்தலில் சமூக வலைதளங்களில் பிரசாரம் செய்ய அரசியல் கட்சிகள் விரும்புவதால், அதை நிர்வகிக்கும் ஐ.டி., வல்லுனர்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது.லோக்சபா, சட்டசபை, மாநகராட்சி என, கடந்த 10 ஆண்டுகளில் நடந்த தேர்தல்களை பார்க்கும்போது, தகவல் தொழில்நுட்பத்தின் பங்கு மிக பெரியது என்றே சொல்லலாம்.இளைஞர்கள், பெரியோர் உட்பட அனைத்து தரப்பினரும் ஆன்ட்ராய்டு வசதி கொண்ட மொபைல் போன்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதுவும், நம்மில் பலரும் சமூக வலை தளங்களில் அதிக அளவில் காலம் செலவிடுவதை அறிவோம்.இதை அறிந்து கொண்ட ஐ.டி., எனும் தகவல் தொழில்நுட்ப வல்லுனர்கள், சமூக வலை தளங்களில் தேர்தல் பிரசாரம் நடத்தும் முறையை கொண்டு வந்தனர். தற்போது அதிக அளவில் சமூக வலை தளங்களில் செய்யும் பிரசாரம் தான் எடுபடுகிறது.குறிப்பாக, வாட்ஸாப், டெலிகிராம், முகநுால், இன்ஸ்டாகிராம், எக்ஸ் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். எனவே இம்முறை லோக்சபா தேர்தலில், சமூக வலை தளங்களில் பிரசாரம் செய்யும் ஐ.டி., வல்லுநர்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது.தகவல் தொழில்நுட்ப நகரமான பெங்களூரு உட்பட கர்நாடகாவில் சமூக வலை தள பிரசாரத்தை ஏற்கனவே ஆரம்பித்து விட்டனர். கவுன்சிலர் முதல் முதல்வர் வரை பயன்படுத்துகின்றனர்.இதன் மூலம், வாக்காளர்களை சுலபமாக சென்றடையும் என்பதே அவர்களின் கணிப்பு. இதற்காக மாதந்தோறும் லட்சக்கணக்கில் செலவு செய்யவும் தயாராக உள்ளனர்.லோக்சபா தேர்தல் அறிவிப்பதற்கு முன்னரே, பலரும் தங்களை முன்னிலைப்படுத்திக் கொண்டு முனைப்புடன் செயல்படுவதை, சமூக வலை தளங்களில் பார்க்க முடிகிறது.
4 hour(s) ago | 1
4 hour(s) ago
5 hour(s) ago