உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சுவாமியே சரணம் ஐயப்பா-23: தினம் ஒரு தகவல்: முக்கால் வட்டம் கோயில்

சுவாமியே சரணம் ஐயப்பா-23: தினம் ஒரு தகவல்: முக்கால் வட்டம் கோயில்

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது முகம்மா பகுதி. இங்குதான் சுவாமி ஐயப்பன் களரி பயிற்சி செய்தார்.தற்போது முக்கால் வட்டம் கோயிலாக உள்ளது. தற்காப்பு கலையான களரி முறை பாண்டிய நாட்டின் எல்லையில் இருந்து திருவிதாங்கூர் வரை பரவியிருந்தது. அதில் முக்கிய மையம் முகம்மா. தாயின் ஆசிபெற்ற ஐயப்பன் களரி பயிற்சி செய்ய இங்கு வந்தார். இவருக்கு சீரப்பன் என்பவர் குருநாதராக இருந்து களரி, மந்திர வித்தை, தியானத்தைக் கற்றுக் கொடுத்தார். பின்னாளில் சபரிமலையில் ஐக்கியமானார் ஐயப்பன். அவரை ஆண்டுதோறும் தரிசித்து வந்தார் குருநாதர். காலப்போக்கில் வயதான காரணத்தால் அவரால் சபரிமலைக்கு செல்ல முடியவில்லை. ஒருநாள் அவரது கனவில் தோன்றிய ஐயப்பன், ''கவலைப்படாதீர்கள். வேம்புநாட்டில் ஒரு அருவி வழியாக என் சக்தி கொண்ட மரம் வரும். அதை உங்கள் இடத்தில் பிரதிஷ்டை செய்து வழிபடுங்கள்'' என்றார். அதன்படி ஐயப்பன் தியான ரூபத்தில் (வீராசனம்) அமர்ந்தபடி கோயில் அமைக்கப்பட்டது. ஐயப்பன் பயன்படுத்திய வாள், கச்சைதுணி தற்போதும் பூஜை அறையில் பாதுகாக்கப்படுகிறது. இன்று குருகுலத்தில் சீரப்பன் குருவின் 10வது தலைமுறை வாரிசுகள் உள்ளனர். இங்கு வந்தால் அமைதி, தைரியம், ஞானம் கிடைக்கும். வெள்ளி, சனிக்கிழமை, ஞாயிறு அன்று மட்டும் கோயில் திறக்கப்பட்டு தீபாராதனை, களரி ஹோமம், நெய் அபிஷேகம் நடைபெறும். மகரஜோதி நாளன்று நடை சாத்தப்படும். காரணம் அன்று ஐயப்பனின் சக்தி முழுவதும் சபரிமலையில் இருப்பதாக நம்பிக்கை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ