உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேர்தல் கருத்து கணிப்பால் நிறுவனத்துக்கு இழப்பு!

தேர்தல் கருத்து கணிப்பால் நிறுவனத்துக்கு இழப்பு!

புதுடில்லி: 'தேர்தல் கருத்துக் கணிப்புகளை நடத்துவதால் எங்களுக்கு எவ்வித லாபமும் இல்லை; இதனால் எங்களுக்கு பொருளாதார இழப்பே ஏற்படுகிறது' என 'ஆக்சிஸ் மை இண்டியா' தலைவர் பிரதீப் குப்தா தெரிவித்துள்ளார்.2024 லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி, 400 இடங்களை வெல்லும் என, 'ஆக்சிஸ் மை இண்டியா' கருத்துக்கணிப்பு வெளியிட்டது. ஆனால், பா.ஜ.,வால் 294 தொகுதிகளை மட்டுமே வெல்ல முடிந்தது. தேர்தல் முடிவுகள் வெளியான போது, 'ஆக்சிஸ் மை இண்டியா' தலைவர் பிரதீப் குப்தா கண்ணீர் விட்டு அழுதார். இது சமூகவலைதளங்களில் வைரலானது.இந்நிலையில், பிரதீப் குப்தா கூறியிருப்பதாவது: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை தடை செய்ய வேண்டும் என கூறுவது குழந்தை தனமானது. பங்குசந்தைக்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எங்கள் மீது உள்ள களங்கத்தை துடைப்போம்.2013 முதல் இதுவரை 65 தேர்தல்களுக்கு கருத்துக்கணிப்பு வெளியிட்டிருக்கிறோம். இதில் 61 தேர்தல்களுக்கு சரியாக கணித்திருக்கிறோம். தேர்தல் கருத்துக் கணிப்புகளை நடத்துவதால் எங்களுக்கு எவ்வித லாபமும் இல்லை; கருத்துக் கணிப்புகளை நடத்துவதற்கான செலவுகளை ஊடகங்கள் முழுமையாக வழங்குவது கிடையாது; நாடு முழுவதும் கருத்துக் கணிப்புகளை நடத்த பெருந்தொகையை செலவிடுகிறோம்; இதனால் எங்களுக்கு பொருளாதார இழப்பே ஏற்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

S Regurathi Pandian
ஜூன் 24, 2024 11:43

குழந்தைத்தனமானது என்ற கருத்துதான் கேலிக்கூத்தானது. கருத்து கணிப்பு என்ற பெயரில் கருத்து திணிப்பே நடத்தப்படுகிறது.


தமிழ்வேள்
ஜூன் 24, 2024 10:52

கருத்து கணிப்புகளே தேவையில்லை ...ஹேஷ்யங்களுக்கு, இங்கு ஒன்றும் குதிரை ரேஸ் நடக்கவில்லையே ....ரிசல்ட் வரட்டும் - பிறகு பார்த்துக்கொள்ளலாம் ..எதற்கு வேண்டாத வேலை .அப்புறம் செலவு அது இது ன்று ஒரு பினாத்தல் ...


Fair votes
ஜூன் 24, 2024 10:19

இத பார்டா.. கருத்து கணிப்பு பெரிய சமூக சேவைன்னு ஐயா நினைக்கிறார் போல.. அதான் அவளோ பொருளாதார நஷ்டத்தை கூட தாங்கிக்கொண்டு நாடு முழுவதும் ஆட்களை அனுப்பி கருத்து சேகரித்து இந்த வேலையை செய்யராரு..


Vathsan
ஜூன் 24, 2024 10:01

இதனால்தான் பாஜகவிடம் காசு வாங்கிவிட்டு போலியாக கருத்து கணிப்பு. இவனுங்களா புக் கிரிக்கெட் விளையாடுற மாதிரி ஏதோ ஒரு நம்பர் போட்டுவிட்டு, காசு உள்ள கட்சிட்ட கறக்க வேண்டியது அப்புறம் ஷூட்டிங் ஸ்பாட்லயே உட்கார்ந்து அழ வேண்டியது. இனிமேலாவது நியாயமா இருங்க


Barakat Ali
ஜூன் 24, 2024 09:42

சொல்வதே அரசியல் கட்சிகள்தான் .......


ديفيد رافائيل
ஜூன் 24, 2024 09:39

காசு வாங்கி கருத்துக்கணிப்பு வெளியிட்டால் இப்படி தான் இருக்கும்.


Sampath Kumar
ஜூன் 24, 2024 09:09

எந்த வித லாபம் இல்லை என்டர்ல என்னத்துக்கு நீ பிசினெஸ் செய்கிறாய் மூடிட்டு போக வேண்டியது தானே சும்மா நீலி கணீர் வடிக்காதே போவியா


pmsamy
ஜூன் 24, 2024 08:30

பாஜகவிடமிருந்து லஞ்சமாக வாங்கிய பணத்தை ஐடி ரைட் செய்து திரும்பப் பெற வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறார்கள்


Velan Iyengaar
ஜூன் 24, 2024 08:26

பொருளாதார இழப்பு என்பது வடிகட்டிய பொய் .....கட்சி கொடுத்த காசு கணக்குல சேர்க்கமாட்டாங்களா ??


PARTHASARATHI J S
ஜூன் 24, 2024 08:15

கருத்துக் கணிப்பு செய்தவர்கட்கு கடவுள் கொடுத்த மிகப்பெரிய தண்டனை பொருளாதார இழப்பு. திருந்த மாட்டார்கள். இது ஒரு போதை மாயை.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை