உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குற்றவாளிகளை விடுவித்த சென்னை ஐகோர்ட்; சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சரமாரி கேள்வி

குற்றவாளிகளை விடுவித்த சென்னை ஐகோர்ட்; சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சரமாரி கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'டாக்டர் சுப்பையா கொலை வழக்கில், குற்றவாளிகளை சென்னை ஐகோர்ட் விடுவித்ததை புரிந்து கொள்ள முடியவில்லை' என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர்.கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் நரம்பியல் டாக்டர் சுப்பையா; சென்னையில் மருத்துவராக பணிபுரிந்தார். 2013ம் ஆண்டு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து வெளியே வரும் போது, அவரை கூலிப்படையினர் வெட்டிக் கொன்றனர். நிலப் பிரச்னை தொடர்பாக நடந்த இவ்வழக்கில் ஏழு பேருக்கு துாக்கு தண்டனையும், மூன்று பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து, சென்னை செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hjer0wfl&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0துாக்கு தண்டனையை உறுதி செய்ய, சென்னை உயர் நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பும், துாக்கு தண்டனையை எதிர்த்து ஏழு பேரும், ஆயுள் தண்டனையை எதிர்த்து இருவரும் மேல்முறையீடு செய்தனர். மரண தண்டனை விதிக்கப்பட்ட 7 பேர் மற்றும் ஆயுள் தண்டனை பெற்ற 2 பேரையும் விடுவித்து சென்னை ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியது.இது குறித்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம்கோர்ட் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. இந்த வழக்கை இன்று (நவ.,14) விசாரித்த நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். அவர்கள் கூறியதாவது:* டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் சம்பந்தப்பட்டோரை சென்னை ஐகோர்ட் எவ்வாறு விடுவித்தது?* பட்டப்பகலில் பயங்கரமாக நடந்த கொலை வழக்கில், சம்பந்தப்பட்ட அனைவரையும் ஐகோர்ட் விடுவித்துள்ளது. இது புரிந்து கொள்ள முடியவில்லை.* இது போன்ற ஒரு சம்பவத்தை நாங்கள் கேள்விப்பட்டதே இல்லை. * ஆதாரம் இருந்ததால் குற்றவாளிகளுக்கு விசாரணை நீதிமன்றம் மரண தண்டனை தந்தது.* மனு தொடர்பாக குற்றவாளிகள் பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பித்து, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர். குற்றவாளிகள் 4 வாரங்களில் பதில் அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 41 )

Selvaraj
நவ 15, 2024 17:25

இது ஒன்றும் புதியதல்ல. கீழமை நீதிமன்றம் தன்னிச்சையாக தீர்ப்பு அளிப்பதைப் போலவே உயர்நீதிமன்றங்களும் தன்னிச்சையாக முடிவு செய்கின்றன. உச்சநீதிமன்றமும் அவர்கள் சொன்ன தீர்ப்பு சரியல்ல என்று தீர்ப்பை மாற்றும். எல்லாவற்றிற்கும் முதன்மையான காரணம் அவர்களை யாரும் ஏன் தவறான தீர்ப்பு வழங்கினீர்கள் என்று கேட்க முடியாது என்பதால்.


Sivagiri
நவ 15, 2024 14:06

பத்து வருஷங்களுக்கு மேல் ஒரு கட்சியே இருக்க கூடாது , கலைத்து விட்டு புதிய கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்று சட்டம் போட்டால் என்ன ?


Sivagiri
நவ 15, 2024 14:03

கருணாநிதி காலத்தில் லா, மெடிக்கல் காலேஜ்களில் சீட் வாங்கியவர்கள்? இப்போ ஜட்ஜுகள் டாக்டர்கள் டீன்கள் போலீஸ் வேலைக்கு சேர்ந்தவர்கள், இப்போ டிஎஸ்பி எஸ்பி, ஐஜி,விவோக்கள் இப்போ ஹையர் ஆபிஸியல், அதே போல வட்டங்கள், போஸ்டர் ஓட்டியவர், மைக்செட் போட்டவர்கள், ரிக்ஸ்சா ஓட்டியவர் இப்போ எம் எல் ஏ எம்பி, மந்திரிகள், பிளாட்பார கடைக்காரர்கள் இன்று, தொழிலதிபர்கள் - இப்டி வளர்ந்து நிற்கிறது தீய மாடல் . . . .


Parthasarathy Rajagopalan
நவ 15, 2024 08:04

We have lost confidence completely in courts, as we find many murder culprits, corrupt politicians are given bail overnight whereas for small offenses people r kept for years in jail


K V Ramadoss
நவ 15, 2024 06:22

வக்கீல்கள, நீதிபதிகள் , கோர்ட் இவர்கள் உலகமே தனி. நம்மால் புரிந்துக் கொள்ள முடியாது. அவர்களிடம் போகாமல் இருந்தால் அதுவே பாக்கியம்.


theruvasagan
நவ 14, 2024 22:15

உயர் நீதி மன்றம் விடுதலை செய்துவிட்டது. இப்ப அதுக்கு என்ன. தண்டனையை எதிர்த்து மேல் முறையீட்டுக்கு போன ராகுல் காந்திக்கு சுப்ரீம் கோர்ட் தண்டனையை ரத்து செய்யாமல் தண்டனையை நிறுத்தி வைத்து அவரை சுதந்திரமாக உலாவ விட்டதே. அதற்கு உயர்நீதி மன்றம் செய்தது பரவாயில்லை.


v srinivasan
நவ 14, 2024 20:39

இதே சுப்ரீம் கோர்ட் அன்று ராஜிவ் காந்தி கொலை குற்றவாளிகளை விடுதலை செய்தததையும் புரிந்து கொள்ள முடியவில்லை


Brahamanapalle murthy
நவ 14, 2024 20:05

before the time limit, in my view these people will be out of India and nobody will be able to trace them. Hope this is not happening in the interest of justice


Anandhan
நவ 14, 2024 19:40

Super comment


அப்பாவி
நவ 14, 2024 19:39

2013 ல நடந்த கொலைக்கு இன்னிக்கி தீர்ப்பளிக்கிற லட்சணமான கோர்ட்டுங்க. ஏதாவது தப்பு செஞ்சிருந்தா மன்னிச்சிடுங்கந்னு ஒரே வார்த்தையில் பரிகாரம்.


சமீபத்திய செய்தி