உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மேஸ்ட்ரோ உஸ்தாத் ரஷீத் கான் காலமானார்

மேஸ்ட்ரோ உஸ்தாத் ரஷீத் கான் காலமானார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: புகழ்பெற்ற ஹிந்துஸ்தானி கிளாசிக்கல் பாடகர் உஸ்தாத் ரஷீத் கான் காலமானார். அவருக்கு வயது 55.இந்திய கிளாசிக்கல் மற்றும் ஹிந்துஸ்தானின் பாரம்பரிய இசையில் புகழ்பெற்ற இவர், உ.பி.,யை சேர்ந்தவர். புகழ்பெற்ற பாடகர் இனாயத் ஹூசைன் கானின் பேரன். இந்திய கிளாசிக், ஹிந்துஸ்தானி பாரம்பரிய இசையில் பல்வேறு ஆல்பம் பாடல்களை உருவாக்கியுள்ள இவர், பாலிவுட் படங்களில் பல்வேறு பாடல்களை பாடி உள்ளார்.புற்றுநோய் காரணமாக கோல்கட்டாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி இன்று (ஜன.,09) மாலை 3:45 மணிக்கு காலமானார். இதனை மருத்துவமனை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளது.தகவல் அறிந்த மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மருத்துவமனைக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். உஸ்தாத் ரஷீத் கான் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Kannan
ஜன 10, 2024 10:25

A great loss to the Hindustani classical music world. One of the finest vocalist ever we have seen. Ohm Shanti.


Subramanian
ஜன 10, 2024 08:05

ஆழ்ந்த இரங்கல்கள் ஓம் சாந்தி


Ramesh Sargam
ஜன 10, 2024 00:12

மிக்க வருத்தமான செய்தி. ஒரு நல்ல இசை கலைஞரை நாம் இன்று இழந்துள்ளோம். அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம். ஓம் ஷாந்தி.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை