உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மஹா., துணை முதல்வர் பதவியில் இருந்து விலக பட்னாவிஸ் விருப்பம்

மஹா., துணை முதல்வர் பதவியில் இருந்து விலக பட்னாவிஸ் விருப்பம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மஹாராஷ்டிராவில் தோல்விக்கு பொறுப்பு ஏற்று துணை முதல்வர் பதவியில் இருந்து விலக பா.ஜ.,வின் தேவேந்திர பட்னாவிஸ் விருப்பம் தெரிவித்துள்ளார்.2019 லோக்சபா தேர்தலில், மஹாராஷ்டிராவில் 23 இடங்களில் வெற்றி பெற்று இருந்த பா.ஜ.,வுக்கு 2024 ல் நடந்த தேர்தலில் 9 இடங்கள் மட்டுமே கிடைத்தது. இதனையடுத்து தேர்தல் தோல்விக்கு பொறுப்பு ஏற்று பதவி விலக, அம்மாநில துணை முதல்வர் பட்னாவிஸ் முன்வந்துள்ளார்.மஹாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் கூட்டணி ஆட்சி நடக்கிறது. துணை முதல்வராக பா.ஜ.,வின் பட்னாவிஸ் உள்ளார். லோக்சபா தேர்தலில், மஹாராஷ்டிராவில் பா.ஜ., 9 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. கடந்த தேர்தலில் இக்கட்சி 23 இடங்களில் வெற்றி பெற்று இருந்தது. இதனையடுத்து பட்னாவிஸ் பதவி விலக விருப்பம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக பட்னாவிஸ் கூறியதாவது: அரசு பொறுப்புகளில் இருந்து என்னை விடுவிக்க வேண்டும் எனவும், வெளியில் இருந்து கட்சி பணிகளை ஆற்ற அனுமதிக்க வேண்டும் என கட்சி தலைமையை கேட்டுக் கொள்கிறேன். விரைவில் கட்சி தலைவர்களை சந்திக்க உள்ளேன். இவ்வாறு பட்னாவிஸ் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

vimalathithan subramanian
ஜூன் 06, 2024 13:42

லோக்சபா தேர்தலில் தோற்ற அமைச்சர்கள்


RAJ
ஜூன் 05, 2024 22:13

போய் தொலை... உன்னாலதான் எல்லாப் பிரச்சனையும்.. .


Easwar Kamal
ஜூன் 05, 2024 20:43

என்னுங்கண்ணா இவளவு அவசரம் இன்னு 6 மாதம் பொறுத்து இருந்தால் மக்களே வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள்.


தாமரை மலர்கிறது
ஜூன் 05, 2024 19:42

பாட்னவிஸ் அடுத்த பிரதமராக வாய்ப்புள்ளது.


Vijay D Ratnam
ஜூன் 05, 2024 19:14

முன்னாள் மஹாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னவிஸ் 2029 பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் அவர் துணை முதல்வர் பதவியில் இருந்து விலகுகிறார்.


ஸ்ரீதேவி
ஜூன் 05, 2024 18:34

பழைய நண்பர் உத்தவ் தாக்கரேவை கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் பட்னாவிஸ் விலகுகிறார். மீண்டும் உத்தவ், ஏக்நாத், பாஜக இணைந்து அரசு அமைக்க வாய்ப்பு உள்ளது. பட்னாவிஸ் மத்திய அரசியலுக்கு செல்ல வாய்ப்பு உள்ளது


Pandiarajan Thangaraj
ஜூன் 05, 2024 17:18

சரியான முடிவு?


Jayaraman Rangapathy
ஜூன் 05, 2024 16:46

Right thinking


மேலும் செய்திகள்