உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புறாக்களுக்கு உணவளிக்கும் இடங்களை மூட மஹா., அரசு உத்தரவு

புறாக்களுக்கு உணவளிக்கும் இடங்களை மூட மஹா., அரசு உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மும்பையில், 'கபூதர் கானாஸ்' எனப்படும், புறாக்களுக்கு உணவளிக்கும், 51 இடங்களை மூட மஹாராஷ்டிர அரசு உத்தரவிட்டுள்ளது. மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது.இங்குள்ள மும்பை, புனே உள்ளிட்ட பகுதி களில் இயற்கையாகவே புறாக்கள் அதிகம் வசிக்கின்றன. இதனால் பூங்காக்கள், சுற்றுலா தலங்களுக்கு அருகே குவியும் நுாற்றுக்கணக்கான புறாக்களுக்கு அப்பகுதி மக்கள் உணவு வழங்குகின்றனர். இதனால், அப்பகுதியை சுற்றி வசிப்போருக்கு நுரையீரலை பாதிக்கும், 'ஹைப்பர்சென்சிட்டிவ் நிமோனியா' தொற்று அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. இது, புறாக்களுடன் தொடர்பில் இருப்பதால் ஏற்படுவதாகவும், ஏற்கனவே உடல் உபாதைகள் உள்ளவர்கள் இந்த நோயால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் 60- - 65 சதவீதம் அதிகம் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.இதையடுத்து, புறாக்களுக்கு உணவளிக்கும் இடங்களை மூட, பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது, மஹாராஷ்டிர சட்டசபையிலும் எழுப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து மும்பையில் உள்ள, 51 'கபூதர் கானாஸ்'களை மூட மஹாராஷ்டிர அரசு மும்பை மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் புறாக்களுக்கு உணவளிப்பதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அரசு தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

PR Makudeswaran
ஜூலை 08, 2025 13:22

புறா தானாக இறை தேடி கொள்ளும். மனிதரில் எத்தனை விஷக்கிருமி ? கருத்து ரீதியாக ? உடல் ரீதியாக ? இன்னும் எல்லா வகைகளிலும் விஷம் பரப்பும் மனிதர்கள்?


Barakat Ali
ஜூலை 08, 2025 12:27

விரும்புபவர்கள் புறாவை உணவாக்கிக் கொள்ளலாம் ....


Kulandai kannan
ஜூலை 08, 2025 11:27

இதேபோல் தெருநாய்களுக்கு உணவளிப்பதற்கும் தடை விதிக்கலாம்.


Pandi Muni
ஜூலை 08, 2025 12:22

முதலில் மனிதனுக்கான இலவசங்கள் அனைத்தையும் நிறுத்தினால் அனைத்தும் சரியாகும்


தத்வமசி
ஜூலை 08, 2025 11:25

புறா மக்களோடு மக்களாக உயர்ந்த கட்டிடங்களில் வீடுகளில் இடுக்குகளில் கூடு கட்டி வாழக்கூடிய பறவை. இதை பல ஊர்களில் மட்டுமல்ல நாடுகளிலும் இதே நிலை தான். இவற்றை தூரத்தில் தான் காண அழகு. கிட்டே வந்தால் துர்நாற்றம் அதாவது நமக்கு குறிப்பாக குழந்தைகளுக்கு ஒவ்வாத நாற்றம் வீசும். அது யாவருக்கும் நல்லதல்ல. அதே சமயம் புறாக்கள் நோய்வாய் பட்டாலோ, இறந்தாலோ துர்நாற்றம் தாங்க இயலாது. வீடுகளில் குளிர்சாதன பெட்டியின் இடுக்கில் இவை கூடு கட்டி முட்டை போட்டு குஞ்சு பொரிக்கும். அதன் நாற்றம் ஏசி போடும் போது வீட்டுக்குள் வீசும். இதனால் கட்டாயம் நுரையிரல் கோளாறு, சுவாசக் கோளாறு வருவதற்கு வாய்ப்பு உண்டு. புறா மட்டுமல்ல வளர்ப்புப் பிராணிகளில் சுவாசத்தால் மனிதர்களான நமக்கு சுவாசக் கோளாறுகள் வருவதற்கு நிறைய வாய்ப்பு உண்டு. இவற்றை புண்ணியம் என்கிற பெயரில் மூட்டை மூட்டையாக தானியங்களைக் கொட்டி வளர்க்க வேண்டாம். அவை தானாகவே இரை தேடி உண்ணும். அப்போது அதன் எண்ணிக்கை கட்டுப்பாடில் இருக்கும்.


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜூலை 08, 2025 10:10

ஒரு உயிரினமாக புறாவுக்கும் வாழ உரிமையுண்டு. அதேசமயம் மிகவும் ஆபத்தான, அருவருப்பான, வெகுவாக பெருகும் உயிரினங்களில் புறாவும் ஒன்று. கிட்டதட்ட புறா ஒரு இறக்கை முளைத்த எலி என்றால் மிகையாகாது.


visu
ஜூலை 08, 2025 10:40

அருவெறுப்பான ? சரியான வார்தைத்தானா


Sudha
ஜூலை 08, 2025 10:05

இன்னொரு அரசியல் ஸ்டண்ட். வெட்டி வேலைக்கு நிறைய நேரம் இருக்கிறது


ديفيد رافائيل
ஜூலை 08, 2025 09:32

எந்தவொரு புறாவும் மனிதர்கள்கிட்ட வந்து உணவு கொடுங்கன்னு கேட்கவில்லை, மனிதர்களை விரும்பி தான் உணவளிக்கின்றனர். So அங்கிருப்பவர்கள் புறாக்களுக்கு உணவு வழங்க கூடாது என்ற தடை உத்தரவு போட்டாலே போதும். ஏனெனில் இந்த இடம் புறா இயற்கையாகவே வசிக்கும் இடம்.


ديفيد رافائيل
ஜூலை 08, 2025 09:28

புறாவுக்கு சாப்பாடு போட கூடாதுன்னு சொன்னா கூட அர்த்தம் இருக்கு. புறா இயற்கையாகவே அந்த இடத்துல வசிக்கும் இடம். யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுக்காமல் அந்த இடத்தில் rest எடுக்குது. சாப்பாடு போடுறதை தடை பண்ணா கூட வேற இடத்துல போய் சாப்பிட்டு கொள்ளும்.


நசி
ஜூலை 08, 2025 09:14

புறாக்களை வணிக ரீதியாக கறி உணவுக்கு வளர்க்கின்றனர்.. இதனால் பல்வேறு வியாதிகள் மக்கள் தொகை அடர்த்தியான இடங்களில் பரவுகிறது


sridhar
ஜூலை 08, 2025 07:32

A long overdue step. When they flutter their wings fine particles spread in the air and get into the lungs.


சமீபத்திய செய்தி