உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / துவாரகா ராமர் கோவிலில் இன்று மஹா கும்பாபிஷேகம்

துவாரகா ராமர் கோவிலில் இன்று மஹா கும்பாபிஷேகம்

புதுடில்லி:புதுடில்லி துவாரகா 7வது செக்டாரில் அமைந்துள்ள ஸ்ரீராம் மந்திரில் இன்று, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடத்தப்படுகிறது.இதுகுறித்து, கோவில் நிர்வாகக் குழு தலைவர் ராஜூ, அறங்காவலர் விஸ்வநாதன் ஆகியோர் கூறியதாவது:புதுடில்லி துவாரகா 7வது செக்டாரில் அமைந்துள்ள ஸ்ரீராம் மந்திரில், அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம், ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம் மூலாம்னாயம் ஸர்வஞ்ய பீடம் ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருளாசியுடன் இன்று நடக்கிறது.இன்று காலை 8:30 மணிக்கு நான்காம் கால பூஜைகள், ஜபம், ஹோமம் மற்றும் தத்துவார்ச்சனை நடக்கிறது.அதைத் தொடர்ந்து, காலை 10:00 மணிக்கு மஹா பூர்ணாஹூதி, தீபாராதனை, யாத்ரா தானம், க்ருஹப்ரீத்தி நடக்கிறது. காலை 11:00 மணிக்கு கோபுரத்துக்கு கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. அதையடுத்து, 11:30 மணிக்கு மூலஸ்தான மஹா கும்பாபிஷேகம் விமரிசையாக செய்யப்படுகிறது.காலை 11:45 மணிக்கு மஹா ஆரத்தி மற்றும் பிரசாத வினியோகம் நடக்கிறது.இந்த அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகத்தில் அனைவரும் பங்கேற்றும் ஸ்ரீராமரின் அருளைப் பெற வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை