உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நிதி, வருவாய், உள்துறை கட்டாயம் வேணும்; அடம் பிடிக்கிறார் ஏக்நாத் ஷிண்டே

நிதி, வருவாய், உள்துறை கட்டாயம் வேணும்; அடம் பிடிக்கிறார் ஏக்நாத் ஷிண்டே

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: 'பா.ஜ.,வின் தேவேந்திர பட்னவிஸ் முதல்வர் ஆனால், தனக்கு நிதி, வருவாய், உள்துறை இலாக்கா கட்டாயம் ஒதுக்க வேண்டும்' என ஏக்நாத் ஷிண்டே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில், ஆளும் மஹாயுதி கூட்டணி, 230 இடங்களில் வென்றது. பா.ஜ., 132 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியானது. கூட்டணியில் உள்ள சிவசேனா, 57 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ், 41 இடங்களிலும் வென்றன. பா.ஜ., அதிகப்படியான இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் தங்கள் கட்சிக்கு முதல்வர் பதவி வேண்டும் என்றும், முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் முதல்வர் ஆக்கப்பட வேண்டும் என்றும் அந்த கட்சியினர் தீர்மானமாக இருக்கின்றனர்.இதை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் ஏற்றுக் கொண்டு விட்டார்; தனக்கு துணை முதல்வர் பதவி மட்டும் கொடுத்தால் போதும் என்பது அவரது நிலைப்பாடு. ஆனால் சிவசேனா கட்சியின் ஏக்நாத் ஷிண்டே (தற்போதைய முதல்வர்) ஏற்கவில்லை. முதல்வர் பதவி தொடர்பாக முடிவு எடுப்பதில் ஏற்பட்டுள்ள இழுபறி, புதிய அரசு அமைவதில் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.,வின் தேவேந்திர பட்னவிஸ் முதல்வர் ஆகும் பட்சத்தில், தனக்கு நிதி, வருவாய், உள்துறை இலாக்கா கட்டாயம் ஒதுக்க வேண்டும். இந்த மூன்று இலாகாக்களையும் சிவசேனாவுக்கு வழங்க முடியாவிட்டால், தனது கட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்காது என ஏக்நாத் ஷிண்டே பா.ஜ., தலைமையிடம் கூறியுள்ளார். இதற்கு பா.ஜ., தலைமையிடம் பதில் இல்லை. இழுபறிக்கு தீர்வு காண ஏக்நாத் ஷிண்டேவை சந்தித்து மஹாயுதி கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்துமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தி உள்ளார்.அதன்படி ஷிண்டே, பட்னவிஸ் மற்றும் அஜித் பவார் ஆகியோர் மும்பையில் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் ஏக்நாத் ஷிண்டே இந்த சந்திப்பைத் தவிர்த்துவிட்டு, சதாராவில் உள்ள தனது கிராமத்திற்குச் சென்றுவிட்டார்.மராத்தா சமூகத்தினர் இடையே ஏக்நாத் ஷிண்டேவுக்கு செல்வாக்கு உள்ளது. அது, பா.ஜ., அரசுக்கு மிகவும் முக்கியம். இதனால் ஏக்நாத் ஷிண்டேவை சமாதானம் செய்ய, பா.ஜ., தலைமை பல்வேறு முயற்சிகள் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

AMLA ASOKAN
டிச 01, 2024 22:12

ஷின்டே வேணாம் இந்த சித்து விளையாட்டு . அப்புறம் கட்சி இரண்டா உடையும் . ஒரு பதவியும் கிடைக்காது . உத்தவ் தாக்கரே சிரித்து ரசித்து கொண்டிருக்கிறார் .


C.SRIRAM
டிச 01, 2024 21:53

இந்த நபர் பேராசைக்காரர் . தகுதியில்லாதவரை ஆதரித்தால் இது போல நடக்கும் . "132" ஐம்பதை விட சிறியது என்று நினைக்கும் இவர் சரியாக வரவில்லை என்றால் இக்கட்சியையும் முடிந்த அளவு பிரித்து பா ஜ க வில் இணைப்பது நல்லது .


kalyan
டிச 01, 2024 21:02

ஷிண்டே வை ஓரங்கட்டிவிட்டால் அந்த சிவசேனாவும் முறிந்து அதில் சில MLA க்கள் BJP க்கு தாவி விடலாம் பிறகென்ன . சிவசேனாவை அடியோடு காலி பண்ணினது போலத்தான்


Narayanan Muthu
டிச 01, 2024 19:47

ஒருவேளை காங்கிரஸ் வெற்றிபெற்று இந்த இழுபறி நிலைமை இருந்தால் மீடியாக்களுக்கு கொண்டாட்டமாக இருந்திருக்கும். தற்போது மீடியாக்களின் நிலை இஞ்சி தின்ற குரங்கின் நிலை.


Dharmavaan
டிச 01, 2024 18:58

மகாராஷ்டிராவின் கட்டு மரம்


Dharmavaan
டிச 01, 2024 18:56

இவன் இப்படி திமிறினால் இவன் போக வழி இல்லை. திரும்ப யூதாவிடம் போனால் எதனை பேர் இவனுடன் வருவார்கள் என்பது சந்தேகமே .ஷிண்டே திர சங்கு சொர்கம் தான்


அப்பாவி
டிச 01, 2024 15:22

அப்போ முதல்வர் எதுக்கு?


Narayanan Muthu
டிச 01, 2024 19:44

மிக்ஸர் தின்ன


Indian
டிச 01, 2024 14:50

சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் .......நான் சிரித்து கொண்டே அழுகின்றேன் .....


Indian
டிச 01, 2024 14:44

வினை விதைத்தவன் வினை அறுப்பான் ......முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் ...


Sivagiri
டிச 01, 2024 14:26

எல்லாப் பாயல்களும், நிதியில்-தான் - கண்ணும் கருத்துமா இருக்காய்ங்க . . ,


புதிய வீடியோ