உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார் மகாதேவன்

உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார் மகாதேவன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சென்னை உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு நீதிபதியாக இருந்த மகாதேவன், உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார்.சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு நீதிபதியாக பணியாற்றிய ஆர். மகாதேவன், காஷ்மீர் உயர்நீதிமன்ற நீதிபதி கோடிஸ்வர் சிங் ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்தது. இதனை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டார். நேற்று முன்தினம் (ஜூலை 16) இதற்கான அறிவிப்பு வெளியானது.இன்று, மகாதேவன், கோடிஸ்வர் சிங் ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் உச்சநீதிமன்றத்தில் காலியாக இருந்த 2 பணியிடங்களும் நிரப்பப்பட்டு விட்டன. தலைமை நீதிபதியையும் சேர்த்து உச்சநீதிமன்றத்தில் 34 நீதிபதிகள் பணியாற்றுகின்றனர்.

சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு நீதிபதியாக கிருஷ்ணகுமார் இன்று பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Gajageswari
ஜூலை 18, 2024 13:56

நீதி துறையில் சீர்திருத்தம் தேவை


வாசகர்
ஜூலை 18, 2024 12:53

நீதி அரசர்களுக்கு வாழ்த்துக்கள்


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை