உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சபரிமலையில் மகரஜோதி தரிசனம்: சரண கோஷங்களுடன் பக்தர்கள் பரவசம்

சபரிமலையில் மகரஜோதி தரிசனம்: சரண கோஷங்களுடன் பக்தர்கள் பரவசம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சபரிமலை: பொன்னம்பலமேட்டில் இன்று (ஜன.,14) மாலை 6:43 மணிக்கு காட்சியளித்த மகரஜோதியை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.கேரள மாநிலம், சபரி மலை ஐயப்பன் கோவிலில், இந்த ஆண்டுக்கான மகரவிளக்கு காலம் நிறைவு கட்டத்தை நெருங்கியது. இன்று மாலை, மகர விளக்கு பெருவிழாவும், மாலையில் பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனமும் நடந்தது. மகர சங்கரம பூஜை இன்று காலை 8: 45 மணிக்கு நடைபெற்றது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4u14n59l&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பந்தளத்திலிருந்து நேற்று முன்தினம் புறப்பட்ட திருவாபரண பவனி இன்று மாலை 5:36 மணிக்கு சரங்குத்தி வந்தடைந்தது. அங்கு தேவசம்போர்டு அதிகாரிகளின் வரவேற்புக்கு பின் பெரிய நடை பந்தல் வழியாக, சன்னிதானம் வந்தடைந்தது. தந்திரியும் மேல் சாந்தியும் திருவாபரண பெட்டியை வாங்கி நடை அடைத்து ஆபரணங்கள் அணிவித்து நடை திறந்து தீபாராதனை நடத்தினர். இந்த நேரத்தில் கோவில் நேர் எதிரே கிழக்கு பக்கத்தில் மகர நட்சத்திரம் ஒளிவிட்டு பிரகாசித்தது. இதனை பக்தர்கள் சரண கோஷத்துடன் தரிசனம் செய்தனர். தொடர்ந்து பொன்னம்பலமேட்டில் மூன்று முறை ஜோதி காட்சி காட்சியளித்தது. சபரிமலையில் பக்தர்கள் கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர். இதனால் அங்கு பக்தர்களின் சரண கோஷம் விண்ணை பிளந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

RR Donn Lee
ஜன 15, 2025 02:43

Lord Almighty Ayyappa Blessings, Difference Between Mahara Jothi and Mahara Vilakku, Mahara Jothi it is appearing in nature like Lord Almighty Ayyappas shrine. Mahara Vilakku only can creating human in Nature.


subramanian
ஜன 14, 2025 21:40

தினமலருக்கு மிகவும் நன்றி. உலக பக்த கோடிகள் சார்பில் நன்றி. எங்கெங்கும் உலகில் பார்க்க தவறியவர்களுக்கு ஒரு மன நிம்மதியை இந்த புகைப்படம் தரும்.


அப்பாவி
ஜன 14, 2025 20:03

நட்சத்திரம் நல்லாத் தெரிஞ்சுது.


Ramesh Sargam
ஜன 14, 2025 19:56

ஸ்வாமியே சரணம் ஐயப்பா. ஸ்வாமியே சரணம் ஐயப்பா. ஸ்வாமியே சரணம் ஐயப்பா. ஸ்வாமியே சரணம் ஐயப்பா. ஸ்வாமியே சரணம் ஐயப்பா. ஸ்வாமியே சரணம் ஐயப்பா. ஸ்வாமியே சரணம் ஐயப்பா. ஸ்வாமியே சரணம் ஐயப்பா. ஸ்வாமியே சரணம் ஐயப்பா. ஸ்வாமியே சரணம் ஐயப்பா.


திகழ்ஓவியன்
ஜன 14, 2025 18:55

திருஆபரனை பெட்டி வந்து நகை அணிவிக்க கதவு சாற்றி திறக்கும் கதவு அருகே சேகர் பாபு நின்று தமிழக அரசுக்கு துஸடர்களால் தொல்லை வர கூடாது என்று வேண்டிக்கொண்டார் போல அவ்வளவு தமிழக அமைச்சர் சிறப்பு ஒரு துர் தேவதை ஸ்டாலினை நெருங்காது , ஸ்வாமியே சரணம் அய்யப்பா


subramanian
ஜன 14, 2025 21:38

அப்படி என்றால் அவர் மனைவி துர்கா செய்யும் பூஜைகள் வேலை செய்யவில்லை என்று கூறுகிறீர்கள்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை