உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 11 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை! குற்றவாளிக்கு 107 ஆண்டுகள் சிறை

11 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை! குற்றவாளிக்கு 107 ஆண்டுகள் சிறை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மலப்புரம்; கேரளாவில் 11 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 107 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.இது பற்றிய விவரம் வருமாறு: பொன்னானி நெய்தலூரைச் சேர்ந்தவர் தாமோதரன் என்கிற மோகனன்(60). தமது வீட்டில் 2012ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை 11 வயது சிறுவனுக்கு பணம், மது மற்றும் உணவு கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக இவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இது குறித்து பொன்னானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். வழக்கு பொன்னானி விரைவு சிறப்பு கோர்ட்டில் வழக்கும் நடைபெற்று வந்தது. 17 சாட்சிகள், 27 ஆவணங்கள் மோகனனுக்கு எதிராக கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.அனைத்து விசாரணைகளும் முடிந்த நிலையில், மோகனனை குற்றவாளி என்று உறுதிப்படுத்திய கோர்ட், அவருக்கான தண்டனையையும் அறிவித்துள்ளது. தண்டனையை நீதிபதி சுபிதா சிரக்கல் அறிவித்தார்.அதன்படி, குற்றவாளி மோகனனுக்கு போக்சோ சட்டம் 4 பிரிவு 3 (a)கீழ் 20 ஆண்டுகள் சிறை, ரூ.50,000 அபராதம், போக்சோ சட்டத்தின் கீழ் 80 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.3.5லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. கூடுதலாக, சிறார் நீதித்துறை சட்டப்பிரிவின் கீழ் 7 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.50,000 அபராதமும் விதிக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக 107 ஆண்டுகள் சிறையும், ரூ.4.5லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது. தீர்ப்புக்கு பின், குற்றவாளி மோகனன் தவனூர் மத்திய சிறைக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

அப்பாவி
மார் 01, 2025 13:39

அடுத்தது இவனை அத்தனை வருஷம் உயிரோட வெக்க ஆகிற செலவையும் அரசே ஏற்க வேண்டும்.


ஆரூர் ரங்
மார் 01, 2025 11:58

சிறையில் வைத்தால் சக சிறைவாசிகளுக்கு ஆபத்து. அசந்தால் வார்டர்களின் மேலேகூட கை வைத்திடுவார் . தூக்கு தண்டனையே சிறந்தது


XYZ JALRA
மார் 01, 2025 11:11

இந்த மாதிரி செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து போடாதீர்கள் படிக்கும் போதே அருவருப்பாக உள்ளது


Ram pollachi
மார் 01, 2025 10:34

ஓர் இணை சேர்க்கை பிரியர்கள் அங்கு அதிகம். வெளியே இருந்ததால் ஆளை தேடி பிடித்து செலவு செய்ய வேண்டும். சிறைக்குள் இலவசமாக ஓவர் ஆயில் சர்வீஸ் செய்து கொள்ளலாம்...


Venkatesan Srinivasan
மார் 01, 2025 11:13

கண்டிப்பாக சிறையில் கடின உடல் உழைப்பு வேலை கொடுக்க வேண்டும். அதில் பெறும் ஊதியத்தில் இவர்களை பராமரிக்க வேண்டும். பொதுமக்களின் வரி பணத்தில் இலவச பாதுகாப்பு சொகுசு உணவு சீராட்டல் கொடுக்கலாகாது.


Kanns
மார் 01, 2025 10:29

GenuineGrave Offences Must be Investigated& TriedFast UnBiasedly & Punished IF Material Evidences& Circumstances Exists Witnesses are mostly Cookedup. However AS Atleast 50% Cases are False & Cookedup by Vested-Biased-Selfish-Conspiring Case/Vote/ News/Power Hungry & PowerMisusing Criminal Gangs. All Such PowerMisusing Criminals incl False Complainants MUST be Punished in Same Trials. Unti then, People Dont Believe Stories of Such Criminal Gangs.


Sankar SKCE
மார் 01, 2025 08:07

தமிழ்நாடு எந்த முடிக்கும் லாயக்கில்லை


அப்பாவி
மார் 01, 2025 07:39

2012 ல 60 வயசா? ஆடி அசைஞ்சு இவிங்க தண்டனை குடுத்தா? வெளங்கிடும்.


Natarajan Arun Nagendran
மார் 01, 2025 10:15

அதுவும், விரைவு சிறப்பு கோர்ட்டில்.....


Keshavan.J
மார் 01, 2025 11:06

இப்பவே இவனுக்கு 107 வயசு மாதிரி இருக்கு. எப்படியோ இது போல தண்டனை குடுப்பது நல்லது .


சமீபத்திய செய்தி