மேலும் செய்திகள்
சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி
12-Jan-2025
ஷிவமொக்கா: தெரு நாயை கல்லால் அடித்து கொன்ற நபர் ஒருவர், அதனை ஆட்டோவில் கட்டி இழுத்து சென்றதை, முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா கண்டித்தார். சம்பவத்துக்கு காரணமானவர் கைது செய்யப்பட்டார்,ஷிவமொக்கா, ஹொசநகரின், ரிப்பன்பேட்டின், கெஞ்சனாளா கிராமத்தின் ரயில் நிலையம் அருகில், நேற்று காலை தெரு நாய் ஒன்று படுத்திருந்தது.அப்போது அங்கு வந்த ஆட்டோ ஓட்டுநர் வாஜித், 35, தெரு நாய் மீது கல்லை போட்டார். இதே போன்று, மூன்று முறை கல்லை போட்டு கொன்றார்.நாயின் உடலை தன் ஆட்டோவின் பின்புறம் கட்டி, இழுத்து சென்றார். இதை கண்ட அப்பகுதி இளைஞர், தன் மொபைல் போனில் வீடியோ பதிவு செய்து, சமூக வலைதலங்களில் வெளியிட்டார். இது வேகமாக பரவியது.இதை முன்னாள் மத்திய அமைச்சரும், தேசிய பிராணிகள் நலன் அமைப்பு செயலருமான மேனகாவுக்கும், 'இ - மெயில்' மூலம் அனுப்பினார்.கோபமடைந்த அவர், மாநில பிராணிகள் நலவாரியத்தை தொடர்பு கொண்டு, ஆட்டோ ஓட்டுநர் மீது புகார் அளிக்கும்படி வலியுறுத்தினார். ஷிவமொக்கா எஸ்.பி.,யிடமும் பேசினார்.அதன்பின் விழித்து கொண்ட பிராணிகள் நல வாரியத்தினர், கால்நடைத் துறையின் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.அதிகாரிகளும் ஹொசநகர் போலீஸ் நிலையத்தில், புகார் அளித்தனர். போலீசார் ஆட்டோ பதிவு எண்ணை வைத்து, வாஜித்தை கைது செய்தனர்.தன் வீட்டில் வளர்த்த கோழிகளை நாய் தின்றதால், கோபமடைந்து நாயை கொன்றதாக விசாரணையில் ஒப்பு கொண்டார்.
12-Jan-2025