உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  கடற்படை குறித்து பாக்.,கிற்கு தகவல் அனுப்பியவர் கைது

 கடற்படை குறித்து பாக்.,கிற்கு தகவல் அனுப்பியவர் கைது

உடுப்பி: கர்நாடகாவின் உடுப்பி மல்பே கடல் பகுதியில், 'கொச்சி ஷிப் யார்டு' நிறுவனத்திற்கு சொந்தமான கப்பல் கட்டும் தளம் உள்ளது. நம் நாட்டின் கடற்படைக்காக தயாரிக்கப்படும் கப்பல்களின் திறன், போர் கப்பல்களின் திறன் குறித்த ரகசிய தகவல்கள், இங்கிருந்து பாகிஸ்தானுக்கு அனுப்பப்படுவதாக தகவல் கிடைத்தது. இதன்படி, கர்நாடக போலீசார் விசாரித்தனர். இது தொடர்பாக, உத்தர பிரதேசத்தை சேர்ந்த ரோகித், 29, சாந்திரி, 37, ஆகிய இருவரை கடந்த மாதம் கைது செய்தனர். இவர்களுடன் வேறு யாரே னும் தொடர்பில் உள்ளனரா என்பது குறித்து போலீசார் விசாரித்தனர். இதில், மல்பே கப்பல் கட்டும் தளத்தில் பணிபுரியும் ஹிரேந்திர குமார், 34, என்பவருக்கு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவரை உடுப்பி போலீசார் கைது செய்தனர். குஜராத்தைச் சேர்ந்த இவர் . 'வாட்ஸாப்' மூலம் பாகிஸ்தானில் உள்ளவர்களுக்கு இந்திய கப்பல்கள் குறித்த ரகசிய தகவல்களை அனுப்பியதும் தெரியவந்தது. உடுப்பி போலீஸ் எஸ்.பி., ஹரிராம் சங்கர் கூறுகையில், ''ஹிரேந்திர குமார், தன் பெயரில் சிம் கார்டுகள் வாங்கி சட்டவிரோத செயலில் ஈடுபட்டு வந்தார். ஏற்கனவே கைது செய்யப்பட்ட இரண்டு பேருக்கும் ஆலோசகராக இருந்துள்ளார்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

V RAMASWAMY
டிச 23, 2025 10:35

நாட்டு விரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு மன்னிப்பே இல்லாமல் உடன் சுடப்படலாம் என்கிற மரண தண்டனையே சிறந்தது.


சமீபத்திய செய்தி