உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.21 கோடி அரசு பணத்தை திருடி காதலிக்கு பங்களா வாங்கியவருக்கு வலை

ரூ.21 கோடி அரசு பணத்தை திருடி காதலிக்கு பங்களா வாங்கியவருக்கு வலை

மும்பை: மஹாராஷ்டிராவின் சத்ரபதி சாம்பாஜிநகரில் உள்ள அரசு விளையாட்டுத்துறை அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றுபவர் ஹர்ஷ் குமார் ஷிர் சாகர்.இவர் மாதம் 13,000 ரூபாய் சம்பளம் பெறுகிறார். சமீப நாட்களாக இவர் பி.எம்.டபிள்யூ., காரில் சொகுசாக வலம் வந்துள்ளார். அவர் வேலை பார்க்கும் அலுவலகத்தின் விளையாட்டுத்துறை அதிகாரி தேஜஸ் தீபக் குல்கர்னி, சமீபகாலமாக அரசுக்கு சேரவேண்டிய பணம் அரசுக்கு வருவதில்லை என்பதை கண்டறிந்தார். இது குறித்து போலீசில் புகார் அளித்தார். விசாரணையில் ஒப்பந்த பணியாளர் ஹர்ஷ் குமார் மற்றொரு பெண் அதிகாரியின்

கணவருடன் சேர்ந்து அரசுக்கு வரவேண்டிய தொகையை திருடியது தெரியவந்தது. இது குறித்து போலீசார் கூறியதாவது:

ஹர்ஷ் குமாரும் மற்றொரு பெண் ஊழியரின் கணவரும் இணைந்து சத்ரபதி சாம்பாஜி நகர் விளையாட்டுத்துறை அலுவலகத்துக்கு வரவேண்டிய 21 கோடியே 59 லட்சத்து 38 ஆயிரம் ரூபாயை மோசடி செய்தது தெரியவந்தது. இதற்காக இங்குள்ள இந்தியன் வங்கி கிளை வழியாக விளையாட்டுத்துறைக்கு வரவேண்டிய பணத்தை ஹர்ஷ் குமார் ஆன்லைன் வாயிலாகவும், போலி ஆவணங்களை பயன்படுத்தியும் மோசடி செய்துள்ளார்.இதையடுத்து காருடன் தலைமறைவான ஹர்ஷ் குமாரை தேடி வருகிறோம். மேலும் விசாரணையில் நான்கு படுக்கை அறை வசதி கொண்ட சொகுசு பங்களாவை ஹர்ஷ் குமார் தன் காதலிக்கு பரிசாக அளித்துள்ளார். மேலும் பி.எம்.டபிள்யூ., காரையையும் வாங்கி உலா வந்துள்ளார். ஆறு மாதத்துக்கு பிறகே அவர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்து உள்ளது. அவரது கூட்டாளியான யசோதா ஷெட்டியின் கணவர் ஜீவனும் அரசு பணத்தை மோசடி செய்து அதை கொண்டு 35 லட்சம் மதிப்புள்ள காரை வாங்கியுள்ளார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை