உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீகார் முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

பீகார் முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

தாவணகெரே: பீகார் முதல்வர் நிதீஷ்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்த, பாட்னா வாலிபர் கைது செய்யப்பட்டு உள்ளார்.பீகாரில் ஐக்கிய ஜனதாதளம் - ராஷ்ட்ரீய ஜனதாதளம் கூட்டணி கட்சிகளின் ஆட்சி நடந்து வந்தது. ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் நிதீஷ்குமார் முதல்வராக இருந்தார். கடந்த மாதம் 28ம் தேதி, முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடனான கூட்டணியை முறித்து, தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து, மீண்டும் முதல்வர் ஆனார்.இந்நிலையில் கடந்த மாதம் 30ம் தேதி, பீகார் போலீஸ் டி.ஜி.பி., ஆர்.எஸ்.,பாட்டிக்கு, 'வாட்ஸாப்'பில் ஒரு ஆடியோ வந்தது. அந்த ஆடியோவில் பேசியவர், 'நிதீஷ்குமாரும், அவரது கட்சி எம்.எல்.ஏ.,க்களும், பா.ஜ., கூட்டணியில் இருந்து வெளியே வர வேண்டும். இல்லாவிட்டால் அவர்களை வெடிகுண்டு வைத்துக் கொன்று விடுவோம்' என்று கூறி இருந்தார்.இதுகுறித்து பீகார் போலீசார் விசாரித்தனர். 'வாட்ஸாப்' ஆடியோ வந்த மொபைல் போன் நம்பரின் டவரை ஆய்வு செய்தபோது, கர்நாடகாவின் தாவணகெரேயில் இருப்பதாக காட்டியது. இதையடுத்து பீகார் போலீசார், நேற்று முன்தினம், தாவணகெரே வந்தனர். இங்கு உள்ள அரிசி ஆலையில், சாக்கு தைக்கும் வேலை செய்த, பீகாரை சேர்ந்த சோனு பஸ்வான், 30, என்பவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் தான், நிதீஷ்குமாருக்கு, கொலை மிரட்டல் விடுத்தது தெரிந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். பாட்னாவுக்கு அழைத்துச் சென்று விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்