உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 97 ஆண்டுகள் சிறை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 97 ஆண்டுகள் சிறை

திருவனந்தபுரம்:கேரள மாநிலம் மலப்புரத்தில் எட்டு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 97 ஆண்டு சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மலப்புரம் பகுதியைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி ஒருவர் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அவரது உறவினரான 53 வயது நபர் , சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். வாழக்காடு போலீசார் போக்சோவில் அவரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை மஞ்சேரி சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது. இதில் அந்த நபருக்கு 97 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி ஏ. எம். அஷ்ரப் தீர்ப்பளித்தார். அபராதம் ரூ.7.75 லட்சத்தை பாதிக்கப்பட்டவருக்கு வழங்கவும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை