உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெண்ணிடம் செயின் பறித்தவர் 26 ஆண்டுகளுக்கு பின் கைது

பெண்ணிடம் செயின் பறித்தவர் 26 ஆண்டுகளுக்கு பின் கைது

ஜெயநகர்: பெண் ஒருவரின் தங்க செயினை திருடி விட்டு, தலைமறைவாக இருந்தவர், 26 ஆண்டுகளுக்கு பின் போலீசாரிடம் சிக்கினார்.பெங்களூரு ஜெயநகரின் ஐந்தாவது பிளாக்கில் வசிப்பவர் வசந்தா. இவர், 1998 ஜனவரி 20ம் தேதி காலை, சாலையில் நடந்து சென்றார். அப்போது பைக்கில் வந்த மர்ம நபர், வசந்தாவின் கழுத்தில் இருந்த தங்க செயினை பறித்துக்கொண்டு தப்பியோடினார்.இது தொடர்பாக, அவர் அளித்த புகாரின்படி ஜெயநகர் போலீஸ் நிலையத்தில், வழக்கு பதிவானது. போலீசார் தேடியும், குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை. சமீபத்தில் பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் தயானந்தா, பழைய வழக்குகளில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை கண்டுபிடிக்கும்படி உத்தரவிட்டார்.இதன்படி ஜெயநகர் போலீசார், பழைய கோப்புகளை எடுத்த பார்த்த போது, செயின் பறிப்பு வழக்கில் தொடர்புடையவர், தலைமறைவாக இருப்பது தெரிந்தது. அதன் பின் விசாரணையை துவக்கிய போலீசார், குலாப் கான், 48, என்பவர் செயின் பறிப்பில் ஈடுபட்டதை கண்டுபிடித்தனர்.இவரது உறவினர்கள், நண்பர்களை கண்டுபிடித்து விசாரித்த போது, குலாப் கான் கனகபுராவில் வசிப்பது தெரிந்தது. அங்கு சென்று தேடியதில் நகராட்சியில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றுவதை கண்டுபிடித்தனர். அவரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து, பெங்களூரு அழைத்து வந்தனர்.இவர் கொள்ளை வழக்கில் கைதாகி, ஜாமினில் விடுதலை ஆனதும், அதன்பின் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானதும் தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை