உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / "எனது பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல் வெட்கக்கேடானது": மணிப்பூர் முதல்வர் பைரேன் சிங் பேட்டி

"எனது பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல் வெட்கக்கேடானது": மணிப்பூர் முதல்வர் பைரேன் சிங் பேட்டி

இம்பால்: 'எனது சொந்த மாநிலத்திலேயே, எனது பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது வெட்கக்கேடானது' என மணிப்பூர் முதல்வர் பைரேன் சிங் தெரிவித்துள்ளார். வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் முதல்வர் பைரேன் சிங் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, கூகி மற்றும் மெய்டி சமூகத்தினரிடையே கடந்தாண்டு பெரும் கலவரம் ஏற்பட்டு, ஏராளமானோர் பலியாகினர். இந்த பிரச்னை தணிந்திருந்தாலும், அவ்வப்போது சிறு சிறு கலவரங்கள் வெடிக்கின்றன. முதல்வரின் பாதுகாப்பு வாகனம் மீது வன்முறை கும்பல் சமீபத்தில் தாக்குதல் நடத்தியது.

உத்தரவு

இது தொடர்பாக, ஆங்கில சேனலுக்கு பைரேன் சிங் அளித்த பேட்டி: அமைதியை முழுமையாக மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனது சொந்த மாநிலத்திலேயே, எனது பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது வெட்கக்கேடானது. இது தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த தலைமைச் செயலாருக்கு உத்தரவிட்டுள்ளேன். வன்முறையை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

சோழநாடன்
ஜூன் 16, 2024 21:34

கத்தியை எடுத்தவன் கத்தியால் சாவன் என்பதைப்போல கலவரத்தை ஏற்படுத்தி மக்களைப் பிரித்த மணிப்பூர் முதல்வருக்கும் கத்தி எடுத்தவன் கதிதான ஏற்படும். கவலை வேண்டாம். முடிந்தால் மக்களை அமைதிப்படுத்தி பழைய நிலைமையைக் கொண்டுவருவது ஒன்றே சரியான வழி.


கண்ணுசாமி
ஜூன் 16, 2024 21:32

உங்க ஊரில் ஸ்காட்லாந்து யார்டு போலூஸ் இல்லியா? முதலில் அவிங்களை கவனியுங்க.


Jai
ஜூன் 16, 2024 19:56

மணிப்பூர் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரிப்பதற்கு பெரிய சதி நடக்கிறதாகவே தோன்றுகிறது. அங்கு தொடர்ந்து பதட்ட நிலை இருக்கும்படி பெரிய சக்திகள் பார்த்துக் கொண்டுள்ளனர். மணிப்பூர் மக்கள் இதனைப் புரிந்து கொண்டு அந்நிய சக்திகளின் கைக்கூலிகளை புறக்கணித்து அவரவர் வேலைகளை திறம்பட செய்து முன்னேற வேண்டும். மணிப்பூர் பெண்கள் மிக தைரியமானவர்கள் இந்தியாவிற்காக பல பதக்கங்களை மணிப்பூர் பெண்கள் வென்றுள்ளனர். மணிப்பூரில் குடும்ப பெண்களால் நடத்தப்படுகிறது. மணிப்பூர் பெண்கள் ஒன்றிணைந்து தங்கள் வருங்காலத்தை காத்துக் கொள்ள வேண்டும். அந்நிய சக்திகளால் உருவாக்கப்பட்ட நக்சலைட்டுகள் தங்கள் வாழ்க்கையை தொடர்ந்து கெடுத்துக் கொண்டு அரசு அரசுக்கும் மக்களுக்கும் தொடர்ந்து பிரயோஜனம் இல்லாத சிரமம் கொடுத்து வருகிறார்கள். அந்நிய சக்திகளில் வலையில் விழுந்தால் இதே போன்று நிலைமை மணிப்பூருக்கும் வரும்.


sampath, k
ஜூன் 16, 2024 19:15

New Chief Minister is absolutely warranted


P. VENKATESH RAJA
ஜூன் 16, 2024 18:46

மணிப்பூர் மாநிலத்தில் விரைவில் அமைதியை கொண்டு வர வேண்டும்


S Sivakumar
ஜூன் 16, 2024 18:30

கலவரத்தை நடத்த வேண்டும் என்ற குறிக்கோளை கொண்டு இருக்கும் போது தீவிரவாதிகள் என்ன செய்கிறார்கள் என்பது கூட அவர்களுக்கு மூளை வரை எட்டுவதில்லை. இவர்களுக்கு உடந்தையாக இருப்பவர்கள் கண்டறிதல் முக்கியம்.


Ramesh Sargam
ஜூன் 16, 2024 18:27

மணிப்பூரில் நடக்கும் கலவரங்களுக்கு, கலவர காரர்களுக்கு மறைமுக உதவிசெய்வது நமது நாட்டு தேச துரோக காங்கிரஸ், கம்யூனிஸ்ட்ஸ் போன்ற கட்சிகள்தான்.


மேலும் செய்திகள்