உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வன்முறைக்கு காரணமான தீர்ப்பை திரும்ப பெற்றது மணிப்பூர் கோர்ட்

வன்முறைக்கு காரணமான தீர்ப்பை திரும்ப பெற்றது மணிப்பூர் கோர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இம்பால்: மெய்டி சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கலாம் என கடந்த ஆண்டு வழங்கிய தீர்ப்பின் சர்ச்சைக்குரிய பகுதியை நீக்கி, மணிப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், மெய்டி சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது குறித்து மணிப்பூர் அரசு பரிசீலிக்க வேண்டும் என, அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு கூகி சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இரு தரப்பினருக்கும் இடையிலான மோதல், கலவரமாக மாறியது. இதற்கிடையே, உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து பழங்குடியின அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. இதை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, 'பழங்குடியின பட்டியலில், மாற்றங்கள் செய்யவோ, புதிதாக சேர்க்கவோ நீதிமன்றத்தால் முடியாது. அது மத்திய அரசின் பொறுப்பு' எனக் கூறி, அந்தத் தீர்ப்பை நிறுத்தி வைத்தது. அதைத் தொடர்ந்து, மார்ச் மாதம் வழங்கப்பட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்ய கோரி மணிப்பூர் உயர் நீதிமன்றத்தில் பழங்குடியினர் அமைப்பு மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு நேற்று முன்தினம் நீதிபதி கோல்மேய் கைபுல்ஷில்லுவின் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'சட்டத்தின் மீதான தவறான புரிதலின் காரணமாக கடந்த மார்ச்சில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகவும் உள்ளது. அதன்படி, முன்பு வழங்கப்பட்ட தீர்ப்பின் பத்தி எண் 17(3) நீக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்படுகிறது' என தீர்ப்பளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

kulandai kannan
பிப் 23, 2024 14:55

இந்து மெய் தி மக்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கவேண்டும்.


Anand
பிப் 23, 2024 12:40

இதில் குளிர் காய்ந்தது என்னவோ மிஷனரி கூட்டம், அதற்கு தலைமை தாங்கியவன் ரவுல் ..


ராஜா
பிப் 23, 2024 08:20

நீதி மன்றத்தின் தவறுக்கு மத்திய அரசின் மேல் பழி.


Narayanan Muthu
பிப் 23, 2024 08:03

மணிப்பூர் மாநில கலவரம் காரணமான தீர்ப்பு....பல மரணம்-கற்பழிப்பு-சொத்து அழிப்பு-250 கிருத்தவ ஆலயம் எரிப்புக்கு ஒரு வருடம் மோல் காத்திருந்து மணிப்பூர் உயர் நீதி மன்றம் தீர்ப்பை வாபஸ் பெற்றது..... என்ன சொல்ல....காலம் கடந்த நீதி மறுக்கப்பட்ட நீதி என சாமானிய மக்களே அறிவர். இதை வைத்து அடுத்த கலவரம் வராது இருந்தால் சரி.....துக்ளக் அரசு என அரசை தான் சொல்வர். இது தேர்தல் ஜுரமாக கூட இருக்கலாம்.


Mohan
பிப் 23, 2024 12:57

...சிபிகாட் போராட்டம், விவசாயிகள் மேல குண்டாஸ் , ஆசிரியர் போராட்டம் ..கிலாம்பாக்கம் பேருந்து நிலையம் லட்சணம் இத பத்தி பேசுடா ..அங்க ஏன் போற உங்க பிரச்சனைய நீ மொதல்ல பாரு அவுங்க பிரச்னையை அவுங்க பாத்துக்குவாங்க ...


குரு
பிப் 23, 2024 07:38

அடி உதவற மாதிரி....


Kanns
பிப் 23, 2024 07:38

Sack & Punish Judges etc Acting against Native-Pagan-Hindu Tribals and Biasing to Foreign Religion Convertee Tribals who Cant be Tribals After Conversions


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை