உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மணிப்பூர் டூ மும்பைக்கு யாத்திரைக்கு செல்லும் காங்., எம்.பி ராகுல்: பாஜ., "ரியாக்ஷன்"

மணிப்பூர் டூ மும்பைக்கு யாத்திரைக்கு செல்லும் காங்., எம்.பி ராகுல்: பாஜ., "ரியாக்ஷன்"

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மணிப்பூர் முதல் மஹாராஷ்டிரா வரை ராகுல் தலைமையில் மற்றொரு யாத்திரை நடத்த காங்., தலைமை முடிவு செய்துள்ளது. இது குறித்து, ''காங்.., எம்.பி ராகுலை நம் நாட்டில் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை'' என பா.ஜ., மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் கருத்து தெரிவித்துள்ளார். காங்., முன்னாள் தலைவரும், லோக்சபா எம்.பி.,யுமான ராகுல் தலைமையில், 'பாரத் ஒற்றுமை யாத்திரை' கடந்த 2022 செப்., 7ல், தமிழகத்தின் கன்னியாகுமரியில் துவங்கி காஷ்மீர் வரை நடந்தது. இந்நிலையில், லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக, மணிப்பூர் முதல் மஹாராஷ்டிரா வரை ராகுல் தலைமையில் மற்றொரு யாத்திரை நடத்த காங்., தலைமை முடிவு செய்தது. அதற்கு, 'பாரத் நியாய யாத்திரை' என, பெயரிடப்பட்டுள்ளது.இது குறித்து பா.ஜ., மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் கூறியிருப்பதாவது: காங்.., எம்.பி ராகுலை நம் நாட்டில் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. யாத்திரையில் அனைவரையும் மகிழ்விக்கும் வகையில் கருத்துகளை ராகுல் தெரிவிக்க வாய்ப்புள்ளது எனக் கூறினார்.

இண்டி ஜோடோ யாத்திரைக்கு செல்லுங்க

பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஷேஜாத் பூனவல்லா கூறியிருப்பதாவது: சமீபத்தில் சட்டசபை தேர்தலில் மூன்று மாநிலங்களை காங்கிரஸ் இழந்தது. இதனை சரி செய்ய தான் ராகுல் மீண்டும் யாத்திரையை துவங்குகிறார். காங்கிரஸ் கட்சியை மீண்டும் மக்கள் மனதில் கொண்டு செல்ல தான் யாத்திரையை நடத்த திட்டமிட்டுள்ளனர். இண்டியா கூட்டணியில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளை சரி செய்ய 'இண்டி ஜோடோ யாத்திரை' என்பது காலத்தின் தேவையாக உள்ளது. ராகுல் இந்த நியாய யாத்திரையை விட்டுவிட்டு 'இண்டி ஜோடோ யாத்திரைக்கு செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

krishna_dharan
ஜன 10, 2024 00:48

இந்த கோமாளிப் பயல் எங்கே போன என்ன? கேடு கேட்ட தேச விரோத கும்பல் அப்படியே மியான்மார் அல்லது சீனாவுக்கு போனால் நல்லதுதான்


krishna_dharan
ஜன 10, 2024 00:46

indha komaali


NicoleThomson
ஜன 09, 2024 21:24

எனக்கு அப்படியே ஷாக் ஆயிட்டேன் , என்னோட கருத்துக்களை காங்கிரசில் முக்கிய முடிவெடுக்கும் யாரோ படிக்கின்றனர் , நன்றி தினமலர்


Jai
ஜன 09, 2024 19:08

இந்த செய்தியில் ஒரு உண்மை தெரிந்து கொள்ள வேண்டும். ஓட்டு பதிவு இயந்திரத்தை ஏமாற்ற முடியாது. ஏமாற்ற வழி இருந்தால் மணிப்பூரில் இருந்து குஜராத் வரை ஜோட யாத்திரை போக வேண்டியதில்லை. நாளைக்கு காங்கிரஸும் INDI கூட்டணியும் தோற்க்கும்போது வாக்குப்பதிவு இயந்திரம் மேல் பழிபோடுவார்கள்


venkat
ஜன 09, 2024 17:46

கிழக்கே கிளம்பி மேற்கே அஸ்தமனம் ஆகும் காங்கிரெஸ் கட்சி இவருடைய யாத்திரைக்கு பின்.


SUBBU,MADURAI
ஜன 09, 2024 14:52

ஆக்சுவலா அருணாசல பிரதேசத்தில் இருந்து ஆரம்பிக்கப் போவதாக சொன்ன ராகுல்காந்தி நடைப்பயணம் அருணாசல பிரதேசத்தை சீனா தங்களுடைய பிரதேசம் பாதயாத்திரையை அருணாசல பிரதேசத்தில் இருந்து ஆரம்பிப்பதை தவிர்த்து வேறு ரூட்டை தேர்ந்து எடுத்து விட்டார்


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை