உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மன்மோகன்சிங் 11 மாநில அரசை டிஸ்மிஸ் செய்தார்.. மோடி - பூஜ்ஜியம்

மன்மோகன்சிங் 11 மாநில அரசை டிஸ்மிஸ் செய்தார்.. மோடி - பூஜ்ஜியம்

புதுடில்லி: '10 ஆண்டுகள் பிரதமர் பதவி வகித்த மன்மோகன்சிங், தனது ஆட்சிக் காலத்தில், 11 மாநில அரசுகளை டிஸ்மிஸ் செய்துள்ளார். அதேசமயம், மோடியின் ஆட்சி காலத்தில், இதுவரை எந்த மாநில அரசும் டிஸ்மிஸ் செய்யப்படவில்லை' என, இந்திய அரசின் முன்னாள் சி.இ.ஏ., கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன், இந்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக(சி.இ.ஏ.,), கடந்த 2018 முதல் 2021 வரை பதவி வகித்துள்ளார். இவர் அமெரிக்காவின் நார்த்வெஸ்டர்ன் யுனிவர்சிட்டியில் உள்ள கெல்லாக் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனிடம் இந்த கருத்தை கூறியிருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியின் கீழ் இந்தியாவில் ஜனநாயகம் நழுவுகிறது என்ற குற்றச்சாட்டையும் அவர் நிராகரித்துள்ளார்.

ஸ்டார்ட்-அப்கள் 220 சதவீத வளர்ச்சி:

மேலும் அவர் கூறுகையில், 'ஸ்டார்ட்-அப்கள், ஒரு நாட்டின் பொருளாதாரத்தில், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. 2016ஆம் ஆண்டில், இந்தியாவில், 450 ஸ்டார்ட்-அப்கள் இருந்தன. தற்போது ஒரு லட்சம் ஸ்டார்ட்-அப்கள் உள்ளன. இது 220 சதவீத வளர்ச்சி ஆகும். 2004 முதல் 2014 வரை(காங்., ஆட்சி) ஸ்டார்ட்-அப்களின் வளர்ச்சி, வெறும் 3.8 சதவீதம் தான்.2015ம் ஆண்டு, உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டில், இந்தியா 78 வது இடத்தில் இருந்தது. தற்போது 40வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. நியூயார்க்கின் ஒரு ஓரத்தில் இருந்து கொண்டு, ஜனநாயகத்தின் அளவீடு குறித்து, விமர்சிப்பவர்களை புறம்தள்ள வேண்டும்' என்றார்.

ரகுராம் ராஜன் குற்றச்சாட்டு:

அப்போது குழுவில் இருந்த, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் குறுக்கிட்டு, 'இன்று இந்தியாவில் ஜனநாயகம் வலுவாக உள்ளது என்று கூறிவிட்டு தப்பிக்க முடியாது. தற்போதைய அரசு விமர்சனங்களை விரும்புவதில்லை. மேலும், இந்த அரசு, மக்கள் தங்களோடு இணைய வேண்டும்; இல்லை என்றால் சிறைக்கு செல்ல வேண்டும் என்ற கொள்கையுடன் உள்ளது' என்று வாதிட்டார்.

உறுதியான நம்பிக்கை:

இதற்கு பதிலளித்து பேசிய சுப்பிரமணியன், 'பிரதமர் மோடியுடன் நான் நெருக்கமாக பணியாற்றி இருக்கிறேன். அரசின் சாதகமான அம்சங்கள் குறித்து, அவர் ஒருபோதும் என்னிடம் பேசியதில்லை. இந்தியாவில் மேம்படுத்த வேண்டிய விஷயங்கள் குறித்து மட்டுமே அவர் என்னிடம் பேசி இருக்கிறார். ஒரு பக்கமான நிலைப்பாட்டில் இதை நான் கூறவில்லை. மோடி அரசின் பாலிசிகளில் எனக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது.

மத சுதந்திரம்:

மத சுதந்திரம் குறித்து பியூ ஆராய்ச்சி மையம், ஒரு கணக்கெடுப்பை நடத்தியது. அதில் 90 சதவீத சிறுபான்மையினர், இந்தியாவில் பிடித்த மதத்தை கடைப்பிடிப்பது, முற்றிலும் சுதந்திரமானது என்று கூறியதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

வாஜ்பாய், மோடி - பூஜ்ஜியம்:

356வது சட்டப்பிரிவை பயன்படுத்தி, மத்திய அரசால் டிஸ்மிஸ் செய்யப்பட்ட மாநில அரசுகளின் தரவுகளைப் பார்ப்போம். ஜவஹர்லால் நேரு, 7 மாநில அரசுகளை டிஸ்மிஸ் செய்தார். இந்திரா, 49 மாநில அரசுகளை டிஸ்மிஸ் செய்தார். ராஜிவ் 60 மாநில அரசுகளை டிஸ்மிஸ் செய்தார். அதேசமயம், வாஜ்பாய் மற்றும் மோடி ஆட்சிக்காலத்தில், எந்த மாநில அரசும் இதுவரை டிஸ்மிஸ் செய்யப்பட்டதில்லை.' இவ்வாறு அவர் கூறி உள்ளார். அவரது இந்த விவாதம் மற்றும் தரவுகள், பிரதமர் மோடியின் ஆட்சியில், இந்தியா சிறப்பான வளர்ச்சி அடைந்துள்ளதை வெளிச்சம் போட்டு காட்டி உள்ளது.356வது சட்டப்பிரிவை, 50 முறை இந்திரா பயன்படுத்தியதாகவும், காங்கிரஸ் அரசு, 90 முறை மாநில அரசுகளை டிஸ்மிஸ் செய்ததாகவும், கடந்த ஆண்டு பிப்ரவரியில், பிரதமர் மோடி குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 63 )

M Ramachandran
மே 03, 2024 19:54

சற்றும் எதிர் பாராதா மூக்கறுப்பு தன்னை அதி மேதாவியாகா காட்டிக்கொண்டு திரிந்த இந்தா ரகு ஹ்ராமி ன் செய்கை ஏதோ தனக்கு பதவியை மேற் கொண்டு நிட்டிக்க வில்லை என்றா தாபாத்தால் கேடு செய்ய நினைத்து காலி டப்பா போன்று ஆகி மற்றவர்கள் சிரிக்கும் நிலையய்க்கு தள்ளப்பட்ட நிலையய் நினைக்க வரூத்த மாக தான் இருக்கு


M Ramachandran
மே 03, 2024 19:47

தவறான இடம் சேர்ந்து வக்காலத்து வாங்க அயல்னாட்டில் சென்று மூக்கறு படவேண்டுமா?


கனோஜ் ஆங்ரே
மே 03, 2024 15:05

////மோடியின் ஆட்சி காலத்தில், இதுவரை எந்த மாநில அரசும் டிஸ்மிஸ் செய்யப்படவில்லை-/// யோவ் உச்ச நீதிமன்றத்தின் “பொம்மை” கேஸ் இல்லாதப்ப, மாநில அரசுகளை மத்திய அரசு கலைச்சது அந்த பொம்மை கேஸ் நடைமுறைக்கு வந்தபிறகு எந்த ஆட்சியும் கலைக்க முடியாது கலைச்சா, மத்திய அரசை உச்ச நீதிமன்றம் கலைச்சிரும் அந்த பயத்துலதான், மோடி ஆட்சிய கலைக்காம காச கொடுத்து எதிர்க்கட்சியில் உள்ள ஆளுங்க புடிச்சு போட்டு தன்னோட எடுப்பு ஆளுநர்களை வைத்து தன் கட்சி ஆட்சிய கொண்டு வந்தாரு படிச்சவன் ஏட்ட கெடுப்பான்ங்கற கதையா இவரு, அதிகம் படிச்சவங்களுக்கு மூளை மண்டை ஓட்டுக்கு வெளியே வந்துடும் போலிருக்கு புத்தி பெசகிப் போச்சு போலிருக்கு இவருக்கு.


MADHAVAN
மே 03, 2024 11:01

மணிப்பூர்ல கூட ஆட்சியை கலைக்கவில்லை, உண்மைதான்


duruvasar
மே 03, 2024 10:35

ரகுராம் ராஜன் ப சிதம்பத்தின் அல்லக்கை என்ற புரிதல் உள்ளவர்களுக்கு இவர் தனது கருத்துக்களை மாற்றி பேசியிருப்பார் என எண்ண மாட்டார்கள்


veeramani
மே 03, 2024 05:22

திரு ராகுராம்ராஜன் பல களங்களில் கட்டுக்கதைகளையும் காங்கிரஸ் ஆதரவு செயல்களையும் நடத்தியவர்


saravan
மே 02, 2024 18:33

இந்தியா ஊட்டணி வெற்றிபெற்றால் நிதித்துறை மந்திரி ஆகலாமுன்னு இந்த ரகுராம் ராஜன் பிளான் போடுகிறார் மற்றபடி அன்னான் அமெரிக்க விழா செட்டில் ஆகி இருக்காருன்னு நினைக்கிறேன்உள்ளூர்ல ஆணி புடுங்கள


r ganesan
மே 02, 2024 10:29

ரகுராம் ராஜன் நல்ல கட்சி சார்பற்ற பொருளாதார நிபுணராக இருந்து இதை சொல்லியிருந்தால் இந்த karuthukkalay நாம் ஒத்து கொள்ளலாம் அல்லது சிந்திக்கவாவது செய்யலாம் இவர் நேரு குடும்பத்தின் அடிமை எனவே வேண்டுமென்றே முரணான கருத்துக்களை பரப்பி வருகிறார்


kumar
மே 02, 2024 02:21

ரகுராம் ராஜன் நன்கு படித்தவர் ரிசர்வ் வங்கியில் உயர்ந்த பதவி வகித்தவர் ஆனால் பழனிவேல் தியாகராஜனை போல , மோடி எதிர்ப்பு , பி ஜெ பி எதிர்ப்பு என்ற வட்டத்துக்குள் சிக்கி கொண்டு விட்டதனால் பின்னவரை போல ஒரு ரூபா உ பி ஆகி விட்டார் தரவுகளும் , புள்ளி விவரங்களும் அவருக்கு தேவையில்லை காங்கிரசும் திமுகவும் தரும் பிரச்சாரங்கள் மட்டும் போதும் கொடுமை என்ன வென்றால் , வெளி நாடுகளில் பாரதத்தை தவறாக சித்தரிப்பதே இவர்கள் நோக்கம் இதற்காகவே காத்திருக்கும் பி பி சி போன்ற ஊடகங்களுக்கு தீனி போடுவதே இவர்கள் வேலை


M Ramachandran
மே 01, 2024 19:47

யார் இந்த ரகுராம் ராஜன் அமெரிக்காவின் கையாளா அல்லது ராகுலுளின் அரசியல் ஆலோசகரா? ஏஆர் மோடியின் மேற்காலேயிவள்வு வெறுப்பை உமிழ்கிறார்


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ