உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேர்தலுக்கு பின் மேலும் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்: பிரதமர் மோடி

தேர்தலுக்கு பின் மேலும் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்: பிரதமர் மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அமராவதி: “மாநிலங்களின் விருப்பங்கள் மற்றும் நாட்டின் முன்னேற்றத்தை முன்னெடுத்து செல்லும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, லோக்சபா தேர்தலுக்கு பின், தன் மூன்றாவது ஆட்சி காலத்தில், இன்னும் பல பெரிய முடிவுகளை எடுக்கும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பிரமாண்ட கூட்டம்

ஆந்திராவின் பல்நாடு மாவட்டத்தில் உள்ள பொப்புடி கிராமத்தில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பிரமாண்ட பொதுக் கூட்டம் நேற்று நடந்தது. இதில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கூட்டணி தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது மோடி பேசியதாவது: கடந்த 10 ஆண்டுகளில், 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். நாட்டில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் விருப்பங்கள் மற்றும் நாட்டின் முன்னேற்றத்தை கருத்தில் வைத்து, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முன்னோக்கி சென்று கொண்டுள்ளது. உலகம் முழுதும், இந்த கூட்டணி அரசின் வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. தே.ஜ., கூட்டணி லோக்சபா தேர்தலுக்கு பின்னும், தன் மூன்றாவது ஆட்சிக் காலத்தில் இன்னும் பல பெரிய முடிவுகளை எடுக்கும். இந்த கூட்டணியின் லட்சியமே, வளர்ந்த ஆந்திரா மற்றும் வளர்ந்த பாரதம் என்பதே. அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து செல்வதே தே.ஜ., கூட்டணியின் சிறப்பு. ஆனால், காங்கிரஸ் கட்சியோ, கூட்டணி கட்சிகளை பயன்படுத்துவதையும், பின்னர் அவற்றை துாக்கி எறிவதையும் வாடிக்கையாக வைத்துள்ளது. மேற்கு வங்கம், பஞ்சாப், கேரளா ஆகிய மாநிலங்களில் இண்டியா கூட்டணி தலைவர்களின் நிலையை நீங்களே பார்க்கிறீர்கள். தேர்தலுக்கு பின் அவர்கள் எப்படி இருப்பர் என நீங்களே யூகிக்கலாம். ஆந்திராவில், ஒய்.எஸ்.ஆர்.காங்., கட்சி அமைச்சர்களிடையே ஊழல் செய்வதில் போட்டி நிலவுகிறது.

விரைவான வளர்ச்சி

இந்த கட்சியும், காங்கிரசும் ஒன்று தான்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான், இந்த கட்சி களை நடத்துகின்றனர். ஆந்திராவிலும், மத்தியிலும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தால், மாநிலம் விரைவான வளர்ச்சியை பெறும். இவ்வாறு அவர் பேசினார். தே.ஜ., கூட்டணியில் மீண்டும் இணைந்துள்ள தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, நேற்றைய கூட்டத்தில் பிரதமருடன் பங்கேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Kanns
மார் 18, 2024 18:59

Dictatorship & Misuse of Powers by Rulers Stooge Officials esp Police & judges will Increase& Courts will Not be Bothered


kulandai kannan
மார் 18, 2024 17:48

முதலில் இந்த எதேச்சதிகார காலேஜியம்


Apposthalan samlin
மார் 18, 2024 17:09

நீங்கள் திரும்பவும் வந்தால் இந்தியா மறைந்து அதானியவோ இருக்கும்


Indian
மார் 18, 2024 10:38

ஆம் தேர்தலுக்கு பின் இந்தியாவிலேயே வசிக்கலாமா அல்லது லண்டன் சென்று அங்கேயே தங்கி விடலாமா என்று முக்கியமான முடிவு எடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது


சக்ரவர்த்தி
மார் 18, 2024 09:48

ராமாராவின் கூத்தாடித்தனத்தைப் புகழ்ந்து ஓட்டு கேக்கற அளவுக்கு பா.ஜ வளர்ந்திருக்கு கோவாலு.


சூரியா
மார் 18, 2024 06:06

இந்த நாயுடுவிற்குப் பிரதமர் அருகே நாற்காலி போட்டது யார்?


V. SRINIVASAN
மார் 18, 2024 17:02

ஊழல் வழக்கில் சந்திரபாபு நாயுடு கைது வேற செய்தார்கள்


Ramesh Sargam
மார் 18, 2024 05:22

ஏதோ மக்களுக்கு நல்லது நடந்தால் ரொம்ப சந்தோஷம்.


venugopal s
மார் 18, 2024 03:20

அதாவது தேர்தலில் பாஜக வெற்றி பெற்று, ஆட்சி அமைத்து, இவர் பிரதமர் ஆனால், அப்படித்தானே?


sankar
மார் 18, 2024 08:05

அதில் எவ்வித சந்தேகமும் இல்லை


மேலும் செய்திகள்