உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மதுரா கிருஷ்ண ஜென்ம பூமி வழக்கு மசூதியை அகற்ற கோரிய மனு தள்ளுபடி

மதுரா கிருஷ்ண ஜென்ம பூமி வழக்கு மசூதியை அகற்ற கோரிய மனு தள்ளுபடி

புதுடில்லிகிருஷ்ண ஜென்ம பூமி வழக்கில், ஷாஹி ஈத்கா மசூதியை அகற்றக் கோரிய மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள மதுராவில், கடவுள் கிருஷ்ணர் பிறந்ததாகக் கூறப்படும் நிலம் தொடர்பான பிரச்னை இருந்து வருகிறது.

சர்ச்சை

இங்குள்ள கிருஷ்ணர் கோவிலை ஒட்டி, ஷாஹி மஸ்ஜித் இத்கா என்ற மசூதி அமைந்துள்ளது. முகலாய ஆட்சியின் போது இங்கிருந்த கோவில் இடிக்கப்பட்டு, அதன் மீது, இந்த மசூதி கட்டப்பட்டு உள்ளதாக நீண்டகாலமாக சர்ச்சை உள்ளது.கடந்த 1968ல், ஸ்ரீ கிருஷ்ண ஜன்மஸ்தான் சேவா சன்ஸ்தான் மற்றும் ஷாஹி மஸ்ஜித் இத்கா அறக்கட்டளை இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி சர்ச்சைக்குரிய நிலத்தில், 10.9 ஏக்கர் நிலம் கோவிலுக்கும், மீதமுள்ள, 2.5 ஏக்கர் நிலம் மசூதிக்கும் பிரிக்கப்பட்டன.ஆனால், மொத்த பகுதியும் கோவிலுக்கு சொந்தமானது என, ஹிந்துக்கள் தரப்பில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. மதுரா நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட 18 வழக்குகள், அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டன.இந்நிலையில், மசூதி இடத்தில் தொல்லியல் துறை சார்பில் களஆய்வு செய்யவும், மசூதியை அகற்ற உத்தரவிடக்கோரியும், வழக்கறிஞர் மஹெக் மகேஷ்வரி என்பவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.இந்த மனுவை, உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார்.இந்த மனு, நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபங்கர் தத்தா அடங்கிய அமர்வு விசாரித்த நிலையில், இவ்வழக்கில் நேற்று உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவில், 'கிருஷ்ண ஜென்ம பூமிக்கு உரிமை கோரி தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு உரிமையியல் வழக்குகள் தற்போது நிலுவையில் உள்ளன. எனவே, இந்த விவகாரத்தில் மேலும் பல வழக்குகள் வேண்டாம்.

பொதுநல வழக்கு

'மனுதாரர் பொது நல வழக்காக தாக்கல் செய்துள்ளார். எனவே தான், இந்த மனு உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. 'பொதுநல வழக்காக அல்லாமல் வேறு முறையில் தாக்கல் செய்தால் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படும். இதன்படி, இந்த மனுவை நாங்கள் நிராகிக்கிறோம்' எனக்கூறி, வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

அப்புசாமி
ஜன 06, 2024 19:22

இப்பவே முடிச்சுட்டா என்ப ஆறது? அத்வானி தலைமையில் ரத யாத்திரை நடத்தி, இடிச்சு...


Sampath Kumar
ஜன 06, 2024 12:13

இன்னும் எதனை காலத்திற்கு இந்த அக்கா போரை நடந்து வீங்க என்று பார்க்கலாம்


Anand
ஜன 06, 2024 16:57

இப்படியே புலம்பிக்கிட்டே இருக்கவேண்டியது தான்.....


கனோஜ் ஆங்ரே
ஜன 06, 2024 11:50

////கடவுள் கிருஷ்ணர் பிறந்ததாகக் கூறப்படும் நிலம்...///// அய்யா... “கூறப்படும்”...னு சொல்லி இருக்கீங்க... துவாபர யுகம் முடிஞ்சு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகிறது.. எங்கே நீங்க கிருஷ்ணன் பிறந்த இடம்னு சொல்லிடுவீங்க..ன்னு பார்த்தேன்... வரலாற்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்து சொன்னது இதுதான்... “மகாபாரத காலத்திலேயே ஸ்ரீகிருஷ்ணர் வாழ்ந்த வகையிலும் நகர் இன்று கடலுக்கு அடியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பொதுவாகவே 5000 வருடங்களுக்கு முன்பு கிருஷ்ணர் மாவுடன் நகரம் கடலுக்கு அடியில் உள்ளது”... நீங்க என்னடான்னா... இந்தியாவின் நடுவில் உள்ள “மதுரா” என்ற ஊரில் பிறந்தார்..னு சொல்ல வர்றீங்க.... இது எப்படி இருக்குன்னா.... “மோடி”...ன்னு பெயர் வச்சவங்க எல்லாம் “நரேந்திர மோடிஜி” ஆகிட முடியும்..னா, தற்போது இருக்கும் மதுராவில் கிருஷ்ணன் பிறந்தார்.. ... இது இங்க சுத்துற , எதுவும் தெரியாத, ஆனால் எல்லாம் தெரிஞ்சவர்தான்


ஆரூர் ரங்
ஜன 06, 2024 14:39

துவாரகா வுக்கும் மதுராவுக்கும் வேறுபாடு ????தெரியாதா?


கனோஜ் ஆங்ரே
ஜன 06, 2024 16:05

ஆரூராரே...உலகத்திலேயே நீ மட்டும்தான் அறிவாளி, படிப்பாளி...ன்னு நினைச்சிடாதீங்க.. . நான் சொன்னது இந்து புராணங்களில் சொல்லப்பட்ட யுகத்தின் பட்டியல்... அதாவது ”கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம் மற்றும் கலி யுகம்.” இதில் கிருஷ்ணர் பிறந்ததாக சொல்லப்படுவது “துவாபர யுகம்” அப்படீன்னு முதல் வரியில் குறிப்பிட்டிருக்கிறேன்... நான் எந்த இடத்திலும் துவாரகாவும் மதுராவும் ஒண்ணு..ன்னு சொல்லவே இல்லையே...? “படிப்பது ராமாயணம், இடிப்பது ராமர் கோவில்”....ங்ற கதையா... பதில் போட்டிருக்கீங்க... திரும்பவும் சொல்கிறேன்.. இதிகாசப் புராணங்களில் சொல்லப்பட்ட யுகங்கள் பெயர்களில் ஒன்றான “துவாபரயுகம்”... கிருஷ்ணன் பிறந்த இடம் இன்றிருக்கும் இந்தியாவின் சமவெளி நிலப்பரப்பில் இல்லை... அது கடலில் உள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கின்றனர். நீங்களும், உங்க ஆளுங்களும் இப்போது இருக்கும் மதுராவில்தான் கிருஷ்ணன் பிறந்தான்..னு சொல்றீங்க... வரலாற்று சான்றே இல்லை...


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 06, 2024 21:09

இங்கே ஹிந்துவா வேஷம் கட்டும் மூர்க்கன்ஸ் க்கு ஒரு வேண்டுகோள் ...... வெறுப்பின் அடிப்படையில் உண்டான ஆர்வக் குறைவு காரணமா ரொம்பவே அசடு வழியிறீங்க ..... சாயம் வெளுத்துப் போவுது ..... இனிமே இதுல கொஞ்சம் கவனமா இருக்கோணும் ..... ஓகேவா ????


N SASIKUMAR YADHAV
ஜன 06, 2024 09:44

அலகாபாத் என்ற பெயரை பிரயாக்ராஜ் என பெயர்மாற்றம் செய்து பல ஆண்டுகளாகிவிட்டது


duruvasar
ஜன 06, 2024 09:30

முறையீடு செய்த முறை சட்ட வரையறையினுள் இல்லை என தீர்ப்பு சொல்கிறது. எனவே இது வழக்கிற்கு தியான தீர்ப்பாக எண்ணமுடியாது..


Indhuindian
ஜன 06, 2024 07:18

Please avoid misleading reporting giving ambiguous headline


chennai sivakumar
ஜன 06, 2024 05:43

சரியாக சொன்னீர்கள் திரு. ராமன் அவர்களே. தலைப்பு misleading the readers.


raman
ஜன 06, 2024 03:33

மசூதியை அகற்றக்கோரி புது வழக்கு வேண்டாம் என்றுதான் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்று உள்ளே செய்தியை படித்தால் தெரிகிறது. ஆனால் தலைப்பு ஏதோ மொத்த வழக்கும் தள்ளுபடி போல் உள்ளது. பழைய வழக்குகள். இன்னும் நடைபெறுகின்றன. தலைப்பில் புது வழக்கு தள்ளுபடி என்று இருந்தால், தினமலர் உண்மையின் உரை கல்.


மேலும் செய்திகள்