வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மிகவும் பரிதாபமான நிகழ்வு.... உயிர் நீத்த அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்
அகமதாபாத்: விமானம் விழுந்து நொறுங்குவதற்கு முன், விமானி சுமித் சபர்வால் மற்றும் துணை பைலட் குந்தர் ஆகியோர், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கு, 'மே டே' எச்சரிக்கை செய்தியை அனுப்பினர். அவர்கள் சுதாரிப்பதற்குள் விபத்து நிகழ்ந்துவிட்டது. முக்கியமாக விமானம் மற்றும் கப்பலில் இந்தச் செய்தி பயன்படுத்தப்படுகிறது. இது மிகவும் அவசரமான சூழ்நிலை அல்லது நிலைமை கைமீறிச் செல்லும்போது பயன்படுத்தப்படும் வார்த்தை. இது, 'மெய்டர்' என்ற பிரெஞ்சு சொற்றொடரிலிருந்து வந்தது, அதாவது, 'எனக்கு உதவுங்கள்' என்பதே இதன் அர்த்தம். 1920ல் பயன்பாட்டுக்கு வந்த இந்த, 'மே டே' அழைப்பு, இப்போது உலகளவில் ஒரு நிலையான நெறிமுறையாக உள்ளது. மிகவும் அவசரமான சூழ்நிலையில் விமானி எளிதாகச் செய்தியை அனுப்பவும், அனைவருக்கும் நிலைமையின் தீவிரம் புரியும் வகையிலும் இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. ரேடியோ தொலைத்தொடர்பில் கேட்பவருக்கு சிக்னல் பலவீனமாக இருந்தாலும் புரியும் வகையில் இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.விமானத்தை இயக்கிய கேப்டன் சுமீத் சபர்வாலுக்கு 8,200 மணி நேர விமான அனுபவமும், துணை விமானி கிளைவ் குந்தருக்கு 1,100 மணி நேர விமான அனுபவமும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகவும் பரிதாபமான நிகழ்வு.... உயிர் நீத்த அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்