உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கேரளாவில் மெகா திருமண திட்டம்... ஷாக் கொடுத்த பெண்கள்!

கேரளாவில் மெகா திருமண திட்டம்... ஷாக் கொடுத்த பெண்கள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கண்ணூர்: கேரளாவில் அரசு சார்பில் நடத்தப்படும் மெகா திருமணத்திற்கு 3000க்கும் அதிகமான ஆண்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 200 பெண்கள் மட்டுமே விண்ணப்பித்திருந்தது அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பையாவூர் கிராம பஞ்சாயத்து சார்பில் பின்தங்கிய பொருளாதாரம் உள்ளிட்டவையால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. 'பையாவூர் மாங்கல்யம்' என்ற பெயரில் மெகா திருமண வைபவத்தை நடத்த திட்டமிடப்பட்டு, திருமணமாகாத இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதுவரையில் 3,000க்கும் மேற்பட்ட ஆண்கள் திருமணத்திற்காக விண்ணப்பித்துள்ளனர். ஆனால், 200 பெண்களே மட்டுமே விண்ணப்பித்திருந்தனர். இதனால், அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், இந்த விகிதத்தை ஈடு செய்ய, ஆண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறுவது நிறுத்தி வைக்கப்பட்டது. அதேவேளையில், பெண்களிடம் இருந்து மட்டும் விண்ணப்பங்களை பெற்று வருகின்றனர். அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களும் விண்ணப்பித்ததால் இந்த எண்ணிக்கை அதிகரித்தாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

தியாகு
செப் 12, 2025 19:59

ஒருவேளை டுமிழ்நாட்டிலிருந்து கட்டுமர திருட்டு திமுககாரர்கள் ரகசியமாக விண்ணப்பித்திருப்பார்கள். அதை தெரிந்துகொண்ட கேரள பெண்கள் உஷாராகி தலைதெறிக்க ஓடி இருப்பார்கள்.


Pats, Kongunadu, Bharat, Hindustan
செப் 12, 2025 19:21

பெண்களும் அதிகமாக படித்து, வேலைக்கு செல்ல முற்படுவதால் பெண்களின் திருமணம் செய்யும் வயது கூடிக்கொண்டே போவதும் ஒரு பெரும் பிரச்சனையாக உருவாகியுள்ளது.


Anantharaman Srinivasan
செப் 12, 2025 18:54

பஞ்சபாண்டவர் களுக்கு ஒரு திரௌபதி.. இங்கு அது கூட workout ஆகல.. 15 into 1..


வாய்மையே வெல்லும்
செப் 12, 2025 23:18

கல்யாணம் பண்ணாமல் கட்டைப்ரஹ்மச்சாரியாக போவது உசிதம். உங்க புள்ளி வெச்சு கோலம்போட்ட விவரங்கள் ரசிப்பதற்கு பதிலாக சகிப்பு தன்மையை சோதிக்கிறது


தத்வமசி
செப் 12, 2025 18:27

தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் கூறியதை விளம்பரப் படுத்தி செய்கிறது கேரளா கம்யூனிஸ்டு அரசு. சூப்பர்.


Alphonse Mariaa
செப் 12, 2025 18:22

8/10 பெண்கள் காதல் கலப்பு திருமணம். பிறகு சாமானிய ஆண்களுக்கு எங்கு பெண் கிடைக்கும்


GMM
செப் 12, 2025 17:38

சுதந்திரம் முன் வரை தமிழகம் போல் கேரளத்தில் முஸ்லிம்கள் ஆக்கிரமிப்பு, சர்வாதிகாரம் இல்லை. சுதந்திரம் பின் கேரளாவில் மத மாற்றம் அதிகம்.? இந்து பெண்கள் வாழ்வாதாரம் குறைவு. போலி மத சார்பின்மை. போலி சிறுபான்மை அந்தஸ்து மற்றும் பல. திருமண பெண் குறைவுக்கு மத மாற்றம்.? மத மாற்றம், திருமணம், விவாக ரத்து போன்றவைக்கு குடும்பத்தார் ஒப்புதல் கட்டாயம். மத மாற்ற தடை சட்டம் கொண்டு வருமா பொது உடமை கம்யூனிஸ்ட்.


Ram pollachi
செப் 12, 2025 16:06

ஹரியானா, தமிழ்நாடு என்று கொஞ்ச மக்கள் கலந்து விட்டார்கள்...மிச்ச மீதி இருக்கிற பெண்கள் எல்லாம் அரசு ஜோலி இருந்தால் கல்யாணத்தை பற்றி பேசு என்பார்கள். நேற்று திருமணம் இன்று திருமண ரத்து நாளை போவோமா ஊர் சுற்ற இது தான் எல்லா பக்கமும் நடக்குது.... சமூக வலைதளங்களில் சிக்கி மனித இனம் சின்னா பின்னம் ஆகிவிட்டது... குருவாயூர் அப்பா நீதான் காப்பாற்றனும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 12, 2025 15:57

கேலிக்கூத்து .......


R. SUKUMAR CHEZHIAN
செப் 12, 2025 15:52

கேரளத்தில் திட்டமிட ரீதியில் லவ் ஜிகாத் நடக்கிறது இதில் மிக அதிகமாக ஹிந்து பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜிகாதி கும்பல்களிடம் ஜாக்கிரதையாக இருக்க நாம் குழந்தைகளுக்கு சொல்லி தரவேண்டும் ஏனெனில் இது தேச பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும்.


SUBRAMANIAN P
செப் 12, 2025 15:37

தமிழ்நாட்டிலிருந்து பெண்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று ஒரு அறிவிப்பு செய்து பார்க்கச்சொல்லுங்க.. அப்புறம் பாருங்க.. குவியும் பெண்கள் விண்ணப்பங்கள்..


Ganesh
செப் 12, 2025 16:32

நீங்கள் எந்த காலத்தில் இருக்குறீர்கள்? திருமண நிலையம் போய் பாருங்கள்... பொண்ணு கிடைக்கிறது எவ்வளவு கஷ்டம் ண்ணு பிறகு தெரியும்... அதுவும் சொந்த பிசினஸ் பண்ற பசங்களுக்கு சென்னை ல கல்யாணம் ஆகிறது குதிரை கொம்பு


Anantharaman Srinivasan
செப் 12, 2025 18:51

Wrong information.. பொண்ணு கிடைக்கிறது சுலபமல்ல.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை