உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அ.தி.மு.க.,வுடன் கூட்டணி: அமைச்சர் அமித் ஷா கூறியது இதுதான்!

அ.தி.மு.க.,வுடன் கூட்டணி: அமைச்சர் அமித் ஷா கூறியது இதுதான்!

புதுடில்லி; தமிழகத்தில் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக விவாதங்கள் நடந்து வருகின்றன என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.பிரபல ஆங்கில தொலைக்காட்சிக்கு அவர் சிறப்பு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது;தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் தி.மு.க., அரசு ஊழல் மட்டுமே செய்து கொண்டிருக்கிறது. அதன் காரணமாக அந்த மாநில இளைஞர்கள் வெளியேறி கொண்டிருக்கின்றனர். தொழில் நிறுவனங்களும் அங்கிருந்து வெளியேறுகின்றன. தமிழகம் ஒரு காலத்தில் தென்னிந்தியாவில் முற்போக்கான மாநிலமாக கருதப்பட்டது. ஆனால் தி.மு.க., அரசின் தவறான கொள்கைகளால் தடுமாறி, குழப்பத்திற்கு ஆளாகி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். வரும் தேர்தலில் அங்கு தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைக்கப்படும்.தமிழ் வழியில் பொறியியல், மருத்துவப் படிப்புகளை அறிமுகம் செய்யாமல் தி.மு.க., தமிழர்களுக்கு எதிரானதாக செயல்படுகிறது. இந்த படிப்புகளை தமிழில் கற்பிக்க வேண்டும் என்று தி.மு.க.,விடம் கூறினேன். ஆனால் அவர்கள் அதை செயல்படுத்தவில்லை. தேசிய கல்விக் கொள்கையின் படி, தொடக்கக் கல்வி என்பது தாய்மொழியில் கற்பிக்கப்பட வேண்டும். மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டப்படிப்பு சேர்க்கையின் போது நடத்தப்படும் பொது நுழைவுத்தேர்வு 13 மொழிகளில் நடத்தப்படுகிறது. ஆனால் தி.மு.க.,வின் எதிர்ப்பு நிலை காரணமாக தமிழில் இந்த தேர்வு நடத்தப்படுவது இல்லை.மகன் உதயநிதியை தமது வாரிசாக ஸ்டாலின் முன்னிறுத்துவதன் மூலம், வாரிசு அரசியலை ஊக்குவிக்கிறார். அவர்கள் தேர்தலுக்காக மட்டுமே தற்போது தொகுதி மறு வரையறை பிரச்னையை கிளப்புகின்றனர். மத்திய அரசு தொகுதி மறுவரையறை குறித்து ஏதாவது சொன்னதா? இப்போது அதை ஏன் எழுப்பினார்கள்? 5 ஆண்டுகளாக அவர்கள் (தி.மு.க.)ஊழலில் ஈடுபட்டனர். இப்போது திடீரென முழித்துக் கொண்டு இருக்கின்றனர். வரையறை நிர்ணயம் செய்யப்படும் போது யாருக்கும் எந்த அநீதியும் ஏற்படாது. அநீதி நடக்க 0.01 சதவீதம் கூட வாய்ப்பு இல்லை. அ.தி.மு.க,வுடன் பா.ஜ., கூட்டணி வைப்பது குறித்து விவாதங்கள் நடந்து வருகின்றன. சரியான நேரம் வரும்போது அதுபற்றி அறிவிப்போம். ஜம்மு காஷ்மீரில் தேர்தல்கள் நடந்தது. தேர்தலில் ஒருமுறை கூட மறு வாக்குப்பதிவு நடக்கவில்லை. கண்ணீர் புகை குண்டு வீசப்படவில்லை. முதல்முறையாக 60 சதவீதம் வாக்குகள் பதிவாகின.மிக பெரிய வெற்றி கிடைத்துள்ளது. இது பா.ஜ., வெற்றியல்ல. வெற்றி பெற்றவர்கள் அரசாங்கத்தை நடத்திக் கொண்டு இருக்கின்றனர். மாநில அந்தஸ்து என்று வரும்போது பல அளவுகோல்கள் உள்ளன. ஜம்மு காஷ்மீருக்கு உரிய மாநில அந்தஸ்தை உறுதி செய்வோம் என்று பார்லி.யில் பேசி இருக்கிறேன். பிரதமரும் அவ்வாறே பேசியுள்ளார்.இவ்வாறு உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

Barakat Ali
மார் 30, 2025 21:09

விஜய், கமல், சீமான் யாருடனும் கூட்டணி வைத்து திமுகவுக்கு துரோகம் செய்யமாட்டார்கள் .....


Barakat Ali
மார் 30, 2025 21:09

அதிமுக-திமுக கூட்டணி வைத்தால் அது தவறு ..... அதற்காக திமுகவிடம் அனுமதி பெறவேண்டும் .... ஆனால் திமுக எந்தக்கட்சியுடனும் கூட்டணி வைக்கலாம் .....


J.Isaac
மார் 30, 2025 11:28

குள்ள நரி, சிறு நரி


arumugam mathavan
மார் 29, 2025 14:57

தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில், வீட்டுவரி, தண்ணீர்வரி, சொத்துவரி,பத்திரபதிவு முத்திரை, மின்சாரம் கட்டணம், பால்விலை, தொலை துர பேருந்து கட்டணம், எல்லாமே கூடிவிட்டது...மிச்சம் சொந்தம் டாஸ்மாகிற்கு போகிறது....இதானால் கொள்ளைகள், கொலைகள் அதிகரிக்க, வாழிதெரியாது விழிபிதுங்கி நிற்கின்றனர்


Rajarajan
மார் 29, 2025 14:47

அரசியலில் வளர்ந்த ஒரு மீனை, மற்றொரு வளர்ந்த சுறா விழுங்குவது இயல்பு. தமிழகத்தில் காங்கிரெஸ்ஸை விழுங்கிய சுறா தி.மு.க. இப்பொது இந்த சுறாவை விழுங்க பா.ஜ.க. தயார். எப்படியோ மாற்றம் வந்தால் சரி. மாற்றம் ஒன்றே மாறாதது.


கொங்கு தமிழன் பிரசாந்த்
மார் 29, 2025 14:46

மிஸ்டர் அமித் ஷா, போய் தமிழக GDP, Infant Mortality rate டேட்டா எடுத்து பாரு ஒய், தமிழகம் இந்தியாவில் முன்னோடி மாநிலம் என்று.


ஆரூர் ரங்
மார் 29, 2025 15:37

அப்படியே இளம் விதவைகள் எண்ணிக்கையும்...


Pats, Kongunadu, Bharat, Hindustan
மார் 29, 2025 13:09

இங்கு சிலர் மத்திய அரசு திருடர் கழக ஆட்சியை கலைக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். பொன்முடி, பாலாஜி ஆகிய இரு அல்லக்கை மந்திரிகளை கைது செய்து சிறையில் அடைத்தார்கள். உடனே நீதிமன்றங்கள் அவர்களை மொக்கையான காரணங்களை சொல்லி விடுவித்தன. பெரும்பான்மை ஆட்சியை கலைக்க முயற்சித்தால் நீதிமன்றம் தலையிட்டு தடுக்கும். வேறு வழியில்லை. அனுபவித்துதான் ஆகவேண்டும். பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருக்கும் ஊழல்வாதிகளை வெளியேற்ற சட்டங்களை மாற்றி அமைக்க வேண்டும். இப்போது ஆட்சியை களைத்தால் அனுதாப அலையால் மீண்டும் இதே கும்பல் ஆட்சிக்கு வரும். இன்னும் 12 மாதங்கள் ஆடுவதை வேடிக்கை பார்ப்பதுதான் ஒரே வழி. மக்கள் 2026-ல் சரியான முடிவெடுப்பார்கள் என்று நம்புவோம். அல்லது தலையில் துண்டை போட்டுக்கொண்டு இன்னும் ஒரு ஐந்து ஆண்டுகள் ஒப்பாரி வைபோம்.


baala
மார் 29, 2025 12:21

unmaiayai பேசினால் அரசியலில் இருக்க முடியாது.


venugopal s
மார் 29, 2025 10:54

அமித்ஷா பொய்களைக் கூட உண்மை போலவே மற்றவர்கள் நன்றாக நம்பும்படி சொல்வதில் வல்லவர்!


Sampath Kumar
மார் 29, 2025 10:50

தமிழ் வழியில் கல்வி என்ட்ரி கருணைத்தி காலத்திலே வந்தாச்சு யாரோ தவர்ண தகவல் சொல்லி உள்ளார்கள் போல


செல்வேந்திரன்,அரியலூர்
மார் 29, 2025 11:05

தமிழ் வழி கல்வி பற்றி உனக்கு பேச அருகதை உண்டா நீ கருத்து போடுகிறேன் பேர்வழி என்று தமிழை கொலை செய்வதை முதலில் நிறுத்து சம்பத்து...


Anantharaman Srinivasan
மார் 29, 2025 14:16

சம்பத் குமார்.. கருணைத்தி, தவர்ண போன்ற வார்த்தைகள் தமிழில் இருக்கா?


V Ramanathan
மார் 29, 2025 14:36

இந்த ஆள் தமிழிலேயே மன்னிக்கவும் - தமிளிலேயே உளறுகிறார். முட்டுக்கொடுப்பதற்கும் ஓர் எல்லை உண்டு.


சமீபத்திய செய்தி