உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நவ.14ம் தேதி தான் பீஹார் மக்களுக்கு உண்மையான தீபாவளி; அமித் ஷா தேர்தல் பிரசாரம்

நவ.14ம் தேதி தான் பீஹார் மக்களுக்கு உண்மையான தீபாவளி; அமித் ஷா தேர்தல் பிரசாரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சிவான்: சட்டசபை தேர்தல் நடக்க உள்ள பீஹாரில், இண்டி கூட்டணியினர் தொகுதிகளுக்காக அடித்துக் கொள்கிறார்கள். நவ.14ம் தேதி தான் பீஹார் மக்களுக்கு உண்மையான தீபாவளி என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.பீஹாரில் பக்சர், சிவான் ஆகிய பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த தேர்தல் பிரசாரக்கூட்டங்களில் அவர் பேசியதாவது; இங்கு காங்கிரஸ், ஆர்ஜேடி மற்றும் அவர்களின் கூட்டணிக் கட்சியினர் தொகுதிகளுக்காக அடித்துக் கொள்கிறார்கள், அங்கு மோதல் நடந்து வருகிறது. மறுபுறம், இங்கே பிரதமர் மோடி இருமுறை பேரணிகளில் பேசி உள்ளார். முதல்வர் நிதிஷ்குமாரும் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். பாஸ்வான், குஷ்வாஹா என ஒவ்வொருவரும் மாநிலத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல ஒன்றிணைந்துள்ளனர். நான் 2 மாதங்களாக பீஹாரில் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன். நான் செல்லும் இடங்களில் மக்கள் கூட்டம் அதிகளவில் கூடுகிறது. 14ம் தேதி (நவ.) மதியம் 1 மணியளிவில் லாலு பிரசாத் மகன்களின் ஆட்டம் முடிவுக்கு வரும். மீண்டும் ஒருமுறை பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், பீஹாரில் தேசிய ஜனநாயக கூ.ட்டணியின் ஆட்சி அமையும். நவ.14ம் தேதி தான் பீஹார் மக்களுக்கு உண்மையான தீபாவளி. 20 ஆண்டுகளாக சரித்திர பதிவேடு குற்றவாளியாக இருந்த சகாபுதினை கண்டு துணிச்சலான சியான் மக்கள் பயப்படவில்லை. சகாபுதின் மகனுக்கு ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத், ரகுநாத்புர் சட்டசபை தொகுதியில் சீட் வழங்கி உள்ளார். இப்போது நிதிஷ்குமார், பிரதமர் மோடியின் ஆட்சியின் கீழ், 100 சகாபுதின்கள் வந்தாலும் உங்களுக்கு எந்தவித தீங்கும் செய்ய முடியாது.இவ்வாறு அமைச்சர் அமித் ஷா பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Easwar Kamal
அக் 25, 2025 00:53

அப்படியே அடுத்த வருஷம் பொங்கலை தமிழகத்தில் வச்சு புடுங்க. எல்லா மாநிலங்களிலும் உங்கள் கை வரிசை காட்ட முடிகிறது ஏன் தமிழகத்தில் காட்ட முடிவது இல்லை.


vivek
அக் 25, 2025 08:12

என்ன செய்வது.... நியூயார்க்கில் இருக்கிறார்கள்


ஜெய்ஹிந்த்புரம்
அக் 25, 2025 00:16

நவம்பர் 14, குழந்தைகள் தினம் என்பதும் அது நமது முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினம் என்பதும் அமீத் சாக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதுக்கு கொஞ்சமாவது படிச்சிருக்கணும். அவருக்கு இதை யாருமே சொல்லலை போல.


Venugopal S
அக் 24, 2025 21:46

அன்று தான் அமித்ஷா பீகார் மக்களுக்கு அல்வா கொடுக்கப் போகிறாரா?


Narayanan Muthu
அக் 24, 2025 20:35

ஒருவேளை ஜவாஹர்லால் நேருவின் பிறந்த நாளை பீகார் மக்களுக்கு உண்மையான தீபாவளி என சொல்லுகிறார் போல.


Narayanan Muthu
அக் 24, 2025 20:28

வோட்டு திருடனுங்களுக்கு வருடம் முழுவதும் தீபாவளிதான்.


vivek
அக் 25, 2025 04:38

ஒட்டு திருட்டு பற்றி சொத்தை கருத்து முத்து கருத்து


Vasan
அக் 24, 2025 18:55

ஓட்டு எண்ணிக்கை நவம்பர் 14 அன்று இருக்கக்கூடாது. அது குழந்தைகளின் மாமா என்று செல்லமாக அழைக்கப்பட்ட பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாள், குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் ஓட்டு எண்ணப்பட்டால், பீகார் வாழ் பெற்றோரின் கவனம் தேர்தல் முடிவுகளின் பால் திரும்பிவிடும், பெற்றோரை நோக்கியிருக்கும் குழந்தைகள் ஏமாற்றம் அடைவர்.


சமீபத்திய செய்தி