உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணியில் பிளவு அமைச்சர் செலுவராயசாமி எதிர்பார்ப்பு

பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணியில் பிளவு அமைச்சர் செலுவராயசாமி எதிர்பார்ப்பு

மாண்டியா; “பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணியில் பிளவு ஏற்படும்,” என, அமைச்சர் செலுவராயசாமி கண்டுபிடித்துள்ளார்.விவசாய அமைச்சர் செலுவராயசாமி, மாண்டியாவில் நேற்று அளித்த பேட்டி:ம.ஜ.த., முன்னாள் அமைச்சர் தம்மண்ணா, மாண்டியாவிற்கு பல்கலைக்கழகம் தேவை இல்லை என்று கூறி உள்ளார். மாண்டியா மாவட்டம் வளர்ச்சி அடைய கூடாது என்பது, ம.ஜ.த., தலைவர்களின் விருப்பம். மக்கள் தங்கள் பின்னால் அலைய வேண்டும் என்று நினைக்கின்றனர். எனக்கு மாண்டியா மக்களின் நலன் முக்கியம்.சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு, ஏழு எம்.எல்.ஏ.,க்களை, மாண்டியா மக்கள் கொடுத்து உள்ளனர். மாண்டியாவில் எங்களை எதிர்த்து யார் போட்டியிட்டாலும், அது பற்றி கவலை இல்லை. எதிரணியின் சின்னம், வேட்பாளரை நாங்கள் பார்ப்பது இல்லை. மக்கள் மீது நம்பிக்கை வைத்து உள்ளோம்.

தைரியம் இல்லையா

பா.ஜ., முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பாவை நம்ப வைத்து, ஏமாற்றி உள்ளனர். ஷிவமொகாவில் சுயேச்சையாக போட்டியிடுவதாக அறிவித்து உள்ளார். அது அவரது முடிவு. பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணியை, கர்நாடக மக்கள் விரும்பவில்லை. அந்த கூட்டணியில் பிளவு ஏற்படும்.முன்னாள் முதல்வர் குமாரசாமி தினமும், என்னை பற்றி குறை கூறுகிறார். அது பற்றி கவலைப்பட மாட்டேன்; ஆசிர்வாதமாக எடுத்துக் கொள்வேன். மாண்டியா தொகுதி வேட்பாளரை அறிவிக்க, குமாரசாமிக்கு தைரியம் இல்லையா?செலுவராயசாமி ம.ஜ.த.,வில் இருந்தபோது, அமைச்சர் பதவிக்காக என் முன் கைகட்டி நின்றார் என்று, குமாரசாமி கூறி உள்ளார். பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து, ஆட்சியில் இருந்தபோது, முதல்வராகும் நோக்கில் ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்கள் முன், குமாரசாமி தான் கைகட்டி நின்றார்.

பா.ஜ.,வுடன் கூட்டணி

அப்போது குமாரசாமியை முதல்வராக்க, தேவகவுடாவுக்கு விருப்பம் இல்லை. குமாரசாமி தன் கட்சி மீதான, நம்பிக்கையை இழந்துவிட்டார். தொண்டர்கள் விருப்பத்திற்கு மாறாக, பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்து உள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை