உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உயர் ஜாதி பேச்சு; அமைச்சருக்கு கண்டனம்

உயர் ஜாதி பேச்சு; அமைச்சருக்கு கண்டனம்

புதுடில்லி : 'பழங்குடியினர் விவகாரத்துறைக்கு உயர் ஜாதியை சேர்ந்தவர் அமைச்சராக நியமிக்கப்பட வேண்டும்' என, மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி பேசியதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டன குரல்கள் எழத்துவங்கி உள்ளன.மலையாள திரைப்பட நடிகரும், பா.ஜ.,வை சேர்ந்த மத்திய பெட்ரோலியத்துறை இணையமைச்சருமான சுரேஷ் கோபி, டில்லியில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசும்போது, ''பழங்குடியினர் விவகாரத்துறைக்கு உயர் ஜாதியை சேர்ந்த ஒருவர் அமைச்சராக நியமிக்கப்பட வேண்டும். ''அதேபோல, உயர் ஜாதியினர் நலன் சார்ந்த துறையில், பழங்குடியினத்தை சேர்ந்தவரை அமைச்சராக நியமிக்க வேண்டும்,'' எனப் பேசினார்.இதற்கு கேரளாவில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கும்படி எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். எதிர்ப்பு வலுக்க துவங்கியுள்ளதை அடுத்து, ''சமூகத்தில் நிலவும் பாகுபாடுகளை அகற்ற வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தான் இந்த கருத்தை தெரிவித்தேன். ''மற்றபடி யாரையும் கெட்டவர்களாகவோ, நல்லவர்களாகவோ சித்தரிக்கும் எண்ணம் இல்லை. என் பேச்சு சரியாக புரிந்து கொள்ளப்படவில்லை எனில் என் கருத்தை திரும்ப பெற்றுக்கொள்கிறேன்,'' என, சுரேஷ் கோபி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Thiyagarajan S
பிப் 04, 2025 20:47

சுரேஷ் கோபி பிரச்சனையை எடுப்பதற்கு முன் பாராளுமன்றத்தில் பொய்யான தகவலை கொடுத்த இங்கிலாந்து குடிமகன் ராகுல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அதற்கு பின் சுரேஷ் கோபி பிரச்சனையை பார்க்கலாம்....


Selvaraj K
பிப் 04, 2025 13:02

நல்ல இருக்கு ஆனால் நடை முறைக்கு ஒத்து வரும் மா இரு சமூக மக்கள் ஏற்று கொள்ளவார்கள ?


srinivasan
பிப் 04, 2025 05:23

அவர் சரியாகத்தான் கூறி இருக்கிறார். பழங்குடி இன மக்களின் கஷ்டங்களை உயர்சாதியினர் புரிந்து கொள்ள வேண்டும் மற்றும் உயர்சாதி என சொல்லப்படுபவர்களின் சிரமங்களை பழங்குடி இனர் புரிந்து கொண்டால் பிரச்சனை வராது என்ற நல்ல நோக்கில் கூறி உள்ளார். எதிர்கட்சிகள் எப்போதும் பிரிவினை செய்து லாபம் சம்பாதிக்கும் கூட்டமாகவே இருக்கிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை