மேலும் செய்திகள்
மோந்தா புயல் எதிரொலி; நாளை 43 ரயில்கள், விமானங்கள் ரத்து
1 hour(s) ago
மாணவர்கள் கவனம்: நாடு முழுவதும் 22 போலி பல்கலைக்கழகங்கள்
2 hour(s) ago | 3
தொழில்நுட்பக் கோளாறு: துபாய் கிளம்பிய விமானம் சென்னை திரும்பியது
6 hour(s) ago | 2
பெங்களூரு : சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்படுவதை தடுக்கவும், விலைமதிப்பற்ற மரங்களை காப்பாற்றவும் தீர்மானித்துள்ள மாநில வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே, 'தேக்கு, சந்தனம், செம்மரம்' மரங்களுக்கு, மூன்று மாதங்களுக்கு புவிசார் குறியீடு பெற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.ஹாசன் மாவட்டம், நந்தகொண்டனஹள்ளி கிராமத்தை ஒட்டி உள்ள வனப்பகுதியில் கடந்தாண்டு பா.ஜ., - எம்.பி., பிரதாப் சிம்ஹாவின் சகோதரர் விக்ரம் சிம்ஹா குத்தகைக்கு எடுத்திருந்தார்.இந்நிலத்தில் இருந்த 126 மரங்களை, வனத்துறை அனுமதியின்றி வெட்டி கடத்தியதாக அவரை கடந்தாண்டு டிசம்பரில் போலீசார் கைது செய்தனர். பின், ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.அதுமட்டுமின்றி, சமீப காலமாக உத்தர கன்னடா மாவட்டம், பேலுார், சக்லேஸ்பூர், இடகுண்டி போன்ற இடங்களில் நுாற்றுக்கணக்கான விலைமதிப்பற்ற மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட வழக்குகள் வெளிச்சத்துக்கு வந்தன.இஞ்சி பயிரிடுவதாக கூறி காடுகள் அழிக்கப்படுவை தவிர்க்க, வனத்துறை அதிகாரிகளுடன் துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராமங்கள், பட்டா நிலங்கள், அரசு நிலங்களை ஒட்டி உள்ள அனைத்து நிலங்களிலும் உள்ள செம்மரம், தேக்கு, சந்தன மரங்களுக்கு, மூன்று மாதங்களுக்குள் புவிசார் குறியீடு செய்து, மண்டலம் வாரியாக பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும்.வனப்பகுதிக்குள் மதிப்புமிக்க மரங்கள் கடத்தப்படுவதை தடுக்க, தனப்படை குழு நியமிக்கப்பட்டு உள்ளன. ஆனால், வனத்துறையினரால் குத்தகைக்கு எடுக்கப்பட்ட அரசு நிலங்கள், எஸ்டேட், பட்டா நிலங்களில் உள்ள விலைமதிப்பு உள்ள மரங்களை, வனப்பகுதிகளின் கீழ் பாதுகாப்பது துறைக்கு சவாலாக உள்ளது.மரத்துக்கு புவிசார் குறியீடு செய்தால், மரங்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், முன் அனுமதி பெறாமல், மரத்தை வெட்ட முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.
1 hour(s) ago
2 hour(s) ago | 3
6 hour(s) ago | 2