உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லோக்சபா தேர்தலில் போட்டியிட அமைச்சர்கள் தயக்கம் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் காங்., மேலிடம் திணறல்

லோக்சபா தேர்தலில் போட்டியிட அமைச்சர்கள் தயக்கம் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் காங்., மேலிடம் திணறல்

பெங்களூரு: லோக்சபா தேர்தலில் போட்டியிட கட்சியின் மூத்த தலைவர்கள், அமைச்சர்கள் தயக்கம் காட்டுகின்றனர். இதனால் பல தொகுதிகளில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் காங்கிரஸ் மேலிடத்துக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.கர்நாடகத்தில் அதிக பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்த காங்கிரஸ், சட்டசபைத் தேர்தலின்போது அளித்த ஐந்து வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளது. இதை காண்பித்து, லோக்சபா தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்ற முயற்சித்து வருகிறது.கட்சியின் மூத்த தலைவர்கள், அமைச்சர்களை களமிறக்க காங்கிரஸ் திட்டமிட்டது. ஆனால், அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

திட்டவட்டம்

l முன்னாள் அமைச்சரான பிரகாஷ் ஹுக்கேரி, 2014 லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றார். ஆனால், 2019ல் நடந்த தேர்தலில் தோல்வி அடைந்தார். தற்போது மீண்டும் அவரை தேர்தலில் களமிறங்க கட்சி தலைமை உத்தரவிட்டு உள்ளது. ஆனால், அவர், 'ரிஸ்க்' எடுக்கமாட்டேன்' என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்l சமூக நலத்துறை அமைச்சர் மஹாதேவப்பா, 'சாம்ராஜ் நகர் தொகுதியில் போட்டியிட மாட்டேன். 10 ஆண்டுகளுக்கு முன் போட்டியிட அனுமதி அளித்திருந்தால், மகிழ்ச்சியாக இருந்திருப்பேன். இப்போது அந்த வாய்ப்பு எனக்கு வேண்டாம். அதேவேளையில், கட்சி யாருக்கு சீட் கொடுத்தாலும், அவரின் வெற்றிக்காக கடுமையாக உழைப்பேன். என் மகன் சுனில் போசின் பெயர், 3 - 4முறை குறிப்பிடப்பட்டு உள்ளது. அவர் போட்டியிடுவது குறித்து கட்சி தொண்டர்கள், எம்.எல்.ஏ.,க்கள் இறுதி முடிவெடுப்பர்' என்றார்.காங்கிரஸ் ஆட்சி அமைத்தபோது, 'லோக்சபா தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில், சித்தராமையா முன்னிலையில், அவருக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டது. தற்போது போட்டியிட மாட்டேன்' என கூறியுள்ளார்.

அமைச்சருக்கு பதில் மகன்

l தாவணகெரேயில் அமைச்சர் மல்லிகார்ஜுன் பெயரை, கட்சி மேலிடம் முன்மொழிந்தது. எவ்வாறாயினும், தனது குடும்ப உறுப்பினர் ஒருவரை களமிறக்க உள்ளதாக, மல்லிகார்ஜுன் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவருக்கு பதிலாக, வேறொருவருக்கு வாய்ப்பளிக்க கட்சி தலைமை முடிவு செய்துள்ளதாகவும்; இத்தொகுதியில் போட்டியிட குருபா சமூகத்தை சேர்ந்த வினய்குமாருக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறதுl ராய்ச்சூரில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகார் நாயக், ராய்ச்சூரில் களமிறங்க வாய்ப்பு உள்ளதுl கோலாரில், உணவு, பொது வினியோக துறை அமைச்சர் முனியப்பா போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. ஆனால் கட்சிக்குள் அவருக்கு எதிர்ப்பு உள்ளது. இதனால் என்ன நடக்க போகிறது என்பதை விரைவில் பார்க்கலாம்.l இவர்கள் மட்டுமின்றி, பெலகாவியில் சதீஷ் ஜார்கிஹோளி, பல்லாரியில் நாகேந்திரா, பீதரில் ஈஸ்வர் கன்ட்ரே ஆகியோரும் போட்டியிட தயங்குவதாக தெரிகிறதுl சித்ரதுர்காவுக்கு முன்னாள் அமைச்சர் ஆஞ்சநேயாவின் பெயர் அடிபடுகிறது. இருப்பினும் மாநில செயல் தலைவர் சந்திரப்பாவுக்கு அத்தொகுதியை விட்டுக்கொடுக்க, ஆஞ்சநேயா தயாராக இருக்கிறாராம்l சதீஷ் ஜார்கிஹோளி உட்பட சில அமைச்சர்கள், தேசிய அரசியலுக்கு மாற தயாராக இல்லை. மாநில அரசில் துணை முதல்வராக பதவியேற்க ஆசைபடுகின்றனர்.இவ்வளவு இருந்தும் பாதிக்கும் மேற்பட்ட தொகுதிகளில் வேட்பாளர்கள் தேர்வு முடிந்துவிட்டதாக காங்கிரஸ் தலைவர்கள் கூறிக் கொள்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்