உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பி.எஸ்.எப்., வீரர்களுக்கு நவீன கேமரா வழங்கல்

பி.எஸ்.எப்., வீரர்களுக்கு நவீன கேமரா வழங்கல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக நுழைவதை கண்காணிக்கவும், தடுக்கவும், பி.எஸ்.எப்., எனப்படும் எல்லைப் பாதுகாப்பு படையினருக்கு உடலில் பொருத்தக் கூடிய நவீன கேமரா உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. நம் அண்டை நாடான வங்கதேசத்தை ஒட்டி அமைந்துள்ள சர்வதேச எல்லையில், எல்லை பாதுகாப்பு படை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது. எல்லையில் பாதுகாப்பை அதிகரிக்கவும், சட்டவிரோத ஊடுருவலைத் தடுக்க நவீன உபகரணங்களின் தேவை குறித்தும், எல்லை பாதுகாப்பு படையினர் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்தனர். இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதை அடுத்து, எல்லை பாதுகாப்பு படையினர் உடலில் அணியக்கூடிய 5,000 கேமராக்கள் மற்றும் பயோ மெட்ரிக் உபகரணங்களை வழங்க முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டில் கடந்த 15ம் தேதி வரை, எல்லைப் பகுதியில் இருந்து நம் நாட்டுக்குள் ஊடுருவிய 1,372 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை