உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நவீன கால திப்பு சுல்தான்: ஜமீருக்கு அசோக் பட்டம்

நவீன கால திப்பு சுல்தான்: ஜமீருக்கு அசோக் பட்டம்

பெங்களூரு: ''வக்பு வாரியம் மூலம் நிலத்தை அபகரிக்க முயற்சி செய்யும் அமைச்சர் ஜமீர் அகமது கான், நவீன கால திப்பு சுல்தான்,'' என, எதிர்க்கட்சித் தலைவர் அசோக் விமர்சித்துள்ளார்.பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:காங்கிரஸ் அரசு, வக்பு வாரியத்தால் மாநிலத்தில் உள்ள நிலங்களை அபகரிக்க முயற்சி செய்கிறது. ஏழை விவசாயிகளின் நிலத்தை அபகரிக்க, அரசு அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது.விஜயபுரா மாவட்டத்தில் 15,000 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த வக்பு வாரியம் திட்டமிட்டுள்ளது. இதற்காக 139 விவசாயிகளுக்கு வருவாய் துறை மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது அரசே திட்டமிட்டு நடத்தும் நில ஜிகாத்.திப்பு சுல்தான், அவுரங்கசீப் போன்றோர் ஹிந்துக்களின் நிலம், வேலை வாய்ப்புகள், உயிரை பறித்தனர். இப்போது அமைச்சர் ஜமீர் அகமது கான், அந்த வேலையை செய்கிறார். அவர் நவீன காலத்து திப்பு சுல்தான்.'முடா' நிலத்தை முதல்வர் சித்தராமையாவும், தொழில்துறைக்கு சொந்தமான நிலத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயும் அபகரித்துள்ளனர். வக்பு சட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்தத்திற்கு, கர்நாடக வக்பு வாரியம் எதிர்ப்பு தெரிவிக்கிறது. மத்திய அரசுக்கு நாங்கள் தகவல் கொடுக்க மாட்டோம் என அமைச்சர் ஜமீர் அகமது கான் கூறுகிறார்.காங்., அரசு மீது விவசாயிகள் நம்பிக்கை இழந்துவிட்டனர். அரசு மீது பயம் வந்துள்ளது. அரிசி கொடுப்பவர்களின் சாபத்திற்கு ஆளாகி விடாதீர்கள். காங்கிரசின் திருப்திபடுத்தும் அரசியலால் ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி இல்லை. ஜெய் ஸ்ரீ ராம் என சொல்ல விடுவது இல்லை.பாகிஸ்தானுக்கு ஆதரவாக இங்கிருந்து கோஷம் எழுப்புகின்றனர். லவ் ஜிகாத்தால் ஹிந்து பெண்கள் இறக்கின்றனர். இதுபற்றி முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் விளக்கம் அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை