உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹாக்கி அணிக்கு மோடி, அமித்ஷா, முர்மு வாழ்த்து

ஹாக்கி அணிக்கு மோடி, அமித்ஷா, முர்மு வாழ்த்து

புதுடில்லி: ஒலிம்பிக்ஹாக்கியில் இந்தியா வெண்கலம் வென்றதற்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜனாதிபதி முர்மு ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.இன்று நடந்த ஆடவர் ஹாக்கியில் இந்தியா, ஸ்பெயின் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெண்கல பதக்கத்தை வென்றது. இதை தொடர்ந்து வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, ஜனாதிபதி முர்மு ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

மோடி

மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் ஹாக்கியில் ஆடவர் அணி பிரகாசமாய் ஒளிர்கிறது. உங்களின் வெற்றியை எதிர்வரும் தலைமுறைகள் கொண்டாடும். ஹாக்கியுடன் இந்தியர்கள் அனைவருக்கும் உணர்வுபூர்வமான தொடர்பு உள்ளது என்றார்.

அமித்ஷா

மத்திய அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், வீரர்களின் ஆற்றல் மிகுந்த செயல் திறன் விளையாட்டின் மீது புது ஆர்வத்தை தூண்டும் என்றார்.

ஜனாதிபதி முர்மு

ஜனாதிபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் இந்திய ஹாக்கி அணியின் நிலைத்தன்மை, திறமை,ஒற்றுமை இளைஞர்களுக்கு ஊக்குவிக்கும் வகையில் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

ராகுல் வாழ்த்து

ராகுல் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இந்திய ஹாக்கி அணியின் அற்புதமான போட்டி. நீங்கள் அனைவரும் வெண்கலப்பதக்கம் வென்றதைக் கண்டு பெருமைப்படுகிறேன். ஸ்ரீஜேஷூக்கு நன்றி. உங்களின் சிறப்பான, இடைவிடாத அர்ப்பணிப்பு எங்களை ஊக்கப்படுத்துகிறது என தெரிவித்துள்ளார்.மேலும் பா.ஜ., செயல் தலைவர் நட்டா மற்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் இந்திய ஹாக்கி அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

அரசு
ஆக 08, 2024 23:06

முதலில் குடியரசுத் தலைவர் பெயர் தான் வர வேண்டும். அதற்கு பின்னர் தான் உங்கள் மோடி மற்றும் அமித் ஷா பெயர்கள் வர வேண்டும் என்று உங்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை


Srinivasan K
ஆக 09, 2024 12:14

why are you bothered is that how Indira Gandhi, Rajiv Gandhi ruled people are jealous of modi. they will be for their life


அப்பாவி
ஆக 08, 2024 20:13

நமது வீரர்களை டென்சன் இல்லாma ஆட வுட்டால் தானே ஜெயிப்பாங்க. கிளம்பறதுக்கு முன்னாடி வாழ்த்து, ஊக்கம், ஊட்டச்சத்துன்னு கொம்பு சீவி உட்டா அவிங்க ஆடறதை விட ஜெயிக்கணும்கற கவலையிலேயே கோட்டை உட்டுருவாங்க.


Yaro Oruvan
ஆக 08, 2024 20:30

உப்பி பரம்பர உப்பி... மாம்ஸ் இந்தியா நம்ம நாடு.. மதம் செகண்டரி ..


Srinivasan K
ஆக 09, 2024 12:16

no one wished before they reached semi finals what our hockey team achieved is thus far better than earlier olymbic feats


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி