உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டிரம்பை எதிர்த்து நிற்க முடியாத மோடி: ராகுல் தாக்கு

டிரம்பை எதிர்த்து நிற்க முடியாத மோடி: ராகுல் தாக்கு

புதுடில்லி: ''பிரதமர் மோடி, அதானி குழுமம் மற்றும் ரஷ்ய எண்ணெய் ஒப்பந்தங்களுக்கு இடையிலான நிதி தொடர்புகள் குறித்தான அமெரிக்காவின் விசாரணை காரணமாக, அதிபர் டிரம்ப் தொடர்ந்து மிரட்டல் விடுத்தாலும் பிரதமர் மோடியால் அவரை எதிர்த்து நிற்க முடியாது'' என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் விமர்சித்துள்ளார்.இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர் தன்னுடைய தலையீட்டால் தான் நிறுத்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து பேசி வருகிறார். இதற்கு பிரதமர் மோடி, இந்திய வெளியுறுவுத்துறை அமைச்சர் உள்ளிட்ட பல அமைச்சர்களும் மறுப்பு தெரிவித்த நிலையில், டிரம்பை கண்டித்து பார்லி.,யில் மோடி பேச வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் வலியுறுத்தியிருந்தார். ஆனால், பிரதமர் மோடி, டிரம்பின் பெயரை குறிப்பிடாமல், எந்தவொரு உலகத் தலைவரும் இந்தியாவிடம் கோரிக்கை விடுக்கவில்லை என பதிலடி கொடுத்தார்.டிரம்பின் பெயரை நேரடியாக உச்சரிக்காமல் பிரதமர் மோடி பேசியதாக காங்கிரஸ் தலைவர்கள் விமர்சித்து வந்தனர். இந்த நிலையில், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ச்சியாக அதிகளவில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வருவதால் அந்நாட்டின் பொருட்களுக்கு ஏற்கனவே விதித்த, 25 சதவீத வரியை, அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் உயர்த்தப் போகிறேன்,'' என எச்சரித்துள்ளார் டிரம்ப். 25 சதவீத வரி விதிப்பை பிரதமர் மோடியோ, வெளியுறவு அமைச்சரோ இதுவரை கண்டனம் தெரிவிக்காத நிலையில், அதனை மேலும் உயர்த்தப்போவதாகவும் எச்சரித்துள்ள டிரம்பை கண்டிக்காததை ராகுல் கடுமையாக விமர்சித்துள்ளார்.இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிட்ட ராகுலின் பதிவு:

மோடியின் கைகள்

தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள். அதிபர் டிரம்ப் தொடர்ந்து மிரட்டல் விடுத்தாலும் பிரதமர் மோடியால் அவரை எதிர்த்து நிற்க முடியாது. அதற்குக் காரணம், அதானி மீதான அமெரிக்காவின் விசாரணைதான். மோடி, அதானி குழுமம் மற்றும் ரஷ்ய எண்ணெய் ஒப்பந்தங்களுக்கு இடையிலான நிதி தொடர்புகளை அம்பலப்படுத்தும் அச்சுறுத்தலால் மோடியால் டிரம்பை எதிர்க்க முடியவில்லை.மோடியின் கைகள் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 115 )

Ramesh
செப் 04, 2025 10:53

நீங்கள் சொல்வதெல்லாம் சரி தான். என்னை பொறுத்த வரையில் தவறு மோடி அரசாங்கத்தின் மீது தான் உள்ளது காரணம் இந்த கேடுகெட்டவர எல்லாம் ஆரம்பத்திலேயே உள்ள தூக்கி போடு குமுறி இருக்கணும் அதாவது மன்னிப்பு கொடுத்து இருக்க கூடாது. இவர் இஷ்டத்துக்கும் ஆதாரம் இல்லாமல் தொடர்ச்சியாக கண்டபடி பேசுகிறார், ஆதாரத்தை கேட்டால் ஜகா வாங்குவ இவற்றையெல்லாம் கைகட்டி வேடிக்கை பார்ப்பது மிக தவறு. ஒருமுறை பாரபட்சம் பார்க்காமல் தண்டித்தால் இவருக்கு புத்தி வரும். இவரயெல்லாம் தொடர்ச்சியாக மன்னிப்பது என்ன மாதிரியான ஜனநாயகம் என்று தெரியவில்லை.


Gurumurthy Kalyanaraman
செப் 01, 2025 11:23

டிரம்ப் என்கிற மன வளர்ச்சி குன்றிய.....


Natarajan Ramanathan
ஆக 22, 2025 22:12

இவரால் மோடியை எதிர்த்தே நிற்க முடியவில்லை.


sankaranarayanan
ஆக 21, 2025 18:55

பிரதமர் மோடி, இந்திய வெளியுறுவுத்துறை அமைச்சர் உள்ளிட்ட பல அமைச்சர்களும் மறுப்பு தெரிவித்த நிலையில், டிரம்பை கண்டித்து பார்லி.,யில் மோடி பேச வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் வலியுறுத்தியிருந்தார். இவர் ஒரு சமயம் சீனாவிற்கு ஆதரவாக பேசுகிறார் இன்னொரு சமயம் அமெரிக்க அதிபர் டிரம்புக்கும் ஆதரவாக பேசுகிறார் இவருக்கு சித்த சுவாதீனம் சரியாக இல்லைபோலும் உடனே இவரை மனநலமருத்துவமனைக்கு அனுப்பி சரி செய்ய வேண்டும் இல்லையேல் காங்கிரசு கட்சிக்கே மன நிலை மாறிவிடும்


Anand
ஆக 20, 2025 11:13

இப்படி தூக்கிவைத்து பேசமாட்டான்....


M. PALANIAPPAN, KERALA
ஆக 14, 2025 17:32

இவன் எல்லாம் ஒரு மனுஷனா? என்ன பேசுகிறோம் என்று தெரிந்துதான் பேசுகிறானா? இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இப்படித்தான் பேசவேண்டுமா? வாய் இருக்கு என்பதற்க்காக எதை வேண்டும் என்றாலும் பேசலாமா? என்ன இப்பொழுது மோடிஜிக்கும் டிரம்ப்க்கும் இடையில் மன வேறுபாடு வரவேண்டும் , அதில் இந்த கிறுக்கன் மகிழ்ச்சி அடைய வேண்டும். நாடு எக்கேடு கெட்டால் இவனுக்கு என்ன? அமெரிக்கா போன்ற நாடுகளுடன் கொஞ்சம் முன் ஜாக்கிரதையுடன்தான் கையாள வேண்டும், அது எப்படி என்பது மோடிஜிக்கு தெரியும், எரிகின்ற தீயில் இந்த கிறுக்கன் எண்ணெய் ஊற்றாமல் இருந்தால் போதும். பாவம் மோடிஜி எல்லா திசைகளிலும் இருந்து வரும் எதிர்ப்பை மிகவும் கவனமாக, நல்ல திறமையாக கை காரியம் செய்து வருகிறார். உதவி செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை, அவரை சிரமப்படுத்தாமல் இருந்தாலே போதும். மோடிஜியின் கையில் நாடு பாதுகாப்பாக இருக்கும் ஜெய்ஹிந்த், பாரதம் வாழ்க


Sundar Pas
ஆக 12, 2025 10:02

ட்ரம்பை எதிர்த்து மோடி எப்படி நிற்கமுடியும்? இருவருமே வேறுவேறு நாடுகள், நீ வேண்ணா அடுத்த அமெரிக்க தேர்தலில் எதிர்த்து நில்லு.


Shivakumar
ஆக 11, 2025 05:29

இந்நேரம் காங்கிரெஸ்ஸாக இருந்திருந்தால் ட்ரம்மிடம் தலைகுப்புற விழுந்து இருப்பார்கள். மோடி மாதிரி எதிர்த்து இருந்திருக்க மாட்டார்கள். மக்களுக்கு தெரியும் காங்கிரஸ் எப்படி என்று. நீங்க சொல்லி தெரியவேண்டியது இல்லை. இது புதிய இந்தியா.


K V Ramadoss
ஆக 08, 2025 11:45

இவர் என்னதான் நினைத்துக்கொண்டு மோடி நேரடியாக டிரம்பை கண்டித்து பேசவேண்டும் என்கிறார்? இதுவரை மோடி சொன்னது இவருக்கு புரியவில்லையா? வேண்டுமென்றே மோடிக்கும் டிரம்புக்கும் வெளிப்படையான சண்டை வர இவர் விரும்புகிறார் போலும். இது ஏற்பட்டால் இவர் அதில் குளிர் காய்வார். இந்தியாவின் நிலை எப்படிப்போனால் இவருக்கு என்ன? மோடியை உசுப்பி விட பார்க்கிறார். எதிற்மறை விளைவுகள் ஏற்பட்டால் இவருக்கு சந்தோசம். தான் எப்படியாவது அரசை பிடிக்கவேண்டும் என்று பகல் கனவு காண்கிறார். இவர்தான் இந்நாட்டிற்கு முதல் துரோகி.


Ramalingam Shanmugam
ஆக 08, 2025 10:58

தாய்லாந்து ... பேசக்கூடாது


Ramalingam Shanmugam
செப் 02, 2025 11:56

மெக்ஸிகோ விடம் கேள்


சமீபத்திய செய்தி