உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சரத் பவாரை தாங்கி பிடித்த மோடி: டில்லி விழாவில் நெகிழ்ச்சி

சரத் பவாரை தாங்கி பிடித்த மோடி: டில்லி விழாவில் நெகிழ்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் இன்று நடைபெற்ற மராட்டிய மொழி சம்மேளன விழாவில் பங்கேற்க வந்த சரத்பவாருக்கு பிரதமர் மோடி உதவிய செயலால் விழா அரங்கத்தில் பலத்த கரகோஷம் எழுந்தது.அகில பாரத மராட்டிய சம்மேளனத்தின் 98வது துவக்க விழா இன்று (21.02.2025) டில்லியில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக பிரதமர் மோடி கலந்து கொண்டார். விழா வரவேற்பு குழு தலைவராக தேசியவாத காங்., மூத்த தலைவர் சரத்பவார் பங்கேற்றார்.மரபு படி விழாவை விளக்கேற்றித் தொடங்கிய மோடி, சரத் பவாரை முன்னோக்கி வந்து மரியாதை செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.பின்னர், பவார் தனது உரையை முடித்துவிட்டு மோடிக்கு அடுத்த இருக்கையில் அமர வந்தார். அப்போது சரத்பவாரை கை தாங்கலாக பிடித்து இருக்கையில் அமர உதவினார், மேலும் மேடையில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அவருக்கு கிளாஸில் தண்ணீர் ஊற்றி கொடுத்தார். பிரதமரின் இந்த செயலை கவனித்த பார்வையாளர்கள் பலத்த கரகோஷம் எழுப்பினர். இதன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.முன்னதாக மோடி தனது உரையைத் தொடங்கியதும், சரத் பவார்ஜியின் அழைப்பின் பேரில் விழாவை துவக்கி வைக்க ஒப்புக்கொண்டேன். இந்த பெருமைமிக்க பாரம்பரியத்தில் சேர எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது என்றார்.பின்னர் மோடியும், சரத்பவாரும் விழா முடியும் வரை சுவரஸ்மாக பேசிக்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

venugopal s
பிப் 22, 2025 17:30

அங்கே மஹாராஷ்டிரா முதல்வர் ஃபட்னவிஸை ஷிண்டே மிரட்டியதற்கும் இங்கே பிரதமர் மோடி அவர்கள் சரத்பவாரை தாங்கிப் பிடித்ததற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்துக் கொள்கிறோம்!


அப்பாவி
பிப் 22, 2025 10:33

நடக்க முடியாதவனெல்லாம் பதவி வெறி புடிச்சி அலையறான். அங்கே இங்கே போய் வழுக்கி விழுந்து தடுமாறரான். தேவையா?


மோடி தாசன்
பிப் 22, 2025 10:12

அனைவரையும் மதிக்கவேண்டும், அதிலும் நம்மை விட மூத்தவர்களை மிகுந்த மரியாதையுடன் நடத்த வேண்டும் என்ற பன்பில் வளர்ந்தவர் தலைவர் மோடி. இது எல்லாம் உபிஸ்கு புரியாது.


J.V. Iyer
பிப் 22, 2025 04:40

விறகு குச்சிகள் கட்டாக இருக்கும்போது உடைக்கமுடியாது. ஒவ்வொன்றாகத்தான் பிரித்துதான் உடைக்கவேண்டும் மோடிஜிக்கு இது தெரியாதா.


MARUTHU PANDIAR
பிப் 21, 2025 22:06

அதெல்லாம் சரி . இந்த ஆளு தன் மகளை மகாராஷ்டிராவின் முதல்வராக்காமல் கண்ணை மூட மாட்டாரு . இது மொழி விழா. அது அரசியல்


R.Gunasekharan
பிப் 21, 2025 22:04

ஜெய் ஹிந்துஸ்தான் ......


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 21, 2025 21:58

கட்டிங் வாங்கிக்கொண்டு விட்டுவிடும் பாஜக .......


Nava
பிப் 21, 2025 22:52

கான்கிரஸ் காரன் செய்த பணியை மக்களுக்கு நினைவு கூர்ந்துள்ளர் என்று நினைக்கிறேன்


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 21, 2025 21:57

மராட்டிய கட்டுமரத்தின் உடல் முழுவதும் விஷம் ....... குடும்பமே விஷக் குடும்பம் ....


Yes your honor
பிப் 21, 2025 22:13

மோடி அவர்கள் மயில் போல. மயிலுக்கு உணவு ஊட்டும் விடியோகூட பார்த்து இருப்பீர்களே. திராவிடப் பாம்போ, மராட்டிய விஷமோ இவரை ஒன்றும் செய்யாது. மோடிஜி ஒரு பாறை. முட்டி மோதினால் மோதுபவர் மண்டைதான் உடையும். புரிந்துகொண்டால் அனைவருக்கும் நல்லது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை